பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கை வளங்கள்‌ 435

இதனால் பல அரிய வனவிலங்குகள் அற்றுப்போயின. சில அருகி வருகின்றன. வனவிலங்குகள். மனித வாழ்வின் தாக்கத்திற்கு உட்படாமல் காடுகள், சமவெளிகள், மலைகள், கடல்கள். ஆறுகள் போன்ற பல இயற்கைச் சூழ் நிலைகளில் வாழும் விலங்குகள் அனைத்தும் வன விலங்குகளாகும். வனவிலங்குப் புகலரண்களும், தேசியப் பூங்காக் களும் (Wild Life Sanctuaries and National Parks) உண்டாக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்திய வனவிலங்கு வாரியம் (Indian Board for Wild Life) விலங்குகளுக்கான பாதுகாப்பு இடங்களை நான்கு வகையாகப் பிரித்துள்ளது. அவை தேசியப்பூங்கா, வனவிலங்குப் புகலரண், பாதுகாக் கப்பட்ட பகுதி, காப்புக்காடு (reserve forest) ஆகி யவை. இந்தியாவில் வனவிலங்குப்.பாதுகாப்பு மாநில அரசின் பொறுப்பிலுள்ளது. தேசியப்பூங்கா. இங்கு வன விலங்குகளும் இயற்கைச் செல்வமும் கேடுறாமல் பாதுகாக்கப்படுகின்றன. எதிர்காலச் சந்ததியினரும் இங்குள்ள இயற்கைச் செல்வங்களைக் கண்டு மகிழலாம். வனவிலங்குப் புகலரண். இது பறவைகளும், விலங்குகளும் வேட்டையாடப்படுவது தடை செய்யப் பட்ட இடமாகும். பாதுகாக்கப்பட்ட பகுதி. அற்றுப் போகக்கூடிய நிலையிலுள்ள சில வனவிலங்கு இனங்களுக்கு, தனிப் பாதுகாப்புத் தேவைப்படுகிறது. இதற்கு ஏற்ற இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். காப்புக்காடு. இது வனவிலங்குகளுக்குப் பாது காப்பாக அமையும் பகுதி. இந்தியாவில் பல வன் விலங்குப் புகலரண்கள் அமைக்கப்பட்டுச் சிறப்பு விலங்கினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்தியாவில் அற்றுப்போகும் நிலையிலுள்ள விலங்கு கள். இந்தியாவில் பல விலங்கினங்கள் அற்றுப் போகும் நிலையில் உள்ளன. ஆசியாவில் முன்னர் சிங்கம் பரவலாகக் காணப்பட்டது. இப்போது குஜராத்தில் கிர் (Gir) காடுகளில் மட்டும் காணப் படுகிறது. இந்திய (blackbuck), இரலைமான் ஸ்லாத் பூனைக் குடும்பத்தைச் சார்ந்த கராகல் (caracal), இந்திய நவ்வி (Indian Cazelle), இந்திய ஹைலோ பேட்டஸ் ஹுலாக் ( Hylobates Hoolock), அனுமான் குரங்கு, தேவாங்கு (loris), ஓநாய், கரடி (sloth bear), சிவப்புப்பாண்டா (red panda) இந்திய அலங்கு (pangolin), இந்திய நீர்நாய் (Indian Otter) இந்தியக் காட்டுக் கழுதை, மலபார் அணில் இமாலய வரையாடு (Himalayan Tahr) ஆகிய பாலூட்டிகள் அற்றுப்போகும் நிலையிலுள்ளன. அ.க.4-28அ இயற்கை வளங்கள் 435 காரணங்கள். 250 வனவிலங்குகளின் அழிவிற்கான கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் சுமார் வகை விலங்கினங்கள் அற்றுப்போய்விட்டன. விலங் கியல் வல்லுந மேலும் ஒரு நூற்றாண்டுக் காலத்திற்குள் ஏறக்குறைய 600 விலங்கினங்கள் அழியக்கூடும் என்று தெரிவிக்கின்றனர். இதுவரை நிகழ்ந்த விலங்கு அழிவு, காடுகளில் ஏற்படும் தீ. எரிமலை வெடிப்பு, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைக் கேடுகளால் ஏற்பட்டதாகும். ஆனால் வரும் நூற்றாண்டில் எதிர்பார்க்கப்படும் விலங்கின அழிவுக்கு மனிதனின் நடவடிக்கைகளே முதன்மை யாக இருக்கும். இதனைப் பின்வரும் குறிப்புகள் அறுதியிட்டுக் காட்டுகின்றன. உணவு உற்பத்தியைப் பெருக்கப் புதிய விளைநிலங்களை உண்டாக்கவும், தொழிற்கூடங்கள், நகரங்கள், சாவைகள் இரயில் பாதைகள், பாதுகாப்புப்படை முகாம்கள், அகதிக் குடியிருப்புகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கவும் வனவிலங்குகள் இருப்பிடமான காடுகள் பெருமளவில் அழிக்கப்படுகின்றன. ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டுவதாலும் பெரிய காடுகள் நீரில் மூழ்கி அழிந்துபோகின்றன. உணவு, உடை, ஆடம்பரப் பொருள்கள் ஆகியவற்றிற்காக விலங்குகள் கட்டுப் பாடு ஏதுமின்றி திருட்டுத்தனமாகக் கொல்லப்படு கின்றன. உணவு உற்பத்தியைப் பெருக்கப் பூச்சி மருந்துகளும், செயற்கை வேதி உரங்களும் தேவைக்கு மேலும் பயன்படுத்தப்படுகின்றன. காடுகளில் பூச்சி களை அழிக்கப் பூச்சி மருந்துகள் பெருமளவில் தெளிக்கப்படுகின் றன. இவை காடுகளிலும் வயல் களிலும் பூச்சிகளை அழிப்பதுடன், பிற விலங்குகளை யும் அழிக்கின்றன. இப்பொருள்கள் இறுதியில் நீர் நிலைகளான ஆறுகள், குளங்கள், கடல்கள் ஆகிய வற்றை அடைந்து காலப்போக்கில் அங்குள்ள விலங்குகளையும் அழிக்கவல்லன. அணு ஆயுதங் களைப் பயன்படுத்துவதாலும், அணு ஆயுத ஆய்வு கள் நடத்துவதாலும், பல்வேறு இடங்களில் வாழும் விலங்கினங்கள் நோய்கள், உடற்குறை ஆகியவற்றிற்கு நாளடைவில் இறந்து விடுகின்றன. தொழிற்சாலைகள், நகரங்கள் ஆகிய வற்றினின்று வெளிப்படும் கழிவுகள், அவற்றிலுள்ள நச்சுப் பொருள்களுடன் ஆறுகள், கடல்கள் ஆகிய வற்றில் கலக்கும்போது இவற்றில் வாழும் விலங்குகள் கொல்லப்படுகின்றன. நீர்ப்பாசனம், மின்சாரத் திட்டங்கள், நிலம் வழங்கும் திட்டங்கள், சீர்திருத்தத் திட்டங்கள் (reclamation schemes), வெட்டுமரங் களை மீண்( எடும் உருவாக்குதல், மரக்கட்டைகளை பொருளாக அடிப்படைப் வைத்துத் தொழிற் சாலைகள் அமைத்தல், வேற்று நாட்டுச் செடிகளைப் பயிராக்குதல் போன்ற வளர்ச்சித் திட்டங்கள் உள்ளாகி அழிவை ஏற்படுத்துகின்றன. பாதுகாப்பின் இன்றியமையாமை. வனவிலங்குகள் பல வழிகளில் மனிதவாழ்விற்கு இன்றியமையாதவை