456 இயற்பியல் பண்புகள், கனிமம்
456 இயற்பியல் பண்புகள், கனிமம் களைப் பிரதி பிரதிபலிக்கச் செய்யும்போது பலிப்புக்கு உள்ளான அந்த ஒளி அதிர்வு அலைகளின் நிறத்தை அக்கனிமம் பெறுகிறது. சஃபையர் என்ற கனிமம் வெள்ளை ஒளியிலுள்ள அனைத்து நிற ஒளி அலைகளையும் ஈர்த்துக் கொண்டு, 4400-4800 ஒளி அலைநீளத்தைக் கொண்டுள்ள அலைகளை மட்டும் பிரதிபலிப்பதால் அது நீலநிறமாய் இருப்பது போல் காணப்படும். கனிமத்தின் ஒரு நிறம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் ஒரு கனிமம் பல நிறங்களிலும் தோற்றமளிப்பதற்குக் கீழ்வரும் பன்னிரு முக்கிய காரணங்களைக் குறிப்பிடு கின்றனர். 1. ஒரு கனிமம் எளிதில் கடத்தப்படும் உலோக அணுக்களை உள்ளடக்கி இருப்பதால் நிறம் பெற லாம். செம்பு, குரோமியம் போன்ற அணுக்களைச் சுற்றி நிலையற்ற எலெக்ட்ரான்கள் இல்லாமையால் அவை நிறைந்துள்ள கனிமங்கள் நிறமற்றவையாகவே காணப்படுகின்றன. எ.கா. அசுரைட்டு. 2. இந்நிலையற்ற எலெக்ட்ரான்களைக் கொண்ட உலோகங்கள் தூய்மையாக இருக்கும்போது நிறமற் றவை. அவையே மற்றொரு கனிமத்தினுள் மாசுப் பொருள்களாக இருக்கும்போது கனிமத்துக்கு ஒளிரும் நிறத்தையளிக்கின்றன. எ.கா. சிட்ரின் குவார்சு ; ரூபி - (மாணிக்கம்). 3. ஒரு கனிம அணுக்கட்டமைப்பில் இருக்கும் அணுக்களின் எலெக்ட்டரான்கள் வழக்கம்போல் அல்லாமல் கூடியோ, குறைந்தோ காணப்பட்டால் அந்நிலையிலுள்ள கனிமம் ஒரு சில ஒளி அலைகளை ஈர்க்கவோ, பிரதிபலிக்கவோ இயலும். அதனால் ஃபூளுரைட்டு என்ற கனிமம் கருஞ்சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. குவார்ட்சு கனிமத்தின் கட்டமைப் பில் அலுமினியம் ஈர்க்கப்பட்டிருந்தால் அது புகை போன்ற நிறமுடைய குவார்ட்சு கனிமத்தை உரு வாக்குகிறது. இவ்வாறு கட்டமைப்பில் சில மின் அணு மாற்றங்களும், உலோக அணுக்களில் மாற்றங்களும் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட மையத்தை நிறமையம் என்று குறிப்பிடலாம். அதுவே ஒரு தனிமத்தின் நிற மாற்றத்தைக் கொடுப்பதற்குக் காரணமாகின்றது. 4. ஒரு கனிமத்தில் உள்ள உலோகம் ஒரு நிலை யிலிருந்து (Fe+) மற்றெரு நிலைக்கு (Fe+) மாறுவ தாலும், கனிமத்திலுள்ள உலோகம் (V5+) அதனுள் இருக்கக்கூடிய அலோகங்களோடு சேர்ந்து மாறுபடுவ தாலும் ஒரு கனிமத்தின் நிறம் மாறுபடலாம். 5. ஒரு கனிமத்தினுள் கரிமப்பொருள்கள் உள் ளடக்கப்படுவதால் அப்பொருள்களுக்கு ஏற்ப நிறம் மாறுபடலாம். எ.கா. பவளம், பழுப்பு நிலக்கரி 6. ஒரு கனிமத்திலிருந்து தாமாகப் பிரிந்து வெளி வரும் இயல்பைக் கொண்ட எலெக்ட்ரான்களின் அமைப்பைப் பொறுத்து நிறமாற்றங்கள் காணப் படும். இத்தகைய அணுக்கள் நிறைந்த கனிமங்கள் சிறந்த மின் கடத்திகளாகப் பயன்படும். இயல்புத் தங்கம், செம்பு போன்றவை இவ்வகையைச் சாரும். சகப்பிணைப்பு (covalent bond) அமைப்புக் கொண்ட பகுதி மின் கடத்திக் (semiconductor) கனிமங்கள் மின்கடத்தும் திறனுக்கு ஏற்ப நிற ஈர்ப்புத் தன்மை யைப் பெற்றுப் பலவகையான நிறங்களைப் பெறு கின்றன. எ.கா. வைரம். சின்னபார், கலீனா போன்றவை. இதுபோல் மின்கடத்தாப்பொருள்களில் சிறிதளவு மாசுப்பொருள்கள் கலந்துவிட்டால் வெவ் வேறு நிறத்தைப் பெறுகின்றன. வைரம் நைட்ரஜன் அணுக்கள் சேர்வதால் மஞ்சள் நிறமும், போரான் மூலக்கூறுகள் சேர்வதால் நீல நிறமும் பெற்றுக் காணப்படுகின்றது. வைரத்தில் நைட்ரஜன் சேரும் போது அது கொண்டுள்ள ஐந்து எலெக்ட்ரான்களில், நான்கு எலெக்ட்ரான்கள் சமமான கார்பனுடன் மாற்றிக் கொள்வதால் அங்கு மிகுதியாக உள்ள ஓர் அணு சிறிதளவு மிகு ஒளியை ஈர்க்கச் செய்கிறது. 9. ஒரு கனிமம் உடைபடுவதால் ஒரு புதிய ஒளி முறிவு எண் பெற்று, அதன் ஒளிபிரிகைப் (dispersion ) பண்பில் வேறுபடுவதால் நிறத்தில் மாறுபட்டுக் காணப்படுகிறது. இப்பண்பையே மாணிக்கக் கற் களைக் குறிப்பிட்ட கோணங்களில் அறுப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். 10. ஒரு கனிமத்தினுள் வேறு கனிமத்துக்கள்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாலோ, ஒரு கனிமமும் மற் றொரு கனிமமும் சேர்ந்து ஒன்றாக மாறி உரு அமைப்புப் பெற்று இணைந்திருப்பதாலோ ஒளிச் சிதறல் ஏற்பட்டு, நிறம் மாறுபட்டுக் காணப்படு கின்றது. 11. கனிமத்துடன் காற்றுப் போன்ற பொருள் கள் இலையைப் போன்று படர்ந்து உள்ளடக்கப் பட்டிருப்பதால் ஒளி முறிவு ஏற்பட்டுப் பளபளப்புப் பெறுகின்றது.சால்கோ பைரைட்டு போன்ற கனிமம் இத்தன்மை பெறுகிறது. இதுவே நீரில் எண்ணெய் சிதறும்போது காணப்படும் பலநிறப் பளபளப்புக்குக் காரணமாகிறது. 12. சில கனிமங்களில் ஒளிச்சிதறலும், ஒளித் தடையும் அதனுள் அடக்கியுள்ள பொருள்களினால் ஒருசேர அமைவதால் ஒளிப்பிரதிபலிப்பும், ஒளி ஈர்ப் பும் மாறி மாறி அமைந்து பளபளப்பைக் கொடுக் கின்றன.எ.கா. ஓப்பல், லேபுரோடோரைட். இருப் பினும் வெர்னர் என்பார் கனிமங்களைக் கண்டறி வதற்கும் எளிதில் விளக்குவதற்கும் எட்டு நிறங் களைப் பயன்படுத்தினார். இந்நிறங்களும் அவற்றின் திண்மப் பண்புகளும் கனிமங்களின் நிற வகை களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றைத்தவிர உலோகங்களின் இயல்பு நிறங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகத் தங்கம்