பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/492

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 இயற்பியல்‌ வரலாறு

468 இயற்பியல் வரலாறு அடியில் புதைந்து கிடக்கும் காந்தத் தன்மை பெற்ற கனிமங்களின் செறிவைக் கண்டறிந்து தோண்டி எடுப்பதற்குப் பயன்படுகின்றது. ஆய்வகத்தில் ஒரு பாறை படிகமாகும்போது அதிலுள்ள காந்த ஈர்ப்புத் தன்மை பெற்ற படிக மணிகள், அப்போதைய பூமி யின் காந்தத் துருவத்திற்கு இணையாகத் திசைப் போக்கு பெற்று உருவாவதைக் கொண்டு அப்பாறை உருவான காலத்துத் துருவ நிலையையும் கண்டங் கள் பிரிந்து சென்ற நிலையையும் கூறுவதற்குக் காரணமான ஒரு தொல் காந்த இயல் (palaeo- magnetism ) தோன்றியுள்ளது. மின் ஆற்றல். பெரும்பாலான கனிமங்கள் உலோக மிளிர்வைப் பெற்றிருக்கும். சல்ஃபைடுகள், ஆக்சைடுகள் தவிர அனைத்தும் மின் கடத்தாப் பொருள்கள் ஆகும். இம்மின் கடத்தாப் பொருள்களே வெப்பமின் ஆற்றல் பண்பு கொண்டவையாகக் காணப்படுகின்றன. மின் கடத்தும் கனிமங்கள் வெப்பநிலை ஏற்றத்தாழ்வினால் இப்பண்பைப் பெற்றுள்ளன. படிகத்தொகுதியின் படிக அச்சுக் களின் வேறுபாட்டிற்கு ஏற்ப மின் கடத்தும் திறனும் வேறுபடுகின்றது. அனைத்துக் கனிமங்களும் உராய்வினால் மின் ஆற்றல் பெறுகின்றன. அவ்வாற்றலின் வலிமை கனிமத்திற்குக் கனிமம் வேறுபடலாம். கனிமங்களுள் நேர், எதிர் மின் ஆற்றல் கொண்டவற்றைப் பிரிப்பது கடினம். ஒரே கனிமத்தில் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு நிலையில் நேராகவும் எதிர் மறையாக வும் காணப்படுகின்றன. மெருகேற்றும்போது மாணிக்கக் கற்கள் நேர் மின் ஆற்றல் பெற்றவை யாகக் காணப்படுகின்றன. ஆனால் மெருகேற்றப் படாமலேயே வைரம் மின் ஆற்றலை வெளிக்காட்டு கிறது. படிகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது நேர் மின் முனையாக இருப்பின் அதுவே குளிர்ச்சி அடையும்போது எதிர்மின் முனையாக மாறுகிறது. இதுபோல் வெவ்வேறு நிலையில் ஒரே இடத்தில் வெவ்வேறு மின் ஆற்றல் திறன் காணப் படுவது பைரா மின் ஆற்றல் எனப்படும். இக் கோட்பாடு முதன் முதலாக டூர்மலின் என்னும் கனிமத்தில் கண்டுள்ளதாக அறியப்படுகிறது. பொது வாக இக்கோட்பாடு குறைந்த சமச்சீர்மை கொண்ட படிகத் தொகுதிகளில் படிகமாகும் படிகங்களில் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. டூர்மலின் சாய்சதுர அரைப்பட்டகப் படிக வகுப்பில் படிக மாதலாலும் கொலமின் செஞ்சதுரப்படிகத் தொகுதி யின் அரைப்பட்டக வகுப்பில் உருவாவதாலும், குவார்ட்சு சாய்சதுரச் சரிவகப்பட்ட வகையில் உருவாவதாலும், ஆக்சினைட்டு முச்சரிவுப்படிகத் தொகுதியின் கீழ் உருவாவதாலும் இப்பண்பைப் பெற்றுள்ளன என்று கருதலாம். ஒரு கனிமத்தை வெப்பப்படுத்துவதால் அதன் கன அளவு மாறுபடுகிறது. மின் ஆற்றல் திறன் பெறுகிறது. இதையே வெப்பப்படுத்தாது மிகுந்த அமுக்கத்தினாலோ, இழுவையாலோ அதன் கன அளவு மாறும்படியாகச் செய்து அதன் படிக முனைகள் மின் ஆற்றல் பெறும்படியாகச் செய்ய இயலும். இது அழுத்த மின் ஆற்றல் தத்துவம் எனப் படும். இப்படிக முனைகள் இழுவையினால் உண்டான மின் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இத் தத்துவம் ஒரு மூலகக் கட்டமைப்பிற்கும், மின் கிளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. குவார்ட்சு, டூர்மலின் போன்ற கனிமங் களில் இத்தத்துவத்தைக் காணலாம். ஞா.விக்டர் இராஜமாணிக்கம் நூலோதி. Ford, W. E., Dana's Text book of Mineralogy, Willey Eastern Ltd, New Delhi, 1985; Read, H.H., Rutley's Elements of Mineralogy, CBS Publishers, New Delhi, 1984. இயற்பியல் வரலாறு தொடக்க காலத்தில் இயற்கைப் பொருள்கள் பற்றிய அறிவியலாக இயற்பியல் விளங்கியது. அரிஸ்டாட்டில் கருத்துப்படி இயற்பியல் என்பது இயற்கை நிகழ்வு களை நடைமுறையில் விளக்கிக கூறும் அறிவியல் பகுதியாகும். தற்போது அது பருப்பொருள் (matter), ஆற்றல் ஆகியவை தொடர்பான வேதியியல் நீங்க லான அறிவியலாக வளர்ந்துள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவுப் புரட்சி ஏற்படும் வரை இயற்பியல், தத்துவத்தின் இயற்கை பற்றிய ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கலீலியோ, ஹய்ஜன்ஸ், நியூட்டன் போன்றோரின் முயற்சிகளால் இயற்பியல், இயற்கை நிகழ்வுகளின் கணித விளக்கமாக உருவெடுத்தது. இயற்பியலி லிருந்து கற்பனைப் பண்புகள் முழுமையாக அகற்றப் பட்டன. நியூட்டன் கொள்கைகளின் அடிப்படையில் முற்கால இயற்பியல் வளர்க்கப்பட்டு, பல்வேறு நிகழ்வுகள் அதன் வரம்புக்குள் கொண்டுவரப் பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஒரு சில இயற்கை நிகழ்வுகளே விளக்கப் ப வில்லையெனத் தோன்றியது; ஆனால் கரும் பொருள் கதிர்வீசல் (black body radiation), ஒளிமின் விளைவு (photoelectric effect) போன்ற குறிப்பிடத் தக்க நிகழ்வுகள், பிளாங்க், ஐன்ஸ்டைன் ஆகியோ ரால் விளக்கப்பட்டபோது, நியூட்டன் கூறிய இயற் பியலின் அடிப்படைக் கொள்கைகளை முழுமையாக மாற்ற நேர்ந்தது.