436 இயற்கை வளங்கள்
436 இயற்கை வளங்கள் பல இயற்கைச் சமநிலை கேடுற்றால், மனிதன் உள் ளிட்ட அனைத்து உயிரினங்களும் வாழா. ஆடுகள், மாடுகள், பன்றிகள், பறவைகள், மீன்கள் ஆகிய விலங்குகளின் இறைசசியும், பறவைகளின் முட்டை களும் உணவாகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் வற்றில் ஈசல், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள கொள்ளப்படுகின்றன. தேனீக்களின் தேன் ஒரு சத்துணவாகும். தாவரங்கள் மகரந்தச் சேர்க்கைக்காகப் பூச்சிகள், பறவைகள் போன்ற பல் வேறு விலங்குகளைச் சார்ந்துள்ளன. தாவரங்களின் பரவுதலுக்குப் பூச்சிகளும் பறவைகளும் பெரிதும் உதவுகின்றன. மனிதன் நேரடியாகவோ, மறைமுக மாகவோ உணவாகக் தாவரங்களை உணவிறகாகச் சார்ந் துள்ளான். எனவே, மனிதன் தனது உணவினைப் பெற விலங்குகள் மறைமுகமாக உதவுகின்றன. தவளை,பாம்பு, சிலந்தி போன்றவை பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை உண்டு, உணவு உற்பத்தியைப் பெருக்க உதவுகின்றன. பட்டுப்பூச்சியின் இழைகளும், ஆட்டுமயிரால் நெய்யப்பட்ட கம்பளியும் ஆடை தயாரிக்கப் பயன் படுகின்றன. பனிப்பிரதேசங்களில் விலங்குகளின் தோல் ஆடையாக அணியப்படுகிறது. விலங்கு களின் தோலிலிருந்து காலணி, இடுப்புப் பட்டை, கைப்பை, தொப்பி போன்ற அழகுச் சாதனப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. சுறா போன்ற மீன்களிலிருந்து தயாரிக்கப்படும் ஈரல் எண்ணெய் களும், பாம்பு போன்றவற்றிலிருந்து பெறப்படும் நச்சுப் பொருள்களும் நோய் தீர்க்கும் மருந்து களாகப் பயன்படுகின்றன. பாலூட்டிகளின் ஹார் மோன்கள் மனித உடலுறுப்புக்களின் பணிகளைச் சீர் செய்யப் பயன்படுகின் றன. வனவிலங்குகளின் பதப் படுத்தப்பட்ட தலைகள், மான்களின் கொம்புகள், யானைகளின் தந்தங்கள் ஆகியன வீடுகளில் அழகுப் வைக்கப்படுகின்றன. பொருள்களாகக் காட்சிக்கு சங்குகளினின்று பித்தான்கள், வளையல்கள், மார்புப்பட்டைகள், மாலைகள் போன்ற ஆடம்பரப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. வேட்டையாடுதல், மீன்பிடித்தல் ஆகியவை பொழுது போக்காகவும், மனதிற்குப் புத்துணர்வு அளிப்பவையாகவும் உள்ளன. பறவைகளின் இனிய ஒலிகள், வண்டுகளின் ரீங்காரம் ஆகியன மனத்திற்கு மகிழ்ச்சியளிக்கின்றன. விலங்குக் காட்சியகங்கள் அனைவருக்கும் பயனுள்ள பொழுதுபோக்கு இடங் களாக விளங்குகின்றன. வண்ணத்துப்பூச்சிகள் கண்ணிற்கு விருந்தளிக்கின்றன; வெளிநாட்டார் வனவிலங்குகளைக் காண வருவதால் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. காட்டு உயிரிகள் பண் பாட்டுச் சிறப்புப் பெற்றுள்ளன. சில விலங்குகள் மதச்சார்பு வகையில் முதன்மை பெறுகின்றன. விலங்குகளின் பழங்கால, தற்காலப் பரவுநிலைகளை ஆராய்வதால், அவ்விலங்குகள் வாழும் நாட்டின் புவியியல் வரலாற்றினை நன்கு அறியலாம். கூடுகட்டும் பறவைகள், மாறும் காலநிலை களினின்று தாம் பாதுகாப்புப் பெற வீடுகட்டிக் கொண்டு மனிதனுக்கு அறிவூட்டின. நீரில் நீந்தும் மீன்கள், வானில் பறக்கும் பறவைகள், மனிதனின் அறிவைச் செம்மைப்படுத்தி நீரில் செல்லக் கப்பலை யும், வானில் பறக்க விமானத்தையும் படைக்க வழிவகுத்தன. நுண் ஒலிகளைக் கேட்கும் முறையை வௌவால்களின் மூலம் மனிதன் கண்டறிந்தான். பூச்சிகள், கிளிகள், குரங்குகள் போன்றவற்றை ஆய்வுக்கூடங்களில் ஆய்வுக்குப் பயன்படுத்தி நோய்களைத் தீர்க்க வழி கண்டறியப்படுகின்றது. ஒவ்வொரு விலங்கும் சுற்றுப்புறத்திற்கேற்பச் செயல் பட்டு இயற்கைச் சமநிலையைப் (natural balance பேணுவதற்குத் துணைபுரிகின்றது. இச்சமநிலை மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரிகளும் தொடர்ந்து வாழ்வதற்கு இன்றியமையாதது.எனவே வனவிலங்குகள் பாதுகாக்கப்படவேண்டும். வனவிலங்குகள் மனித பாதுகாப்பு முறைகள். மக்களுக்கு, குறிப்பாக மாணவர்களுக்கு, மனிதன் விலங்குகளினின்று பெறும் பயன்களை உணர்த்த வேண்டும். இயற்கைச் சம நிலையில் காடுகள். விலங்குகள் ஆகியவற்றின் பங்கு பற்றியும், சரிவரப் பயன்படுத்தப்படா விட்டால் அழியக்கூடாத அழிந்து மனித இனத்தின் வாழ்வுத் தேவைகள் கேடுறும் என்பதையும் அறிவுறுத்த வேண்டும். இவற்றை நூல்கள், திரைப் படங்கள், நிழற்படங்கள் மூலம் மக்களிடையே பரப்ப வேண்டும். குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே வேட்டையாடுதலை அனுமதிக்கவேண்டும்; வயோதிக விலங்குகளை மட்டுமே வேட்டையாடல் வேண்டும் என்பன போன்ற விதிகளை இவ்விடங் களில் பின்பற்றவேண்டும். காடுகளில் இயற்கையாக ஏற்படும் தீ விபத்துகளும், காடுகளின் அழிவும் தவிர்க்கப்படவேண்டும். காடுகள், வயல்கள் ஆகிய வற்றில் பூச்சி மருந்துகளைத் தேவைக்குகந்த அளவில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முடிந்த அளவு, பூச்சி மருந்துகளுக்கு மாற்றாக. ஊனுண்ணிகள், தாவரப்பொருள்கள் ஆகியவற்றைக் கொண்டு பயிர் களைத் தாக்கும் பூச்சிகளை அழித்தல் வேண்டும். தொழிற்சாலைகள், நகரங்கள் ஆகியவற்றின் கழிவு களை, வேதியியல் அல்லது உயிரியல் செயல்களுக்கு உட்படுத்தி அவற்றிலுள்ள நச்சுப் பொருள்களை நீக்கிய பின்பே வெளிவிடல் வேண்டும். அடர்த்தி யான காட்டுப்பகுதியில் சாலைகள், இரயில் பாதை கள் போடுவதைத் தவிர்க்க வேண்டும். திருட்டுத்தன மாக வேட்டையாடுவதைச் சட்டப்படித் தடுக்க வேண்டும். வன விலங்குகள் இயற்கையாகக் காணப் படும் இடங்களைப் பாதுகாக்க வேண்டும். பாது காப்பிடங்கள், பூஞ்சோலைகள், காடுகள் ஆகிய .