472 இயற்பியல் வரலாறு
472 இயற்பியல் வரலாறு பாற்றல் (entropy) என்ற இயற்பியல் அளவு எவ் வகை மாற்றத்தினாலும் எப்போதும் உயருமென, கிளாசியஸ் என்பவர் காட்டினார். ஒளியியல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல வகைகளில் வளர்ச்சியுற்றது. 1801 ஆம் ஆண்டு அலைகளின் குறுக்கீட்டு விளைவை யங் என்பவர் ஒளியின் ஆய்வுமூலம் விளக்கினார். 1818 இல் விளிம்பு விளைவு (diffraction) எனப்படும் வளைந்து செல்லும் தன்மையைப் பிரெனல் விளக்கினார். அத னால் அலைக் கொள்கை (wave theory) புத்துயிர் பெற்றது. 1860ஆம் ஆண்டில் மெக்ஸ்வெல் மின் காந்தக் கதிர்வீசல் கொள்கையை அறிவித்தார். ஒளி என்பது மின்காந்தக் கதிர்வீசல் நிரலில் ஒரு சிறிய பகுதியெனவும் விளக்கினார். 1887 ஆம் ஆண்டு ஹெர்ட்ஸ் மின் காந்தக் கதிர்கள் இருப்பதை ரேடியோ அலைகளை உருவாக்கியதன் மூலம் முதன் முதலில் நிறுவினார். 1859 ஆம் ஆண்டில் கிளார்க் மேக்ஸ்வெல் சனிக் கோளின் வளையங்களைக் கணிதவியல் முறை யில் ஆராய்ந்து அவை நெருக்கமான துகள் தொகுதி எனக் காட்டினார். 1860 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் வேகங்கள் அவற்றின் மூலக்கூறு எடைகளுக்கு எதிர் விகிதத்திலிருக்குமெனக் காட்டி மேக்ஸ் வெல் -போல்ட்ஸ்மன் புள்ளியியல் தோன்ற வழி செய்தார். அதே ஆண்டில் ஃபாரடேயின் விசைக்கோடுகளுக்குக் கணிதவியல் விளக்கத்தையும் தந்தார். 1864 ஆம் ஆண்டில் மின்னியலுக்கும், காந்தவியலுக்கும் இடை யே அடிப்படைத் தொடர்பை நான்கு எளிய மேக்ஸ்வெல் சமன் பாடுகள் மூலம் வடித்துத் தந்தார். மின்னியல் காந்தவியல் ஆகியவற்றிற்குள்ள சீரமைவையும். (symmetry), அவற்றைப் பிரித்துப் பார்ப்பது இயலா தென்பதையும் காட்டி மின்காந்தப் புலம் என்ற கருத்தை உருவாக்கினார். மின்காந்தக் கதிர்களின் திசைவேகத்தைக் கணக்கிட்டு அறிவித்தார். அது ஒளியின் வேகத்துக்குச் சமமாக உள்ளது. 1978 ஆம் ஆண்டு ஒளியின் வேகத்தை அளந்த மைக்கல்சன் என்பவர், 1880 ஆம் ஆண்டு ஒளியின் அலைநீளத்தை அளக்கக் குறுக்கீட்டு விளைவு மானியை (interferometer) அமைத்தார். 1893 ஆம் ஆண்டு கேட்மியச் சிவப்பு வரியின் அலை நீளத்தை அளந்தார். நியூட்டன் கருத்துப்படி எங்கும் பரவி யுள்ளதாகக் கொள்ளப்பட்ட ஈதர் (ether) என்ற ஊடகத்தைப் பற்றி இவர், மாரலி என்பவருடன் சேர்ந்து செய்த ஆய்வு உலக அறிவியல் வர லாற்றிலேயே மிகுந்த புகழ்பெற்ற தோல்வியுற்ற ஆயவாகும். இவ்வாய்வு முடிவின்படி ஈதர் என்று ஒன்றிருந்தால் அது நகர்ந்து கொண்டிருக்கவேண்டும் அல்லது ஈதர் என்பதே இல்லையென்றாக வேண்டும் என்ற முடிவு ஈதர் கொள்கை தவறு என்பதைக் காட்டுகிறது. 1907 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற மைக்கல்சன் அப்பரிசைப் பெற்ற முதல் அமெரிக்கராவார். விசைகளை 1800 ஆம் ஆண்டில் வோல்ட்டா மின்கலம் அமைக்கப்பட்டது. 1820 ஆம் ஆண்டில் ஆர்ஸ்டெட் என்பவர் மின்னோட்டத்தால் காந்த ஊசி விலகு வதைக் கண்டார். 1825 ஆம் ஆண்டில் இவர் தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சியில் சிறி தளவு தூய்மையற்ற அலுமினியத்தைப் பிரித்தெடுத் தார். ஆம்பியர் என்பவர் மின்னோட்டங்களுக் கிடையே தோன்றும் ஆராய்ந்தார். மேலும், உருளை வடிவில் சுற்றப்பட்ட கம்பி வழியே மின்னோட்டம் சென்றால் அது ஒரு காந்தக்கட் டையைப் போல் காந்தப் புலத்தைத் தோற்றுவிக்கும் என்பதைக் காட்டினார். இவர் நினைவாக மின் னோட்டம் 1881 ஆம் ஆண்டிலிருந்து ஆம்பியர் என்ற அலகால் அளக்கப்படுகிறது. கம்பி வழியே மின்னோட்டம் செல்லும்போது அதற்குக் கம்பி அளிக்கும் தடையை ஓம் என்பவர் அளந்தார். அவர் நினைவாக மின்தடை ஓம் என்ற அலகால் அளக்கப் படுகிறது. அறிவியல் வரலாற்றில் பெருமளவு வியக்கத்தக்க உள்ளுணர்வு படைத்த அறிஞர்களுள் மைக்கல் ஃபாரடே முதன்மையானவர். ஆர்ஸ்டெட் மற்றும் ஆம்பியர் ஆகியோர் மின்னோட்டத்தின் காந்த விளைவுகளை ஆய்வு மூலம் காட்டியபோது, காந்தப் புலம் மின்னோட்டத்தை ஏன் தோற்றுவிக்கக் கூடாது என்ற வினாவை ஃபாரடே எழுப்பினார். 1831 ஆம் ஆண்டில் இது தொடர்பான ஆய்வுகளில் ஈடு பட்ட ஃபாரடே, காந்தப்புலம் மட்டுமே மின்னோட் டத்தைத்தோற்றுவிக்க இயலாதென்பதையும், காந்தப் புலம் மாறும்போது, அதாவது காந்த விசைக் கோடுகள் நகரும்போது மின்னோட்டம் தோன்றுகிற தென்பதையும் காட்டினார். மின்சாரம் செல்லும் ஓர் உருளை வடிவக் கம்பியினருகேயுள்ள மற்றொரு உருளை வடிவக் கம்பியில் மின்சாரம் தூண்டப்படு வதை ஃபாரடே காட்டினார். இதுவே உலகின் முதல் மின்மாற்றி (transformer) ஆகும். டைனமோ என்ற மின்சாரம் தோற்றுவிக்கும் கருவிக்கும் இதுவே அடிப் படையாகும். இவரின் ஆய்வுகள் மேக்ஸ்வெல் தம் மின்காந்தக் கதிர்வீசல் கொள்கைகளைப் பெறவும் வழிகாட்டின. காந்த விசைக்கோடுகள் என்ற கருத்தை அளித்துக் காந்தப்புலத்தை விளக்கினார். மேலும் 1820 ஆம் ஆண்டு குளோரின், அம்மோனியா, சல்ஃபர்டை ஆக்சைடு வளிமங்களை அழுத்தத்தின் மூலம் நீர்மமாக்க இயலுமெனவும் இவர் காட்டி னார்.1807-1808 ஆம் ஆண்டுகளில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், ஸ்ட்ரான் சியம், பேரியம் ஆகிய தனிமங்களைப் பிரித்தெடுத்த