பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 இயற்பியல்‌ அளவுகள்‌

448 இயற்பியல் அளவுகள் காட்மியம்-114 போன்ற ஓரிடத்தனிமத் தூய்மை (isotopically pure) வாய்ந்த பொருள்களால் உமிழப் படும் ஒளிகளைக் கொண்டும் அதன் அலை நீளங் களால் மீட்டர் நீளத்தை வரையறை செய்தார்கள். இவ்வாறு பல ஆய்வுகளின் மூலம் கிடைக்கப் பெற்ற புள்ளி விவரங்களை நுணுகி ஆய்ந்து, 1960 இல் நடைபெற்ற எடை மற்றும் அளவுகளுக்கான பதி னோராவது பொது மாநாடு, மீட்டர் என்பதைக் கீழ்வருமாறு வரையறை செய்தது.மீட்டர் என்பது 86 நிறை எண் உடைய கிரப்பிட்டான் அணு, 2pjo5d, என்ற ஆற்றல் நிலைகளுக்கிடையே நிலை மாற்றம் பெறும்போது வெற்றிடத்தில் உமிழும் ஆரஞ்சு நிற ஒளியின் அலைநீளத்தைப் போல் 1650763.73 மடங்காகும். 0 பட்ட இங்கு செந்தரம் கிரப்பிட்டான் அணுவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட கதிர்வீச்சை உமிழ்ந்து, அதன் அலை நீளத்தால் பிற நீளங்களை ஒப்பிடக்கூடிய கிரப்பிட்டான் அணுவை ஒரு சாதனமாகக் கொள்ளலாம். குறைந்த வளிமம் நிரப்பப் அழுத்தத்தில் சிரப்பிட்டான் கிரப்பிட் குவார்ட்சால் ஆன குழல், டான் விளக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. அணுக் களைக் கிளர்ச்சியுறச் செய்து ஆற்றலை உமிழத் தூண்ட, குழலினுள் இரு மின் முனைகள் இருக்கும். குழலின் நுண்புழைத் தன்மைகூடக் குறிப்பிடப்பட் டுள்ளது. குழலின் உட்சுவர் விட்டம் 2 முதல் 4 மில்லிமீட்டர் ஆகவும், சுவரின் தடிப்பு ஏறக்குறைய 1 மில்லி மீட்டராகவும் இருக்கவேண்டும். விளக்கின் கீழ்ப்பகுதி நைட்ரஜனின் மும்மைப்புள்ளி (triple point) யான 64k லெப்பநிலையில் இருக்குமாறும், நுண்புழையின் வழியே செல்லும் மின்னோட்டத்தின் மீட்டர் என்ற செறிவு 03,+ 0,1 ஆம்பியர் [சதுர அளவில் இருக்குமாறும், எதிர் முனையிலிருந்து நேர் முனை நோக்கிச் சென்று வெளிப்படும் அலையை பயன்படுத்துமாறும் அமைத்துக் கொண்டால், குறிப் பிட்ட அலையின் செறிவுப் பெருக்கத்தை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். அயோடின் அல்லது மீதேன் (methane) தெவிட் டிய உட்கவர் நிரல் வரியில் (saturated absorption line) நிலைப்படுத்தப்பட்ட ஹீலியம்-நியான் லேசர் கருவியால் (laser) உற்பத்தி செய்யப்படும் கட் புலனுக்கு உள்ளாகும் ஒளி, அகச்சிவப்புப் பகுதியில் அமையும் ஒளி என இரு ஒருமைநிறஒளி (monochro. matic) அலைகளை அலைநீளத்திற்குரிய செந்தரமாகக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர், அதன் நிரல் விவரம் பின்வருமாறு. அயோடின் 127, R (127) பட்டை (band) 11-5, கூறு i, வெற்று இடத்தில் அலைநீளம் 632991.300X10-12 மீட்டர்; மீதேன், p(7), பட்டை 3393231. 40X10-12 Va, வெற்றிடத்தில் அலைநீளம் மீட்டர். இந்நிற அலைகளை ஆயிரங்கோடியில் ஒரு பங்கு உறுதியின்மையோடு (uncertainty) உற்பத்தி செய்துகொள்ள இயலும். இவற்றின் அலைநீளங்கள், செந்தரமாகக் கொள்ளப்பட்டுள்ள கிரப்பிட்டான்- 86 இன் அலைநீளத்தின் உறுதியின்மையோடும் தொடர் புடையதாக இருக்கின்றன. அதன் மதிப்பு நூறு கோடியில் 4 பங்கு என மதிப்பிட்டுள்ளனர். மீதேனின் மேற்குறிப்பிட்ட அலையின் அலை நீளத்தை அதன் அதிர்வெண்ணால் பெருக்க நொடியை வரையறுக்கக் கருதப்பட்ட சீசியம்- 133 நிலைமாற்றத்தோடு ஒப்பிட்டு அளவிடலாம்) வெற்றிட வெளியில் மின்காந்த அலையின் வேகத் தைப் பெறலாம். இதன் மதிப்பு C=299 791 458 m/s ஆகும். இதைக் கொண்டும் மீட்டரை வரையறை செய்யலாம். வெற்றிடத்தில் 1/299792 458 நொடி யில் மின்காந்த அலை கடக்கும் தொலைவு மீட்டர் ஆகும். குறுக்கீட்டு விளைவுமானியில் (interferometer) கிரப்பிட்டான் ஒளி மூலத்தைப் பயன்படுத்தி, ஒரு மீட்டர் நீளம் அல்லது அதற்கும் கூடுதலான நீளத்தை வெற்றிடத்தில் நூறு கோடியில் 4 பங்கு என்ற உறுதியின்மையோடு அளவிட்டறியலாம். நுட்பமாக நிலைப்படுத்தப்பட்ட சில லேசர் ஒளி மூலங்களைக் கொண்டு, வெற்றிடத்தில் ஏறக் குறைய அதே உறுதியின்மையுடனும், வளிமத்தில் கோடியில் ஒரு பங்கு என்ற உறுதியின்மையுடனும், கிலோமீட்டர் நீளம் வரை கூட நேரடியாக அளவிடலாம். கதிர்வீச்சு அலைகளைக் (radio- waves) கொண்டு கோடிக்கணக்கான கிலோமீட்டர், தொலைவுகளையும் கூட ஓரளவு நுட்பத்துடன் அளவிட்டறிந்து கொள்ள முடிகின்றது. வானியலார். கதிர்வீச்சுத் தொலைநோக்கிகளை அமைத்து, நெடுந் தொலைவிலுள்ள விண் பொருள்களின் இடைத் தொலைவை ஓரளவு துல்லியமாகக் கணக்கிட்டுள்ள னர். மீண்டு வரும் அடுத்தடுத்த அலைகளை பிரித்து உணரக்கூடிய கணிப்பு இழக்கப்படாதவரை, சார்புறு நுட்பம் (relative precision) நெடுக்கைக் கேற்ப மிகுதியாகிறது. னம் நுண்பொருள் உலகில், அணுக்கருவின் பரி மாணத்தை (ஏறக்குறை 10-15 மீட்டர்) 15 விழுக்காடு பிழையுடன் அளவிட்டறிய இயலுகின்றது. நிறைக்கான அலகு. நிறைக்கான உலகப் பொதுச் செந்தர மூலமுன்மாதிரியின் நிறையே கிலோகிராம் ஆகும். இது பாரிசு நகருக்கு அருகாமையில் உள்ள பன்னாட்டு எடை மற்றும் அளவுகளுக்கான அலுவலகத்தில் உள்ளது. இதன் வார்ப்புகள் பல நாடுகளில் உள்ளன. நிறை என்பது ஒரு பொருளின் அடிப்படையான அளவுப்பண்பு என்றாலும் நிறைக் செந்தரம் தன் விருப்பப்படி அமைந்த வரையறையாக உள்ளது. கான நிறையோடு தொடர்