இயற்பியல் அளவுகள் 439
குறிப்பிட்டுச் சொல்ல ஓர் உலகளாவிய வழிமுறை அவசியமாகும். இவ்வழி முறையும், அதற்காகப் பயன் படுத்தப்படும் செந்தரங்களும் (standards) இயற்பியல் அளவுகளாகும் (physical measurements). இயற்பியல் அளவுகள் என்பதைப் பொருள்களின் பொது மற்றும் சிறப்புப் பண்புகளை மதிப்பிட்டுக் கூறி அவற்றின் பல்வேறு இயற்பியல் நிலைகளை வரையறுத்து நிறுவக்கூடிய ஓர் அடிப்படை நெறி முறை எனலாம். பொதுவாக இயற்பியல் அளவுகளின் அள வீட்டிற்குத் தக்க அளவீடுகளினால் குறியீடு செய்யப் பட்ட அளவீட்டுக கருவிகள் (measuring devices) பயன்படுத்தப்படுகின்றன. அளவுக்குறியீட்டு முறைக் குப் பொதுவாகச் சில செந்தரங்களைப் பயன்படுத்து கின்றார்கள். செந்தர அளவுகள் எனப்படுவன வழக்கு முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அனை வராலும் பின்பற்றப்பட்டு வரும் இயற்பியல் அளவு களில் ஒரு குறிப்பிட்ட எண் அளவைச் சுட்டிக்காட்ட வல்ல எளிய அமைப்புகளாகும். இன்றைக்கு இவ் வெண் அளவுகளையே இயற்பியல் அளவுகளின் அலகுகளாகக் கொண்டுள்ளனர். அலகுகளைத் தேவை கருதி நுண்அலகுகளாகவும், பேரலகுகளாகவும் வகுத்து அல்லது பெருக்கிக் கொள்வதுண்டு. பொரு ளின் ஒவ்வோர் இயற்பியல் பண்புகளும் ஓர் எண் அளவாலும் (செந்தர அலகின் மடங்கு) அலகின் பெயராலும் குறிப்பிடப்படும்போது, அவற்றின் இயற்பியல் பண்புகளை ஒப்பீட்டு நோக்கில் அறிந்து கொள்வது எளிமையாகின்றது. எ.டு. ஒரு பொருளின் நீளம் 1.54 மீட்டர் என்றால், அதன் நீளத்தை மனத்தில் ஊகிக்க இயலும். இதுசெந்தர அளவுகளை ஏற்படுத்திக் கொண்டதன் விளைவாகும். செந்தர அளவுகள், அலகுகள், அளவீட்டு வழிமுறைகள், நுட்பம் பற்றிய அறிவியல் அளவியல் (metrology) எனப்படும். அளவுகளின் அலகுகளும் செந்தரங்களும். 18ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே நீளம்,பருமன், நிறை போன்ற அளவுப் பண்புகளுக்குச் செந்தரங்கள் மேற் கொள்ளப்பட்டன என்பதற்கு வரலாற்றுச் சான்று கள் உள்ளன. ஆனால் இவை நாட்டுக்கு நாடு, காலத் திற்குக் காலம் வேறுபட்டுக் காணப்பட்டன. ஒரே பெயரால் குறிப்பிடப்படுகின்ற அலகுகளின் அளவு கள் வெவ்வேறு பகுதிகளில் மாறுபட்டும் இருந்தன. இதனால் அவற்றை உலகளாவிய பொதுச் செந்தர அளவுகள் என்பதைவிட, குறுநிலச் செந்தர அளவுகள் என்பது பொருத்தமாகும். 1793 ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசு தசம அலகு முறையைப் பின்பற்றியது. பொதுவாக நீளம், நிறை, காலம் ஆகியவற்றிற்கான அவகுகளை அடிப்படை அலகுகளாகக் கொண்டு அதனைச் சுருக்க எழுத்துக் களால் குறிப்பிடுவது வழக்கம். தசம அலகு முறை -MKS (m-மீட்டர் நீளத்திற்கான அலகு, k- கிலோ இயற்பியல் அளவுகள் 439 கிராம் நிறைக்கான அலகு, $ - நொடி, காலத்திற் கான அலகு) அலகு முறை எனப்படும். ஆங்கில அலகு முறை FPS (f -அடி, p -பவுண்டு, S -நொடி) அலகு முறை எனப்படும். அள தசம் அலகு முறை பயனுக்கு வந்த தொடக்க காலத்தில், நீளத்தின் அடிப்படை அலகாக, பூமியின் வட முனையிலிருந்து பாரீசு நகரம் வழியாக நடு வரை, கோடு செல்லும் கால்வட்டப் பகுதியில் கோடியில் ஒரு பங்கு என வரையறுக்கப்பட்டது. இவ்வடிப்படை அலகு மீட்டர் எனப்பட்டது. அல்லது அளவீடு செய் என்று பொருள்படும் metre என்ற பிரெஞ்சு சொல்லே இதன் மூலமாகும். 4. சென்டிகிரேடு வெப்பநிலையில் உள்ள 1000 கன சென்டிமீட்டர் (10 கன டெசிமீட்டர்) பருமனுள்ள தூய நீரின் நிறை, நிறைக்குரிய அடிப்படை அலகாகக் கருதப்பட்டது. இது கிலோகிராம் எனப் பட்டது. அனைவராலும் பின்பற்றப்படுவதற்கும். தங்கள் அளவிடும் கருவிகளில் அளவீட்டுத் திருத்தம் செய்துகொள்வதற்கும், இவ்வளவுகளுக்குத் தேவை யான செந்தரங்களைப் பின்னர் நிறுவினர். ஒரு மீட்டர் இடைவெளியில் வெட்டுக் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிளாட்டினம் இரிடியம் உலோகக் கலவையான (90 விழுக்காடு பிளாட்டினம் 10 விழுக் காடு இரிடியம்) உலோகத் தண்டு நீள அலகிற்கான செந்தரமாகவும், ஒரு கன டெசிமீட்டர் பருமனுள்ள தூய நீரின் நிறைக்குச் சமமான பிளாட்டினம் - இரி டியம் உலோகக் கலலையாலான உருளை, நிறை அலகுக்கான செந்தரமாகவும் ஏற்படுத்தப்பட்டன. பின்னர் அளவீட்டு முறைகளின் நுட்பம் வெகுவாக முன்னேறிய போது, கருதப்பட்ட நீளம்,நிறை இவற்றிற்கான செந்தரங்கள் முன்பே வரையறுக்கப் பட்ட அலகுகளை மெய்யுருவாக்கிக் காட்டக் கூடியன வாக இல்லை என்பதை உணர்ந்தனர். உணரப்பட்ட வேறுபாட்டைத் தவிர்ப்பதற்காக, ஏற்படுத்தப்பட்ட செந்தரங்கள் காட்டும் அளவுகளையே அலகுகளாக எடுத்துக்கொண்டனர். எனவே, இவ்வாறு உருவாக் கப்பட்ட செந்தரங்கள் காட்டும் அளவுகளினாலேயே நீளம் நிறை ஆகியவற்றின் அவகுகள் இன்றைக்கு வரையறுக்கப்படுகின்றன எனலாம். 1875 இல், 18 நாட்டு அறிஞர்கள் ஒன்று கூடித் தசம் அலகு முறைக்கு ஒருமனமாக ஒப்புதல் அளிக் கும் வகையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர். எடை மற்றும் அளவுகளின் பொது மாநாடு மூலம், செந்தர அளவுகளை உலகளாவிய அலகுகளாக ஏற்றுக் கொள்வது, அவற்றின் வரையறைகளைக் கிடைக்கக்கூடிய தொழில் நுட்பத்திற்கு ஏற்றவாறு புதுமைப்படுத்திக் கொள்வது ஆகியன இம்மாநாட்டுத் தீர்மரனத்தின் முதன்மைக்குறிக்கோள். இன்றைக்கு இவ்வமைப்பு, எடை மற்றும் பிற அளவுகளுக்கான ஓர் உலகப் பொதுக்குழுவாக விளங்கி வருகின்றது. இக்குழு பிரெஞ்சு நாட்டில் பாரீசு நகருக்கு அருகில்