466 இயற்பியல் பண்புகள், கனிமம்
466 இயற்பியல் பண்புகள், கனிமம் கிராஃபைட், ஸ்டிப்னைட்டு, ஜிப்சம் போன்ற கனி மங்கள் கத்தியால் அறுக்கப்பட்டால் துண்டுபடு கின்றன. இயற்கையாகக் கிடைக்கும் தங்கம், வெள்ளி, செம்பு போன்ற உலோகங்கள் தகடாகின் றன. டால்க், செலினைட்டு போன்ற கனிமங்கள் வளைகின்றன. அபிரகம், குளோரைட்டு போன்ற தனிமங்கள் அழுத்தம் நீக்கப்பட்டால் மீண்டும் பழையநிலைக்கு வரும் மீள்பண்பைப் பெற் றுள்ளன. இரும்பு பைரைட்டு, அப்படைட்டு, ஃபுளோர்ஸ்பார் போன்ற கனிமங்கள் அழுத்தம் நீக்கப்படும்போது பழைய நிலையை அடையாது நொறுங்கித் துகள்களாகின்றன. கெட்டித்தன்மை என்பது ஒரு பொருள் உடைவதற்கு முன் உட்கவரும் அழுத்தத்தன்மையின் வலிமை அளவேயாகும். இத் தன்மை ஒரு தனிப்பட்ட படிகத்திலிருப்பதைவிட பல கனிமப் படிகத்தொகுதிகளில் மிகுந்து காணப் படும். பல வைரக்கற்கள் ஒன்றோடொன் று பின்னிப் பிணைந்து வளர்ந்து காணப்படும். கார்போ னோடோ என்னும் கனிமத்தை உடைக்க ஒரு தனிப் பட்ட வைரப்படிகத்தை உடைப்பதற்குத் தேவை யான ஆற்றலைவிட மிகுந்த ஆற்றல் தேவைப்படு கிறது. இக்கெட்டித் தன்மையைக் கடினத்தன்மை யோடு ஒப்பிட இயலாது. கடினத்தன்மை. ஒரு கனிமத்தை ஏதேனும் ஒரு பொருளைக் கொண்டு உரசும்போது அந்த உராய் வினால் அதன் மேற்பகுதியில் உண்டாகக்கூடிய பொறிப்புத் தன்மை (identation) அதன் வலிமையை யும், கடினத்தன்மையையும் (hardness) உராய்வைத் தடுக்கும் திறமையையும் பொறுத்தமையும். இவ்வாறு உரசும்போது உராய்வு ஏற்படாமல் தடுக்கும் வலிமை அக்கனிமத்தின் கடினத்தன்மை எனப்படும். ஒரு கனிமம் மற்றொரு கனிமத்தின்மீது உராயும் போது எவ்வளவு எளிதில் பொறிப்பு உண்டாக்கு கிறதோ அதைப் பொறுத்து அக்கடினத் தன்மையின் வலிமை அளவிடப்படுகிறது. மோஸ் (Mhos) என்பவ ரால் இவ்வலிமை பத்து வகையாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. அந்த அளவீட்டை, கடினத்தன்மை அளவிடும் மோஸ் அளவைச் சொல் என்பர். அவை டால்க், ஜிப்சம், கால்சைட்டு, புளுரைட்டு, அப் படைட்டு, ஆர்தோகிலாசு, குவார்ட்சு, டோப்பாஸ் குருந்தக்கல், வைரம் ஆகியன. இந்த அளவுகோலில் கொடுக்கப்பட்டுள்ள கனிமங்களின் பகுதிகளை வைத்துக்கொண்டு கடினத்தன்மை தெரியாத ஒரு கனிமத்தை எடுத்து உராய்வதன் மூலம் அது ஏற் படுத்தும் உராய்வு வலிமையைப் பொறுத்து அக் கனிமத்தின் கடினத்தன்மையைக் (எடுத்துக்காட்டாக 64. 64. 6) கணித்துவிடலாம். ஒன்று என்ற கடினத் தன்மை அளவுடைய கனிமங்கள் கைகளால் தொட்டுப் பார்க்கும்போது ஒரு விதமான மசகு போன்ற பிசுபிசுப்புத் தன்மையைப் பெற்றிருக்கும். இரண்டு என்ற கடினத்தன்மை கொண்ட கனிமங் களின் பெருமக் கடினத்தன்மையை அளவிடுவதற்கு ஸ்கேலரோமானி (scalerometer) என்ற கருவி பயன் படுத்தப்படுகிறது. இந்த அளவுகோலை அடிப்படை யாகக் கொண்டு கனிமங்களின் கடினத்தன்மையைக் கணக்கிடலாம். எக்சனர் என்பார் ஒரு கனிமத்தை 0 முதல் 1800 வரை 100 அல்லது 5° அளவில் ஒரு கடினத் தன்மை அளவீட்டை எடுத்து அதன் ஒரு பக்கத்தி லிருந்துமறுபக்கத்திற்கு இடைப்பட்ட வெவ்வேறு இடங்களின் கடினத்தன்மையைக் கொண்டு கடினத் தன்மை வளைவு ஒன்றைத் தயாரித்துள்ளார். இதிவி ருந்து ஒரு கனிமத்தின் கடினத்தன்மை அதனுடைய கனிமப்பிளவுத் தன்மையைப் பொறுத்துப் பக்கத் திற்குப் பக்கம் மாறுபடும் என்பது கண்டறியப் பட்டுள்ளது. எ.கா. கயனைட்டு கனிமம். ஒரு கனிமம் அதைவிட எளிய கனிமத்தின் தளத்தில் பொறிப்பை உண்டாக்குகிறது. அப்பொறிப்பு நுண்ணோக்கியால் ஆய்வு செய்யப்படுகிறது. கடினத்தன்மையும் அக்கனிமத்தினுடைய வேதிப் பண்புகளும் ஒருவிதத்தொடர்பு பெற்றவையாகக் காணப்படும். அவற்றைக் கீழ்க்காணுமாறு கூறலாம். தங்கம், வெள்ளி, செம்பு, பாதரசம், ஈயம் போன்ற கன உலோகங்களை உள்ளடக்கியுள்ள கனிமங்கள் பொதுவாக, மிருதுவாகவும், கடினத்தன்மை எண் மூன்றுக்குள்ளும் விதிவிலக்காகப் இருக்கும். பிளாட்டினம் 4-41 கடினத்தன்மை எண்ணும், இரும்பு4 கடினத்தன்மை எண்ணும் பெற்றுள்ளன. கந்தகக் கனிமங்கள் ஐந்திற்குக் குறைவான கடினத் தன்மை எண்ணைப் பெற்றுள்ளன. எ.கா. இரும்பு, நிக்கல், கோபால்ட்டு, சல்ஃபைடுகள். செறிவுள்ள கனிமங்கள் ஐந்திற்கு குறைவான கடினத் தன்மை எண்ணைப் பெற்றுள்ளன. நீரகச் செறிவற்ற சிலிக்கேட்டுகளும் ஆக்சைடுகளும், ஐந்தரைக்கு மேலான கடினத்தன்மை எண்ணைப் பெற்றுள்ளன. பாஸ்ஃபேட்டு, சல்ஃபேட்டு, கார்பனேட்டு போன்ற கனிமங்கள் மிருதுவாகவும், ஐந்தரைக்குக் குறைவான கடினத்தன்மை எண்ணையும் பெற்றுள்ளன. நீரசுச் கடினத்தன்மையும், ஒரு கனிமத்தினுடைய கட்டமைப்பும் ஒத்த இயல்புடைய கனிமத் தொகுதி களுக்குள் (isomorphic groups) தொடர்புடையன. இதுபோன்ற கனிமங்களில் கடினத்தன்மை மிகும் போது அக்கனிமக் கட்டமைப்பிலுள்ள அணுக்கள் சிறியனவாகக் காணப்படுகின்றன. கடினத்தன்மை மிகுந்திருப்பின் அவற்றின் இணைதிறன் (valency), கட்டுமான அடர்த்தி ஆகியவை மிகும். ஓர் அணுவின் உருவமைப்பும் அதன் அயனித்தன்மை யும் அடர்த்தியும், ஓர் அணுவிற்கும் மற்றொரு அணுவிற்கும் இடையே உள்ள இடைவெளியையும், பிணைப்பு அடர்த்தியையும் பொறுத்தனவாகும். அதனால் கடினத்தன்மை அணுக்களின் இடைவெளி