பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 இயற்கை வளங்கள்‌ (கடலியல்‌)

428 இயற்கை வளங்கள் (கடலியல்) இயற்கை வளங்கள் (கடலியல்) ஒரு நாட்டின் உயர்வுக்கு அந்நாட்டில் காணப்படும் இயற்கை வளம் (natural resources ) காரணமாக அமையும். முன்னேறிய நாடுகள் பலவற்றில் மனித உழைப்பு. உயர்வுக்குக் காரணமாயிருந்தாலும் இயற்கை வளங்களும், சுற்றுப்புறச் சூழல்களும் ஒத்து அமைவதால் அவற்றால் வெகுவாக முன்னேற இயலு கிறது. இயற்கைவளம் என்பதை நீர்வளம், நில வளம் என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுள், நீர்வளமே முதன்மையானது. நீர்வளம், நீர்வளம் என்பது குளம், குட்டை, ஆறு, ஏரி,போன்ற நன்னீர் நிலைகளையும், துறை முகம் வளைகுடாக்கள், கடல், உவர்நீர்ப் பரப்புகள் (estuaries) கழிமுகத்திட்டு (deltas) போன்ற உப்பு நீர் நிலைகளையும் கொண்டுள்ளன. வேளாண்மை, போக்குவரத்து தேவைகள். பொருள் களை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்லவும், கப்பல் படகு மிதவை போன்றவற்றின் போக்குவரத்திற்கும், போன்றவை ஆறு துறைமுகம் வளைகுடாக்கள் மிகுதியாகப் பயன்படுகின்றன. ஆற்றுச்சமவெளி வேளாண்மைக்கு ஏற்ற இடமாகும். பசுமைப்புரட் சிக்கு உறுதுணையாக இருப்பவை நதிகளாகும். கால்நடைகளும், விலங்குகளும், நீரருந்திப் புல்மேய ஆற்றுச் சமவெளி ஏற்ற இடமாகக் காணப் படுகிறது. நீர்க் கலன்களாகிய கப்பல், படகு. வள்ளம் போன்றவை தங்கவும், பொருள்களை ஏற்றி இறக்கிச் செல்லவும் துறைமுகங்கள் பயன்படு கின்றன. மீனில் நன்னீர் மீன் வளம். நீர் நிலைகளில் மட்டுமே வாழும் மீன் என்றுமே அழிக்க இயலாத இயற்கை வளமாகும். புரதச்சத்து மிகுதியாகக் காணப்படுவதால் அது மிகச் சிறந்த உணவாகப் பயன்படுகிறது. குளம், குட்டை, ஆறு ஏரி போன்ற வற்றில் காணப்படுகின்ற மீன் வகைகள் உள்நாட்டு மக்களுக்கு மிகச் சிறந்த உணவாகின்ற றன. நன்னீர் மீன் வகையில் ரோகு (rohu) கட்லா (cattla) Nisan (mirgala), GauraÖNT CHIL._ (silver carps) நன்னீர்க் கெளுத்தி (fresh water cat fish) விரால் மீன், திலேபியா (tilapia) போன்றவை குறிப் பிடத்தக்கவையாகும். நன்னீரில் வாழும் இரால் வகைகளும் மிகச் சிறந்த உண ணவாகும். கடல் மீன் வளம். கடற்கரை மக்களுக்கு மீன் பிடித்தலே முதன்மைத் தொழில், மீனில் புரதச்சத்து மிகுதியாக இருப்பதோடு விலையும் மலிவானது. ஏற்றுமதி செய்யப்பட்டு அந்நியச் செலாவணியும் பெறப்படுகிறது. காலா மீன், ரத்தச்சூறை, கடல்கெண்டை, மடவை, சூடை, கலவை கானாங்கெளுத்தி, இரால், மட்டி, ஆளி, சிவிங்கி, நண்டு போன்றவையும், பம்பாய் வாத்து, நெத்திலி, வாளைமீன், கொடுவா வஞ்சீரம், பால்கெண்டை, சேனா, விலாங்குமீன், சாளை, பாறை, சுறா போன்றவையும் கடல் மீன் களில் மிகவும் முக்கியமானவை. உணவு வேளாண்மை அமைப்பின் அறிக்கையின் படி உலகில் ஏறத்தாழ 74.8 மில்லியன் மெட்ரிக் டன் டன் மீன் வகைகளும், 3.1 மில்லியன் மெட்ரிக் கடல் பாசி உணவு வகைகளும் அறுவடை செய்யப் படுகின்றன. உலகச் சந்தையில் சுமார் 1/3 பங்கு கடல் உணவுப் பொருள்களே ஆகும். மீன் உற்பத்தி யில் இந்தியா எட்டாவது இடத்தை வகிக்கிறது. ஜப்பான், சோவியத் நாடு, சீனா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சிலி, பெரு, நார்வே முதலியன உற்பத்தியில் முறையே முதல் ஏழு இடங்களையும் வகிக்கின்றன. இந்தோனேசியாவும், டென்மார்க்கும் முறையே 9, 10 ஆகிய இடங்களை வகிக்கின்றன. பி மீன் இந்தியாவில் சுமார் 2.4 மில்லியன் டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. கடலி இங்கிலாந்தில் 90% லிருந்தும், 10% நன்னீர் நிலைகளிலிருந்தும மீன்கள் பெறப்படுகின்றன. இந்தியாவில், தமிழ் நாடு கடல் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதில் மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. சுறாமீன், மொத்த மீன் உற்பத்தியில் 70% மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகிறது. மீதமுள்ள 30% மீன் களிலிருந்து மீன் எண்ணெய், கால்நடைத் தீவனம், உரம்,ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. சுறாமீனின் கல்லீரலிருந்தும் காட் மீனிலிருந்தும் எடுக்கப்படும் எண்ணெயில் வைட்டமின் A மிகுதி யாகக் காணப்படுகிறது. எடுக்கப்படும் எண்ணெய் மீன் இவற்றிலிருந்து வர்ணங்கள், மெருகுகள், சோப்புகள் முதலியவை செய்யப்பயன்படும். திமிங்கலத்திலிருந்து கிடைக் கும் அம்பர் கிரிஸ் (ambergris) எனும் பொருள் நறு மணப் பொருள்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படு கிறது. கடல் சாளை வளங்களைப் பொறுத்தவரை பசிபிக் கடலில் மீன் வளம் (37.8 மில்லியன் டன்) மிகுதி யாகக் காணப்படுகிறது. அடுத்து அட்லாண்டிக் கடலும், இந்தியப் பெருங்கடலும் அதிக வளங் களைக் கொண்டுள்ளன. அண்ட்டார்ட்டிக்காவிலும், ஆழ்கடல்களிலும் புரதச் சத்து நிறைந்த கிரில் (krills) எனும் உயிரினங்கள் பெருமளவு காணப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கடலில் மருந்து வளம். கடலில் காணப்படும் பச்சை, நீலப் பச்சைப் பாசிகள் உணவாகவும், மருந்