இயற்கை வளங்கள் (கடலியல்) 429
தாகவும் பயன்படுகின்றன. மருந்து வகைகளான பெனிசிலின் ஸ்டெரொப்டோமைசீன் போன்றவை கடல் வாழ் காளான்களிலிருந்தும், கடல் நுண்ணு யிரிகளிலிருந்தும் நுண் பாசிகளிலிருந்தும் தயாரிக் கப்படுகின்றன. அயோடின், கடலில் வாழும் கெல்ப் எனும் பாசிப்படுகையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சில கடல் வாழ் நுண்ணுயிரிகளிலிருந்து எதிர் நச்சுக் கொல்லிகளும் (antitoxins) தயாரிக்கப்படுகின்றன. த கடல் நீரில் தாவர, விலங்கின வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள். அமினோ அமிலங்கள் தாது உப்புகள் வைட்டமின்கள் போன் றவை மிகக் குறைந்த அளவில் உள்ளன. கடல் மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் புரொட்டமைன் எனும் சத்தை இன்சுலினுடன் கலந்து நீரிழிவு நோயாளிக் குச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தலாம். புரதச் சர்காசம் எனும் பாசி வகை முன் கழுத்துக் கழலை என்னும் நோயை நீக்கப் பயன்படு கிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கும், வெப்பநோய் களுக்கும் ஜெலிடியம் என்னும் பாசி பயன்படுகிறது. ஐரிஷ் மாஸ் என்னும் பாசி, வயிற்றுப்போக்கு சிறு நீர்ப்பையில் ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. அல்ஜினேட்ஸ் (algi- nates) அகார் போன்றவை கடல் பாசிகளிலிருந்து தயாரிக்கப்படும் பயனுள்ள மருந்து வகையாகும். பலவகைக் கடல் பாசிகள், மீன்கள் போன்ற வற்றை உணவாகப் பயன்படுத்த இயலாவிடினும் ரமாகப் பயன்படுத்தலாம். கெட்டுப்போன மீன்கள் (spoiledfish), புரதச்சத்தும், எண்ணெயும் நீக்கப்பட்ட மீன்துகள், ஏறக்குறைய அனைத்துப் பாசி வகை களும் மிகுதியான நைட்ரஜன், பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால் உரமாகப் பயன்படுத்தலாம். கடலில் தாது வளம். கடலுக்கடியில் பெட்ரோல், எரிவாயு, நிலக்கரி, இரும்பு, செம்பு போன்ற தாதுக் கள் இருப்பவை கண்டறியப்பட்டுள்ளன. கடல்நீரில் சாதாரண உப்பு, மெக்னீசிய உப்பு, அயோடின், புரோமின், கால்சியம் கார்பனேட் போன்றவை மிகுந்து உள்ளன. ஆழ்கடற்பரப்பில் மாங்கனீஸ் முண்டுகளும் காணப்படுகின்றன. இம்மாங்கனீஸ் முண்டுகளில் மாங்கனீஸ் உலோகம் மிகுந்தும், பொட் டாசியம், கால்சியம், மெக்னீசியம் செம்பு, இரும்பு, தங்கம், வெள்ளி போன்றவை குறைந்தும் காணப்படு கின்றன. இம்மாங்கனீஸ் முண்டுகளைத் தகுந்த அளவில் பயன்படுத்தினால் நிலத்தில் மாங்கனீசு சுரங்கங்கள் தோண்டவேண்டிய தேவையேற்படாது. கடலில் திட்டுத்திட்டாகக் காணப்படும் முருகு பாறைகள் ஒருவகைக் குழியுடலிகளினால் (coelen- trates) உருவாக்கப்படுகின்றன. இத்திட்டுகளிலிருந்து மெண்ட் தயாரிப்புக்கு வேண்டிய கால்சியம் கார்பனேட் பெருமளவில் வெட்டி எடுக்கப்படுகிறது. இயற்கை வளங்கள் (கடலியல்) 429 முத்துச்சிப்பி கடலில் காணப்படும் ஒருவகை ஆளியாகும். இவ்வகை ஆளியின் உடம்பினுள் வேற் றுப்பொருள் நுழைந்தால், அதைச்சுற்றிச் சுண்ணாம் புப் பொருள் சுரந்து முத்தாக வளரும். இது பெரு மதிப்பு உடையது. தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் முத்துக் குளிக்கும் தொழில் நடைபெறுகின்றது. இவ் வகை இயற்கை முத்துக்கள் அந்நியச் செலாவணி யைத் தருகின்றன. தற்பொழுது செயற்கை முறையில் முத்துக்களை வளர்க்கும் தொழிலும் உருவாகி யுள்ளது. வாகப் கடலில் தாவர உணவு வளம். கடலில் காணப் படும் பாசி வகைகளில் பெரும்பாலானவை உண சீனா பயன்படுகின்றன. முற்காலத்தில் ஜப்பான் போன்ற நாடுகளில் பாசி வகை மிகுதி யான அளவில் உணவாகப் பயன்படுத்தப்பட்டது. முற்கால ஜப்பானியர்கள் போர்பைரா (porphyra) என்ற பாசியை முக்கிய உணவாகப் பயன்படுத்தி வந்தனர். அல்வா, எண்டிரோமார்பா, மோனோஸ்ட் ரோமா, அலேரியா, லாமினேரியா, பியுகஸ், போர் பைரா, துருவிலியா, நெர்கோசிஸ்டிஸ், கான்ட்ரஸ், கைகார்டினா, கிரேசிவேரியா சர்காசம், இகிலோ னியா, ஜெலிடியம் போன்ற பாசி வகைகள் இன்னும் பல நாடுகளில் உயர்ந்த வகை உணவாகப் பயன்படு கின்றன. ஆற்றல் வளம். கடலிலிருந்தே பெருமளவு நீர் ஆவியாகி மழை தரும் மேகமாக மாறுகிறது. கடலுக்கே உரிய தனித்தன்மைகளாக அலைகள், ஓதங்களைக் கூறலாம். கடலின் இவ்வகைத் தன்மை களால் மிகுந்த ஆற்றல் வெளிப்படுகிறது. இவ்வாற்ற லால் டைனமோவை இயக்க வைத்து மின்சாரம் தயாரிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. நன்னீர் பெரிதும் கிடைக்காத நாடுகளில் காய்ச்சி வடித்தல் மூலம் உப்புநீரிலிருந்து நன்னீர் பெறப்படுகிறது. நிலவளம். பூமியின் நிலப்பரப்பில் சுமார் 10% தான் வேளாண்மைக்கு ஏற்றது. ஏனைய 20% நன்னீர்க் காடுகளாலும், எஞ்சியுள்ள 70% கடலாலும் சூழப்பட்டுள்ளன. இக்குறைந்த அளவு நிலப்பரப் பில் குறிப்பிடும் அளவு இயற்கை வளங்கள் காடு களிலும் காணப்படுகின்றன. காடுகள் புதுப்பிக்கப் படக்கூடிய இயற்கை வளமாகும். ஆனால் தாது வளங்களோ எடுக்க எடுக்கக் குறைந்து இறுதியில் இல்லாமல் போகக் கூடியவை. தாது வளங்களைப் போலன்றிக் காட்டு வளமும், மீன்வளமும் புதுப்பிக் கப்படக் கூடியவை. பொதுவாகக் காடுகள் வேளாண்மைக்குத் தேவை யான நீரைத் தேக்கி வைத்து, மண் அரிப்பைத் தடுத்து, ஆறுகளை உற்பத்தி செய்து சமவெளிப் பகுதிகளைச் செழிப்பாக்குகின்றன. காடுகளும், காடு சார்ந்த விலங்கினங்களின் சரணாலயங்களும்