460 இயற்பியல் பண்புகள், கனிமம்
460 இயற்யியல் பண்புகள், கனிமம் கசப்பு புளிப்பு மணம் எப்சம் உப்புக்கலந்த கனிமப் பொருள்கள் கந்தக அமிலம் கலந்த கனிமப் பொருள்கள் சில கனிமங்களைத் தேய்க்கும் போதோ, வெப்பப்படுத்தும் போதோ, நொறுக்கும்போதோ ஒருவிதமணம் வெளிப்படும். இந்த மணத்திலிருந்து அக்கனிமங்களின் வேதிப் பண்புகளையும் அமைப்பு: களையும் அறியலாம். இதனால் அவற்றின் இனங்களையும் எளிதில் காணலாம். ஆர்செனிக் கலந்த கனிமக் கூட்டுப்பொருள்கள் வெள்ளைப் பூண்டு போன்ற மணத்தை வெளிப் படுத்தும். ஆர்செனோபைரைட்டு என்ற கனிமத்தில் செலினியம் காணப்படும். சில கனிமங்கள் கூட்டுப்பொருள்களை உள்ளடக்கி இருந்தால் அதனை வெப்பப்படுத்தும்போது அவற்றிலிருந்து சிவப்பு முள்ளங்கி அழுகும்போது உண்டாகும் மணம் வரும். இது பைரைட்டு கனிமத்தை உரசும்போது அல்லது வெப்பப்படுத்தும்போது அதிலுள்ள கந்தகம் எரிவ தால் உண்டாகும் மணம் கந்தக மணம் எனப் படும். சில கனிமங்கள் குறிப்பாகக் குவார்ட்சு, சுண் ணாம்புப் பாறைகள் ஆகியவை, வெப்பப்படுத்தும் போதோ உரசும்போதோ கெட்டமுட்டை மணத்தை உண்டாக்கும். இதற்கு முடைநாற்றம் என்று பெயர். ஈர களிமண் பொருள்கள் நிறைந்த கனிமங்கள் களி மண் ஈரமாகும் போது வீசும் மணத்தைக் கொண் டிருக்கும். சர்பன்டைன் போன்ற கனிமங்களை மாக்கும் போதும், பைரார்ஜிலைட்டு என்ற கனி மத்தை வெப்பப் படுத்தும் போதும் இது போன்ற மணத்தைக் கொடுக்கும். உணர்வு. சில கனிமங்களின் மேற்புறத்தைத் தொடும்போது ஒருவிதமான உணர்வு ஏற்படக்கூடும். அவற்றுள் செப்பியோலைட்டு என்னும் கனிமம் மசகு போன்ற உணர்வைக் கொடுக்கிறது. டால்க் கனிமம் கரடு முரடான உணர்வைக் கொடுக்கிறது. சில கனிமங்கள் வளி மண்டலத்தில் நீரை ஈர்க்கும் தன்மை பெற்று அவற்றை நாக்கில் வைத்துப் பார்க் கும் போது நாக்கோடு ஒட்டிக் கொள்ளும் பண்பும் கொண்டிருக்கும், கனிமங்களின் அமைப்பு. சில கனிமப் பொருள் கள் வளிமப் பொருள்களாகவே காணப்படுகின்றன. பெட்ரோலிய வளிமம் எரிமலையினின்று வெளிப் படும் பாதரசம், பெட்ரோலியம் போன்ற கனிமப் . ஏனைய பொருள்கள் திரவ நிலையில் உள்ளன. அனைத்துக் கனிமப் பொருள்களும் திண்ம நிலையில் உள்ளன. அவை ஒன்றோடொன்று சேர்ந்து உரு வாகும் பல நிலைகள் கனிமப் பொருள்களை வேறு படுத்திக் காண்பதற்கு உதவுகின்றன. இது போன்ற கனிம அமைப்பைப் பலவகைகளாக, இனங்களாகப் பிரித்துக் கூறலாம். இவை சிறந்த பொருத்தமான சூழ்நிலை, மூலப் பொருள் தட்பவெப்ப நிலை, அழுத்தம் ஆகியவை இருக்கும்போது ஒழுங்கான வடிவங்களைப் பெற்ற படிகங்களாகக் கிடைக்கின் றன. படிகங்களாக இருக்கும்போது அவற்றின் பக்கங் களின் எண்ணிக்கை, வடிவம், படிகமாகியுள்ள படிகத் தொகுதி முதலியவற்றைக் கொண்டு அவ றின் இனம் அறியப்படுகிறது. படிகங்களாக உரு வாகும் போது ஒரே வேளையில் பல படிக நிலையில் உருவாகி ஒருங்கிணைவதால் அவை ஒரு குறிப்பிட்ட தெளிவான, வடிவற்ற, ஒன்றினின்று ஒன்றைப் பிரித்து அறிய இயலாத அளவிற்கு இணைந்து காணப்படும். அருதிஸ்ட்டு, கால்சைட்டு போன்ற கனிமங்கள் இப்பிரிவைச் சாரும். சில வேளைகளில் படிகமாகக் கூடிய பாறைக்குழம்புகள் திடீரெனக் குளிர்ச்சி அடைவதாலோ அழுத்தம் குறைவதாலோ ஒரே நேரத்தில் அனைத்தும் படிகமாகி அவை முழு உருப்பெறா. மிக நுண்ணிய படிக மணிகளாக இருக்கும் போது ஒன்றொடொன்று இனம் பிரியாத நிலையில், ஒருங்கிணைந்து காணப்படும் கனிமங்கள் மிக நுண்ணிய படிக நிலைக் (cryptocrystalline) கனிமங்கள் எனப்படும். சால்சிடொனி, ஃபிளின்ட், செர்ட்டு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு களாகும். கனிமங்கள் மணிகளாக உருவாகி இருக்கும். போது அவற்றின் அளவுகளைக் கொண்டு இனம் பிரித்துக் காணப் பயன்படும். ஒரு கனிமத்தினுள் உள்ள மணிகள் தனித்தனியே கண்ணால் காணும் அளவிற்கு உருவாகியிருக்கும் போது பருவெட்டான படிக மணி அமைப்பு (coarse grained crystalline structure) என்றும், அம்மணிகள் சற்று உற்று நோக்கி இனம் பிரிக்க இயலும் போது மிதபரு வெட்டான (medium grain) படிக மணி அமைப்பு என்றும் பெயர் பெறும். அப்படிக மணிகள், ஒரு சிறிய உருப் பெருக்கு ஆடியைக் (magnifier) கொண்டே இனம் பிரித்து அறிய இயலும் என்ற நிலையில் நுண்ணிய மணிகளாலான படிக அமைப்பாகக் காணப்படும். அவ்வித உருப்பெருக்கு ஆடியைக் கொண்டும் அக் கனிமங்களிலுள்ள படிக மணிகளை இனம் பிரிக்க முடியாத நிலையில் கனிம மணிகளைக் கொண்டிருப் பின் அவை மிக நுண்ணிய படிக மணி அமைப்பு எனப்படும். சில சுண்ணாம்புப் பாறைகள் முழு ஆனவை நிலையில் உருவெடுத்த படிக மணிகளால் யாகக் காணப்படுகின்றன. தனித்தனி மணிகளாக இருப்பதை உணரும் நிலையில் இருந்தால் அவை