பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்பியல்‌ பண்புகள்‌, கனிமம்‌ 461

சர்க்கரை அமைப்பு என்று பெயர் பெறும். ஹேம டைட்டு என்னும் கனிமம் அடிக்கடி நுண்ணிய மணி களால் ஆனவையாகக் காணப்படும். நுண்ணோக்கி யின் கீழ் ஒரு கனிம மணிகள் தெளிவாக இனம் பிரித்துக் காணக் கூடிய நிலையைப் பெற்றிருந்தால் புலனாகு படிக மணி அமைப்பு (phaneric crystalline) எனப்படும். நுண்நோக்காடியின் கீழ் அம்மணி களைக் கண்டறிய இயலாதபடிக மணி அமைப்பைப் பெற்றிருந்தால் அவற்றை மிக நுண்ணிய படிக மணி அமைப்பு என்பர். கனிமம் திண்மையான நிலையில் உருவாகியிருந் தாலும், அவற்றின் வடிவம் எப்பொழுதும் மற்றொரு பொருளின் வடிவையொத்துக் காணப்படும். அவை ஒரு நிலைத்த நிலையில் எப்பொழுதும் காணப் படுவதால் அதுபோன்ற ஒப்புமை உருவங்களைப் பெற்றுள்ள அமைப்புகள் சிலவற்றைக் காணலாம். ஹேமடைட்டு என்னும் கனிமம் சிறுநீரகம் அல்லது முந்திரி வடிவில் காணப்படும். இது மாங்காய் வடிவுற்ற அமைப்பு எனப்படும். ஒரு முந்திரிக் குலையில் எவ்வாறு முந்திரி ஒன் றோடொன்று ஒட்டிக் காணப்படுகிறதோ அது போல் வட்டமான பல மணிகள் ஒன்றோடொன்று ணைந்து லிமோனைட்டு, கார்ஸ்லிடொனி, பிரக னைட்டு போன்ற கனிமங்களில் உள்ளன. இந்த அமைப்பு குமிழ்க்குலை எனப்படும். குமிழ்க்குலை அமைப்பைப் போன்றிருந்தாலும் அதில் உள்ள ஒவ்வொரு குமிழ்வடிவுற்ற அமைப்பும் தனித்தனியாக காணும் நிலை படுக்குமிழ் குலை வடிவமைப்பு என னப்படும். இவ்வமைப்பு மால் கைட்டு போன்ற கனிமங்களில் காணப்படும். உருண்டை த் துகள்களாகக் கதிர்வீச்சுப் போன்ற நேர் கோடுகளிலோ அல்லது அரைவட்ட வடிவு களிலோ அவை தனித்தனியாக ஒன்றோடொன்று ஒட்டியிருப்பது போல் அடுக்கப்பட்டவையாக அமைந்திருந்தால் அவை உருண்டைத் துகள் வடி வமைப்பு எனப்படும். கனிமங்கள் முண்டு முடிச்சுகள் போன்று ஒழுங்கற்ற வடிவில் புடைத்துக் (protuberance) காணப்பட்டால் முண்டுமுடிச்சு (nodular) அமைப்பு எனப்படும். மாங்கனிஸ், பாஸ் பரஸ் ஆகியவை இந்நிலையில் காணப்படும். சில வாதுமைக் கொட்டை வடிவ அமைப்பு, சற்று மிதமான உருண்டையான துகள்களால் ஆகிய வடிவு அமைப்புகள் ஒருங்கே ஒன்றோடொன்று இணைந்து இருப்பின் வாதுமைக் கொட்டை வடிவ அமைப்பு அல்லது கண்ண அடைவுகள் அமைப்பு (amygdaloidal structure) எனப்படும். இது போன்ற அமைப்பு பெரும்பாலும் என்னும் பாறையில் காணப்படும். டயாபேஸ் இயற்பியல் பண்புகள், கனிமம் 461 பவளப்பாறைகள், புற்றுகள் கிளை அல்லது சிம்புடன் வளர்ந்து காணப்படுவது போன்ற அமைப் பைப் பெற்றிருப்பதோடு வெண்மையான நிறம் பெற்றிருப்பின் அவை பவளப்பாறை அமைப்பு (coralkoidal) எனப்படும். இவை அரசோனைட்டு என்னும் கனிமத்தில் பெரும்பான்மையாகக் காணப் படும். மரம் அல்லது செடி கிளைகள் படர்ந்து காணப் படுவது போல் படிக நிலையில்லாத கனிமங்களும் தோன்றுவதுண்டு. இது போன்ற அமைப்பு தங்கத் திலும், ஆகைட்டு அல்லது சுண்ணாம்புப் பாறை யிலும் படர்ந்து இருக்கும். மாங்கனிஸ் ஆக்சைடு கனிமங்களிலும் காணப்படும். பாசிகள் தோற்ற போல் படர்ந்திருப்பது மளிக்கும் வகையில் சில படிக அமைப்புகள் அமையப் பெற்றிருந்தால் அவை பாசி அமைப்பு (mossy) எனப்படும். ஆகைட்டு என்னும் கனிமத்தில் இது காணப்படுகிறது. மிக நீண்ட பருமனற்ற குழல் போன்ற அமைப் பில் அடுக்கடுக்காகப் படிகங்கள் காணப்படும் அமைப்பு நார் அமைப்பு (filiform) அல்லது நுண் புழை அமைப்பு (capillary ) எனப்படும். மில்லரைட்டு கனிமத்தில் இது காணப்படுகிறது. நார்போன்ற ஆனால் திடமான், கடினமான ஊசி போன்ற அமைப்பையும் கொண்டிருப்பின் அது ஊசி அமைப்பு (acicular) எனப்படும். இது ஸ்டிப னைட்டு என்ற கனிமத்தில் காணப்படுகிறது. நார் அல்லது கட்டி போன்ற படிக அமைப்புகள் குறுக்கும், நெடுக்குமாக இணைக்கப்படும்போது வில்லைப் போன்ற ஓர் அமைப்பு ஏற்படுகிறது. இதை ரூட்டைல், அபிரகக் கனிமத்தினுள் பொதிந்திருக்கும் போது காணலாம். பல படிகங்கள் ஒரு கொப்பறை போன்ற பாறைக்குழிகளில் அல்லது ஒரு கனிமப் பள்ளங்களில் ஒன்றோடொன்று அடுத்தடுத்து இருப்பது போல் பதிந்திருக்கும் அமைப்பு நுண்படிகப் பொருக்கு அமைப்பு என்றழைக்கப்படுகிறது. இது குவார்ட்சு கனிமத்தில் காணப்படும். சுண்ணாம்புப் பாறைகள் போன்ற அமைப்பில் நீர் உள் நுழைந்து அப்பாறைகளாலான குகைகள், பள்ளங்களில் வெளிவரும்போது அக்கரைசல்களில் உள்ள நீர் ஆவியாகிப் போவதால் அக்குகைகளின் மேற்புறத்தில் கனிமப் பொருள்கள் ஒட்டிக் கொள் கின்றன. அதே முறையில் தொடர்ந்து நீர் கரைசல்களி லிருந்து ஆவியாகிக் கொண்டேயிருப்பதால் இக் கனிமப் பொருள்கள் ஒன்றின்மேல் ஒன்றாக ஒட்டி வளர்ந்து குகையின் மேலிருந்து தொங்கிக்கொண்டு ஆலவிழுதுகள் போன்று உருவெடுக்கின் றன. இது