பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/479

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல்‌ பண்புகள்‌, கனிமம்‌ 455

செந்தரத்தோடு ஒப்பிட்டு அளவீட்டுத் திருத்தம் செய்து கொள்ளவேண்டும். ஒளிச்செறிவின் அலகாகக் கொள்ளப் பிறிதொரு வழிமுறையும் கூறப்பட்டுள்ளது. கான்டெலாவை, செந்தரமான உமிழ்வான் வீசுங்கதிர்வீச்சைச் சார்ந்து வரையறுப்பதற்குப் பதில் ஒரு செந்தரமான உட்கிர கிப்பான் உட்கவரும் கதிர்வீச்சைச் சார்ந்து வரை யறை செய்யலாம். ஒரு செந்தர உட்கிரகிப்பானை வோல்ட்/லூமென் (volt/lumen) அலகில் அளவுக் குறியீடு செய்து அதைக் செய்து அதைக் கொண்டு எந்தவொரு விளக்கின் ஒளிச்செறிலையும் மதிப்பீடு செய்யலாம். இவ்வழிமுறை மிகுந்த எளிமையுடனும் துல்லியத் துடனும் அமைகின்றது. பொருள் அளவின் அலகு. மோல் என்பது பொருள் அளவின் அலகாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு பொருள், 0.012 கிலோகிராம் நிறையுடைய கார்பன் -12 இல் எத்தனைக்கார்பன் அணுக்கள் உள்ளனவோ, அத்துணை எண்ணிக்கையில் அதன் அடிப்படை உட்பொருளைப் பெற்றிருந்தால், அதன் பொருள் அளவு ஒரு மோல் எனப்படும். மோல் என்ற அலகைப் பயன்படுத்தும்போது, அடிப்படை உட்பொருளைக் குறிப்பிடவேண்டியுள்ளது. இவ்வடிப்படை உட் பொருள்கள் அணு லுக்களாகவோ, மூலக்கூறுகளா கவோ, அயனிகளாகவோ, எலெக்ட்ரானாகவோ, பிற துகள்களாகவோ அமையலாம். . வேதியியலில் சில அடிப்படை விதிகள் கண்டறியப்பட்டபோது, கிராம்-அணு (gram-atom), கிராம் மூலக்கூறு போன்ற அலகுகள் தனிமங்கள், கூட்டுப் பொருள்கள் இவற்றின் அளவைக் குறிப் பிடப் பயன்படுத்தப்பட்டன. இவ்வலகுகள் உண்மை யில் அணு எடை, மூலக்கூறு எடையுடன் நேரடித் தொடர்புடன் உள்ளன. அணு எடை அளவீடு, ஆக்சிஜனின் அணு எடையைச் சார்ந்திருக்குமாறு உள்ளது (ஆக்சிஜனின் அணு எடை 168). ஆனால் இயற்பியலார் நிறை நிறமாலையியல் வழிப்படி ஆக்சிஜனை அதன் அய்சோடோப்புக்களாகப் பிரித்துக் காட்டி, ஆக்சிஜனின் ஓர் அய்சோடோப் பின் நிறைதான் 16 என்று நிறுவியுள்ளார்கள். வேதியியலார் நிறை எண் 16, 17, 18 உடைய அய் சோடோப்புக்களின் கலவையால் ஆன ஆக்சிஜனின் ஓர் அடிப்படைக் கூறுக்கே 16 வழங்கியுள்ளனர். இதனால் வேதியியல் அலகு முறையும் இயற்பியல் அலகுமுறையும் சிறிது ஒன்றுக்கொன்று பட்டிருந்தன. தனித்த, செயலாக்க இயற்பியலுக்கான பன்னாட்டு ஐக்கியக் கழகமும் (International Union of Pure and Applied Physics), தனித்த, செயலாக்க வேதியலுக்கான பன்னாட்டு ஐக்கியக் கழகமும் (International Union of Pure and Applied Chemis- try) 1959-1960 இல் ஒருங்கிணைந்து கார்பன்-12ஐ மாறு இயற்பியல் பண்புகள், கனிமம் 455 சார்ந்திருக்குமாறு பொருள் அளவிற்கான அலகை வரையறுத்தன. -மெ.மெய்யப்பன் நூலோதி. Verma, A. R., S.I. System of Units, J. Phys. Edu.. Vol. 1., 1971; Symbols, Units and Nomenclature in Physics, NCERT, Document, V.I.P., S.U.N., 1965. இயற்பியல் பண்புகள், கனிமம் கனிமங்களின் வேதியியல் உட்கூறும், படிகக் கட்ட மைப்பும், இயற்பியல் பண்புகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இவ்வியற்பியல் பண்பு களிலிருந்து நிலஇயல் வல்லுநர்கள் ஒரு கனியம் உள்ளடக்கி உள்ள வேதியியல் கூட்டுப் பொருள் களின் தன்மையையும், படிகக் கட்டமைப்பையும் எளிதில் கூறிவிடுவர். ஒரு கனிமம் தொழிலில் பயன் படுமா என்பதை அதன் இயற்பியல் பண்புகளி லிருந்தே கூறிவிடலாம். எடுத்துக்காட்டாக வைரத்தின் கடினத்தன்மை (10), அது உராய்வுப் பொருளாக வும், அறுக்கும் கருவியாகவும் பயன்படுத்த உதவு கிறது. குவார்ட்சு கனிமத்தில் உள்ள மின் அழுத்தப் (piezoelectric) பண்பை அடிப்படையாகக் கொண்டு, மின்னணுத் தொழிலகங்களில் பயன்படுத்தமுடிகிறது.. ஒவ்வொரு கனிமமும் இயற்கை அமைப்பில் அவற்றிற் குரிய தனிப்பண்புகளைப் பெற்றுக் காணப்படுவதால் ஆய்வுக்கூடத்தில் ஆராயாமல் வெளிப்படையாக எளிதில் அறியக்கூடிய ஒரு சில பண்புகளைக கொண்டே அவற்றைக் கண்டறியலாம். இவற்றில் சிறப்பானவை ஒளி இயல் பண்புகள் (நிறம், ஒளிக் கசிவு, ஒளி மிளிர்வு முதலியன), புலன் உணர்வுப் பண்புகள் (சுவை, மணம் முதலியன), திரட்சிப் பண்புகள் (கனிம அமைப்பு, கனிம முறிவு, கனிமப் பிளவு முதலியன), அடர்த்தி எண், வெப்பப் பண்புகள், மின் கடத்தல், காந்த ஈர்ப்புப் போன்றன வாகும். க் சுண் நிறம். ஒரு கனிமம் ஒளியை ஈர்ப்பதன் மூலமோ பிரதிபலிப்பதன் மூலமோ, ஒரு குறிப்பிட்ட ஒளி அலைக்கு உட்பட்ட ஒளியை ஈர்த்து மற்றவற்றைப்பிரதி பலிப்பதன் மூலமோ ஒருகுறிப்பிட்ட நிறத்தைப் பெறு கின்றது. ஒரு பொருள் மிகக் குறைந்த அளவு ணால் கண்டறியக்கூடிய அளவிற்குப் பிரதிபலிக்கும் தன்மை பெற்றிருக்கும்போது கறுப்பாகத் தோன்று கிறது. ஒரு பொருள் அதன்மேல்படும் அனைத்து நிற ஒளிகளையும் பிரதிபலிக்கும்போது வெண்மையாகத் தோன்றுகிறது. இவற்றில் ஒரு கனிமம் சில நிற ஒளி அலைகளை ஈர்த்துக் குறிப்பிட்ட சில ஒளி அலை