இயற்கை வளங்கள் 431
அணுக்களைப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். கதிர் வீச்சு அணுக்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுப்புறச் சூழ்நிலை மாசுபடுதலைத் தடுக்கப் பல்வேறு முறைகளைக் கையாளுகின்றனர். அ. ஆல்பர்ட் ராஜரெத்தினம் இயற்கை வளங்கள் . நீர்,நிலம். காடுகள், வனவிலங்குகள், கனிமங்கள் எரிபொருள்கள் போன்றவை இயற்கை வளங்கள் ஆகும். இவை, புதுப்பிக்கப்பட இயலும் வளங்கள் அல்லது அழியா வளங்கள். புதுப்பிக்க இயலாத அழியும் வளங்கள் என இருவகைப்படும். தாவர, விலங்குகள் ஆகிய. உயிர்க் காரணிகளும் (biotic factors), நிலம், நீர் போன்ற இயற் காரணிகளும் முன் வகையைச் சாரும். கனிமங்களும், எரிபொருள் களும் பின் வகையைச் சாரும். நீர் வளங்கள். ஒரு விலங்கு நீரில் வாழ்ந்தாலும் நிலத்தில் வாழ்ந்தாலும் அதன் புரோட்டோப்பிளா சத்தில் 70 முதல் 90 விழுக்காடு வரை நீர் அடங்கி யுள்ளது. நீரில் வளரும் தாவரங்கள் இல்லையேல் விலங்கினங்களுக்குத் தேவையான உணவு கிடைக் காது. மேலும் நீர் வளங்கள் பாதிக்கப்படுமாயின் நீரில் வாழும் தாவரங்களும் விலங்குகளும் மட்டு மல்லாது நிலத்தில் வாழும் தாவர இனங்களும் கூடப் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. புவியில் நான்கு இடங்களில் நீர் சேமித்து வைக் கப்படுகிறது. கடல்களில் கிட்டதட்ட 1370 × 10 மில்லியன் கன கிலோ மீட்டர் அளவு நீர் உள்ளது; நிலத்தடி நீர் (ஊற்று. கிணறுகள்); இவ்வகை நீர் கடல் நீரில் ஏறத்தாழ 1% ஆகும்; வளிமண்டலத்தில் ஈரப்பதமாக அமைந்துள்ள நீர், ஆறு, ஏரி, குளங் களில் காணப்படும் நன்னீர். இது வளிமண்டலத்தில் ஈரப்பதமாக உள்ள நீரினைப் போல் 33 மடங்கு உள்ளது. நீர்வளம் மாசடைதல். நீரில் ஏறத்தாழ 54 தனி மங்கள் கரைந்துள்ளன. இத்தனிமங்களின் அளவு நீருக்கு நீர் வேறுபடும். மனிதனின் அதிகத் தேவை, நாகரிகத்தால் நீரின் தன்மை கெடுக்கப் படுகிறது. சுரிய கனிமப் பூச்சிக்கொல்லியையும் களைக்கொல்லியையும் மிகுதியாகப் பயன்படுத்து வதால் இவை நீரோடு கலந்து நீர் மாசுபடுகிறது. இதேபோல், சாக்கடைக்கழிவும் தொழிற்சாலைகளி லிருந்து வெளிப்படும் கழிவுப் பொருள்களும் நீரில் கலந்து விடுவதால் பலவகை மீன்களும், மெல்லுடலி களும், முதுகெலும்பற்ற விலங்குத் தொகுதிகளும் தாவர வகைகளும் போகின்றன. அழிந்து இதனால் நீரின் இயற்பியல், வேதித் தன்மைகள் கூட பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. நீர் பல இயற்கை வளங்கள் 431 நிலைகெடுவதால் அதன் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சூழ்நிலை அமைப்பே நீர்வளப் பாதுகாப்பு. பாதரச உப்புகள், ஃபீனால் பொருள்கள், குளோரினுள்ள கரிமப் பூச்சிக்கொல்லி போன்ற நிலைமாறா மாசுப்பொருள்களை அதிக மாகப் பயன்படுத்துவதால் அவற்றின் அளவு உயிர்ப் பொருளில் அதிகரித்துக் கொண்டே சென்று, இறுதி யில் உயிர்- புவிவேதிச் சுழற்சிகளிலும், உணவுச் சங்கிலிகளிலும் இடம்பெற்று விடுகின்றன. இதே பொருள்கள் சூழ்நிலையின் மற்ற பொருள்களோடு சேர்ந்து மேலும் பல புதிய நச்சுப் பொருள்களை உருவாக்கும் நிலையும் ஏற்படுகிறது. இவ்வகையான மாசுபடுத்தும் நச்சுப் பொருள்களை உயிர்மண்டலத் திலிருந்து நீக்குதல் அவ்வளவு எளிதான காரியமன்று. தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடை நீர் போன்ற சிதைவுறும் மாசுப் பொருள்களாலும் தீய விளைவு கள் ஏற்படுகின்றன. குளோரினுள்ள கரிமப்பூச்சிக் கொல்லி முதுகெ கலும்புடைய மீன், தவளை, ஓணான், பறவை, பாலூட்டி ஆகியவற்றைக் கொல்லும் திறனுள்ளது. பாஸ்ஃபேட்டும் கார்பனேட்டும் அடங்கிய கரிமப் பூச்சிக்கொல்லி பூச்சியினங்களைக் கொல்லும் ஆற்றல் மிகுதியாகப் பெற்றது. எனவே, பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தும்போது நீர்வாழ், நிலவாழ் விலங்கினங்களையும், பயிர்களின் நோய்த் தன்மையைப் பற்றியும் முற்றிலும் அறிந்து பயன் படுத்தினால் கேடுகளை ஓரளவு தவிர்க்கலாம். நிலைமாறும் கழிவுப் பொருள்களை அகற்றுதல். இப்பொருள்களை அகற்ற, கழிவுப் பொருள்களைப் பிரித்தெடுத்து அல்லது திடப்பொருள்களாகப் படியச் செய்து எரிக்கவோ புகைக்கவோ செய்தல்; நுண்ணு யிரிகளைப் பயன்படுத்திக் கரிமப் பொருள்களைச் சிதைவுறச் செய்தல்; எந்திரக் கருவிகளைப் பயன் படுத்தி வேதிமுறையில் பாஸ்ஃபேட்டுகளையும், நைட் ரேட்டுகளையும் அகற்றுதல்; கழிவைத் திட நிலைப் படுத்தும் குளங்களைப் பயன்படுத்தி கரிமப்பொருள் கள்: ஆல்காப் பொருளால் ஊட்டப் பொருளாகவும் மாற்றுதல் ஆகிய முறைகளைக் கையாளலாம். பூச்சிக் கொல்லியும் நாசவுயிர்க் கட்டுப்பாடும். நாச வுயிரிக் கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளில் பூச்சிக் கொல்லியையும் நாசவுயிரிக்கொல்லியையும் அள வோடு பயன்படுத்தல் வேண்டும். அமெரிக்காவில் தற்போது துகள்களின் நிலை மின்னேற்றம் (electro- static particle charging) என்னும் முறை விவசாயத் துறையில் மேற்கொள்ளப்படுகிறது. இம்முறையில் குறைந்த அளவு பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படு கிறது. தெளிக்கப்படும் நச்சுப்பொருள்கள் அருகி லுள்ள விளைநிலங்களையோ காட்டுப்பகுதி களையோ சென்றடைவதில்லை. வேதி நச்சுப் பொருள்களைப் பயன்படுத்தாது. இலக்கு உயிரிகளைக் கட்டுப்படுத்தும் உயிரியவழிக்