பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/483

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல்‌ பண்புகள்‌, கனிமம்‌ 459

கிறது.ஒப்பல், கெப்பரடோரைட்டு போன்ற கனிமங் களில் இப்பண்பு காணப்படும். ஒப்பல், பூனைக்கண் என்று அழைக்கப்படும் குவார்ட்சு போன்ற கனிமங் கள் பால் அல்லது முத்துப் போன்ற ஒரு வகையான மிளிர்வைக் கனிமத்துள்ளிருந்து வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. இப்பண்பு பால் மிளிர்வு (opalescence) என்று அழைக்கப்படுகிறது. ஒரு கனி மம் தன்னுள் கொண்டுள்ள மிக நுண்ணிய கனிமப் பிளவு வரி அமைப்புகளாலோ நுண்ணிய புறக்கனி மங்களை வரிசையாகத் தன்னுள் அடக்கி இருப்பத னாலோ ஒளி பரப்புதல் தடைப்பட்டு, ஒன்றிற் கொன்று பிரதிபலிப்பை உண்டாக்கி மாறிமாறி மிளிர்வு பெற்று ஒரு வகையான பளபளப்பு உண் டாவதை நிற மிளிர்வு (iridescence) எனலாம். சில கனிமங்களின் மேற்புறத்தைக் காற்றுப்புறத்திற்கும், சூரிய ஒளிக்கும் கொணரும்போது அதன் ஒளிரும் நிறப்பண்பிலிருந்து தீயகீற்றினாலோ கந்தகம், இரும்பு போன்ற உலோகங்களால் ஏற்படக்கூடிய வேதி மாற்றங்களாலோ அக்கனிமத்தினுள் பொதிந் துள்ள நுண்ணிய, வெளிக்கனிமப் பொருள்கள் வேதி மாற்றத்திற்கு உட்படுவதாலோ, இயற்கையான ஒளி யிலிருந்து ஒளிர்வு மங்கிக் காணப்படும் பண்பு மெருகு மங்குதல் (tarnish) என்று அழைக்கப்படும். செம்பு கலந்த பைனாட்டுக் கனிமத்தின் நிறமிளிர்வு நாளடைவில் போவதைக் குறைந்து கொண்டே காணலாம். போர்நைட்டு என்னும் கனிமத்தை வெட்டி எடுக்கும்போது அதன் மிளிர்வு நாளடை வில் மங்கிக் காணப்படும். ஆன்த்ரசைட்டு என்னும் நிலக்கரிக் கனிமமும், ஹேமடைட்டுஎன்னும் இரும்புத் தாதுவும் அதன் மேற்புறத்தில் காற்றுப்பட்டுச் சிதைவுறுவதன் மூலம் நிறம் மங்கி வேறொரு கனி மம் போல் தோற்றமளிக்கும். சஃபையர் என்னும் கனிமத்தின் மீது ஒளியைப் பிரதிபலிக்கச் செய்தால் ஆறு கதிர்வீச்சுக்களைக் கொண்ட நட்சத்திரம் போன்று அதனுள் அடங்கியுள்ள இரட்டுறல் சமச்சீர் பண்பினால் பிரதிபலிக்கும். ஃபிளாகோபைட்டு என்னும் குறை தரக் கனிமத்தின் மேல் ஒளியைப் பிரதிபலிக்கச்செய்யும்போது அதனுள் பொதிந்து நுண்ணிய ரூட்டைல், டூர்மலின் இருக்கும் மிக போன்ற கனிமங்கள் வரிசை வரிசையாக இருப்பதன் மூலம் அவற்றிலிருந்து பிரகாசமான ஒளிக்கதிர்வீச்சுக் கள் பிரதிபலிக்கப்படுகின்றன. சில வேளைகளில் ஒரு கனிமம் ஒரு குறிப்பிட்ட வடிவில் அமில அரிப் புக்கு உட்படுத்தப்பட்டால் அவ்வாறு அரிக்கப்பட்ட வரிக்கோடுகள் அல்லது புள்ளிகள், பள்ளங்கள் முத லியவற்றிலிருந்தும் இதுபோன்ற பிழம்பு பிரதிபலிக் கும். இதற்குக் கதிர்வம் (asterism) என்று பெயர். ஒரு கனிமம் சிதைவுறும்போது அக்கனிமம் பிளவு களின் வழியோ அக்கனிம முறிவின் வழியோ சீரான வழிகளில் சிதைவுற்றுச் சில கரைசல்களால் அரிக் கப்பட்டுச் சீராக அமைக்கப்பட்ட அரிப்புப் இயற்பியல் பண்புகள், கனிமம் 459 பள்ளங்களையோ ஒன்றிற்கொன்று இணையாக உள்ளடக்கப்பட்ட வெவ்வேறு கனிமப் பகுதி களையோ கொண்டிருக்கும்போது அவற்றிலிருந்து உள்மிளிர்வு (schillerization) ஏற்படுகிறது. இப் பண்பு பிரான்சைட்டு என்னும் பைராக்சின் கனிமத் திலும், ஹைபார்ஸ்தீன், ஆலிகோகிலேசு என்னும் கனிமங்களிலும் காணப்படும். ஒரு கனிமத்தை ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் கொணரும் போது, தேய்ப்பதாலோ, கீறுவதாலோ, நசுக்குவதாலோ ஒருவிதமான திடீர்ஒளி ஏற்படுவதுண்டு. வளி மண்டலத்திலுள்ள நைட்ரஜன் அணுக்கள் இக்கனி மத்தின் மேற்புறத்தில் தேய்வுறும்போது சிதைவுறுவ தால் இத்தகைய ஒளி ஏற்படலாம். ஆனால் கனி மத்தின் உள்ளே ஏதேனும் மின் செறிவு ஊட்டக் கூடிய பொருள் பொதிந்திருந்து அவற்றின் மூலமாகத் திடீர்ஒளி ஏற்பட்டால் அது உராய்வு மின்ஒளிர்வு (tribo luminescence) எனப்படும். இப்பண்பு அர கோனைட்டு பேரைட்டு கால்சைட்டு டோலமைட்டு ஜிப்சம் வைரம் போன்ற கனிமங்களில் காணப்படும். டோலமைட்டு கனிமத்தை மக்னசைட்டு கனிமத்தி லிருந்து இப்பண்பின் மூலமாக வேறுபடுத்த இயலும். இத்தகைய கனிமங்கள் ஒரு கரைசலிலிருந்து படிகங் களாக உருவாகி வரும் போது ஒரு வகையான மின் ஒளிர்வைப் பெற்று ஒளியுடன் காணப்படும். அர் சனிக் ஆக்சைடு படிகமாகும்போது இப்பண்பு காணப்படும். ஸ்பேலரைட்டு ஹாலைட்டு ஜிப்சம் போன்றவற்றில் இதுபோன்ற படிக மின் ஒளிர்வு காணப்படும். ஒரு கனிமத்தைப் படிப்படியாக வெப்பப்படுத்துவதால் அது ஒளிர்வுபெற்றுப் பிரகாச மாகும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலைக்குப் பின் அது மாற்றம் ஏதும் பெறாது மீண்டும் பழைய நிற மிளிர்வைப் பெறும். இப்பண்பைப் பயன்படுத்தி ஒரு கனிமம் எவ்வளவு ஆழத்தில் உருவானது, எந்த அழுத்தநிலையில் போன்றவற்றைக் காண இயலும். கால்சைட்டு போன்ற கனிமங்களில் இப்பண்பை எளிதில் காணலாம். இதை வெப்ப மின் ஒளிர்வு (thermoluminescence) என்பர். லி உருவானது ஒரு கனிமத்தின் சுவை (taste) பண்பு (odour ) ஆகியவற்றை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்தலாம். கூடியதாக ஒரு கனிமம் கரையக் இருப்பின் அக் கரைசலின் சுவையறிந்து அக்கனிமம் எவ்வகையைச் சார்ந்தது என்று கூற இயலும். (எ.கா) உவர்ப்பு- சாதாரண உப்புப் படிகத்தின் பண்பு, துவர்ப்பு மயில்துத்தம் வகையைச் சார்ந்தது, இனிமை கலந்த துவர்ப்பு -படிகாரம் கலந்த படிகங்கள். காரம் குளிர்ச்சி சோடியம் போன்ற காரம் கலந்த உப்புகளும், கனிமங்களும். வெடியுப்புக்கலந்த கனிமப் பொருள்கள்