இயற்பியல் பண்புகள், கனிமம் 463
கனிமத்தை முற்றிலுமாக அரித்து அதே உருவில் ஒரு புதிய வேதிப் பண்பு பெற்ற கனிமத்தை உருவாக்கி விடுவது இடப்பெயர்ச்சிமாற்று உருப்பெறல் எனப் படும். 4. ஒரு கனிமம் மற்றொரு கனிமத்தால் காலச் சிதைவில் சிறிறு சிறிதாக மாற்றப்பட்டுத் தன்னுரு வில் மற்றொரு கனிமத்தின் வேதிப் பண்பை நாளடை வில் பெற்றுக் கனிம மாற்றம் அடைவதன் மூலமாக இதுபோன்ற போலி உருவினைப் பெறக்கூடும். அடிக்கடி ஆலிவைன் கனிம உருவில் சர்பன்டைன் கனிமமிருப்பதை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதுபோன்று போலி உருப்பெற்றிருப்பதை அக்கனி மத்தின் படிகப் பக்க விளிம்புகள் தெளிவற்றிருப் பதிலிருந்தும், மங்கிய மிளிர்வில் தெளிவற்ற மணிகள் இருப்பதிலிருந்தும் காண இயலும். பல உருவமாதல். ஒரே வேதிப் என்ற ஒரு பண்பைக் கொண்டு வெவ்வேறு நிறம், கடினத்தன்மை, படிக அமைப்பு, அடர்த்தி எண் போன்ற இயற்பியல் பண்புகளைக் கொண்டு இரு தனிக் கனிமங்களாகத் தோன்றுவது ஈர் உருவாதல் எனப்படும். எ.கா. கிராபைட்டு, வைரம், கால்சைட்டு. அசோனைட்டு. இதே பண்பில் டைட்டேனியம் டை ஆக்சைடு என்ற கூட்டுப் பொருள், ரூட்டைல் ஃபுருக்கைட்டு, அனட் டேஸ் மூன்று கனிமங்களைக் கொடுப்பதால் இவ்வமைப்பு, மூஉருவாதல் எனப்படும். இதுபோன்ற பண்புகள் பல கனிமங் களில் காணப்பட்டால் அவற்றைப் பல உருவமாதல் (polymorphism) எனலாம். படிகம் அல்லது படிகமணி அல்லது ஒரு திண்மக்கனிமம் நொறுக்கப் பட்டால் அல்லது ஏதேனும் ஒரு அழுத்தம் அதன் கொடுக்கப் நீள்மீட்சித் தன்மை விஞ்சும் வரை பட்டால் அது நொறுங்கும் அல்லது உடையும். அவ்வாறு உடையும்போது ஒரு குறிப்பிட்ட அச்சுப் போக்கில் அக்கனிமத்தின் ஒரு படிக அச்சிற்கு இணையாக இருப்பது போல் உடைவதைக் கனிமப் பிளவு எனலாம். படிக அச்சுகளால் கட்டுப்படுத்தப் படாமல் மாற்று அச்சுகளுக்கு இணையாக உடை வதைக் கனிமப் பிரிவு என்றும், ஒழுங்கின்றி நொறுங் கும் தன்மை பெறுவதைக் கனிம முறிவு என்றும் கூறலாம். கனிமப்பிளவு. ஒருகனிமத்தின் அணு அமைப்பை யும், அந்த அணுக்களின் இணைப்பு வலிமையை யும், அந்த அணுக்கள் பரவியிருக்கும் நிலையை யும் பிரதிபலிக்கும் பண்பு கனிமப்பிளவாகும். ஒரு கனிமம் பிளவுபட்டால் அக்கனிம அமைப்பில் உள்ள தாள்படலங்கள் தமக்குள் உள்ள அணுக்களை இறுக ணைத்திருப்பினும், மற்றொரு படலத்தோடு கொண்டுள்ள இணைப்பு வலிமைகுன்றிக் காணப் படுவதாகக் கொள்ளலாம். இவ்வாறு தாள்படல கனிமங்களின் போக்கு அமைப்பைப் பெற்றுள்ள இயற்பியல் பண்புகள், கனீமம் 463 கனிமப் பிளவைப் பெற்றிருப்பதாக அமையும். கிராஃபைட்டு, அபிரகம் போன்றவை இவ்வகையைச் சாரும். இதுபோன்று அமைந்துள்ள, சக பிணைப்புக் கரிம அணுக்கள், தாள்படலங்களாக இணைக்கப் பட்டுள்ளன. ஆனால் அதன் ஒரு படலமும் மற் றொரு படலமும் வலிமைகுன்றி வான்டர் வால்ஸ் என்னும் இணைப்பு ஆற்றல் முறையில் இணைக்கப் பட்டுள்ளதால் படலங்களைத் தனித்தனியே எளிதில் பிரிக்க இயலும். இதனைப் போன்று டால்க் என்ற கனிமம் படல் இணைப்புப் பெற்றுள்ளதால் எளிதில் உடைக்கப்படுகிறது. ஆனால் அபிரகத்தில் ஒரு படலத்திற்கும், மற்றொரு படலத்திற்கும் டையில் பொட்டாசியம் அணுக்கள் அமைந்து ணைக்கின்றன. இவ்விணைப்புப் படலங்களுக்கு உள்ளே அதன் அணுக்கள் இணைக்கப்பட்டிருப்பதை விட ஒரு படலத்திற்கும், மறு படலத்திற்கும் இடையே உள்ள பொட்டாசியம் இணைப்பும், வலிமை குன்றிக் காணப்படுவதால் அடியிணை வடிவுப்பக்கத்திற்கு ணையாகப் படவங்கள் எளிதில் பிளந்து பிரிக்கப் படுகின்றன. இவற்றை உற்று நோக்கும்போது கனி மப் பிளவுகள் அணுக்களின் உள்ளமைப்பை மட்டு மன்றி அவற்றின் வேதிப் பண்பையும் பொறுத்து உருவாவது அறியப்படுகின்றது. படிக அமைப்பு களைப் பெற்றுள்ள கனிமத்தொகுதிகள் அவற்றின் பண்புகளில் வேறுபட்டிருப்பினும் ஒரே மாதிரியான கனிமப்பிளவைக் காண்பிக்கக்கூடும். எடுத்துக்காட் டாகச் செஞ்சமச் சதுரப் படிகத் தொகுதியில் உருவாகும் ஹாலைட்டு என்ற சோடியம் குளோரைடு பொட்டாசியம் என்னும் கனிமமும், சில்லைட்டு குளோரைடு கனிமமும், பெரிக்கிளேசு என்னும் மக்னிசியம் ஆக்சைடு கனிமமும், கலீனா என்னும் ஈய சல்பைடும் ஒரே மாதிரியான கனிமப் பிளவு களைப் பெற்றுக் காணப்படுகின்றன. ஒரு கனிமப்பிளவு ஒரு கனிமத்தின் படிகப் பக்கத்திற்கோ, அதையொத்த ஒரு படிகப் பக்கத் திற்கோ இணையாகவே காணப்படும். பொதுவாகப் பக்க அச்சுகள் எளிதான சுட்டெண்களைக் (indices) கொண்டவையாக இருக்கும். ஒரு கனிம அமைப்பில் இதுபோன்ற கனிமப் பிளவு வரிசையாக அக்கனிமத்தின் முழு அமைப்பிலும் இருப்பதைக் காணலாம். இருப்பினும் இக்கனிமப் பிளவை அது எப்படிகப் பக்கத்திற்கு இணையாக உள்ளதோ அப் பக்கத்தையே கனிமப்பிளவின் பெயராக அமைப்ப துண்டு. அப்பக்கத்தின் சுட்டெண்களைக் கனிமப் பிளவுக்குக் குறி எண்களாகக் கொடுப்பதுண்டு. எடுத்துக்காட்டாகச் செஞ்சமச் சதுரக் கனிமப் பிளவு (100) அல்லது எண்முக வடிவு கனிமப் பிளவு (III) என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு கனிமத்திற்கு ஒரு திசை அல்லது ஒரு படிக அச்சிற்கு இணையாகவோ பல திசை அல்லது மற்ற