பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/498

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 இயற்பியல்‌ வரலாறு

474 இயற்பியல் வரலாறு அணுவிலிருந்து ஆக்க வேலைக்கான ஆற்றலையும் பெறலாம். அழிவு வேலைக்கான அணுகுண்டு போன்ற கருவிகளையும் அமைக்கலாம். மேலும் திசைவேகத்தைப் பொறுத்து நிறைமாறும் என்ற இவர் கணிப்பு, இன்றைய துகள் முடுக்கிகளில் particle accelerators) பயன்படுகிறது. ஐன்ஸ்டைனின் பொதுச் சார்புக் கொள்கை முன்னர்க் கூறியபடி நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையின் பிடியைத் தளர்த்தி, விரியும் போண்டம் (expanding universe) என்ற அண்டத் தோற்றம் பற்றிய கொள்கையைச் சாரும் வகையில் அமைந்தது. ஈர்ப்பினால் ஒளி விலகலடையும் என்பதையும் இச்சார்புக் கொள்கை உறுதிசெய்தது. ஐன்ஸ்டைன் பிரௌன் இயக்கம் மூலம் நீர் மூலக்கூறின் பருமனைக் கணக்கிட இயலுமெனக் காட்டினார். இந்திய அறிவியலறிஞரான போஸ் என்பவருடன் இணைந்து ஆல்ஃபாத்துகள்கள் போன்ற போசான்கள் (bosons ) எனப்படும் துகள் களுக்குப் பொருந்தும் வகையில் போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் தோன்றக் காரணமாக இருந்தார். இவருடைய துகள் அலையான ஃபோட்டான்கள் பிற்காலத்தில் மேசர், லேசர் ஆகிய கதிர்கள் தோன்ற வும், ஹோலோகிராஃபி (holography) எனப்படும் முப்பரிமாணப் படமாக்கும் முறை தோன்றவும். 1960 ஆம் ஆண்டில் மாஸ்பாயர் என்பவர் மாஸ் பாயர் விளைவு என்பதைக் கண்டுபிடிக்கவும் உதவின. இதே காலத்தில் மில்லிகன் என்பவர் காஸ்மிக் கதிர்கள் மின்காந்தக் கதிர்களென்ற கருத்தை வெளி யிட்டு ஆய்வு மூலம் எலெக்ட்ரான் துகளின் மின்னூட்டத்தை அளந்தார். கடந்த நூற்றாண்டின் இறுதியிலேயே கதிர்வீச்சு என்பது மேலும் பகுக்க இயலாத குவாண்டம் என்ற ஆற்றல் துகள்களாலானது என்ற கருத்தை மேக்ஸ் ப்ளாங்க் வெளியிட்டார். க் குவாண்டம் என்பது அலை நீளத்தின் எதிர்விகிதத்தில் கொண்டுள்ளதாகும். ஆற்றலைக் அதிர்வெண் ஆனால் குவாண்டத்தின் ஆற்றல் E = hv ஆகும். இதில் h என்பது மிகமிகச் சிறியமதிப்புடைய பிளாங்க் மாறிலி, இருபதாம் நூற்றாண்டில் அணுக்கருவின் பண்புகள். எலெக்ட்ரான்கள் இயக்கம் அணுக்கருத் துகள்களின் இயக்கம், ஒளிமின் விளைவு போன்ற கருத்துக்கள் பிளாங்கின் குவாண்டம் கொள்கை வெளி யான 1900 ஆம் ஆண்டில்கூட அறிவியல் உலகில் எந்தப்பாதிப்பையும் ஏற்படுத்தாமலேயே இருந்தன. 1983 ஆம் ஆண்டில் அணுக்கருவை மையமாகக் கொண்ட அணுவின் மாதிரி அமைப்பை நீல்ஸ்போர் என்பார் அளித்தார். இவ்வமைப்பில் அணுவிலுள்ள எலெக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுற்றிக்குறிப்பிட்ட ஆற்றல் மட்டம் கொண்ட குறிப்பிட்ட நிலையான சுற்றுப் பாதைகளில் மட்டுமே இருக்க இயலும். அணுக்கருவுக்கான நீர்மத்துளி மாதிரி அமைப்பைத் தந்தவரும் நீல்ஸ்போர் ஆவார், வெவ்வேறு உட்கூடு களில் உள்ள துகள்களின் ஆற்றல் மட்டம் வெவ் வேறானதாகும் என்ற கருத்தையும் இவர் முன் வைத்தார். இவர்தம் அணுக்கருவின் நீர்மத்துளி மாதிரி அமைப்பு அணுக்கருப் பிளப்பை எளிதில் விளக்கப் பயன் பட்டது. ரூதர்ஃபோர்டு 1903 ஆம் ஆண்டில் கதிரியக்கத் தின் மூலம் புவியின் வயதைக் கணக்கிட இயலுமென உணர்ந்தார். 1904 ஆம் ஆண்டில் கதிரியக்கத்தில் அரை ஆயுள் காலம் என்ற அளவை இவரே முதலில் பயன்படுத்தினார். 1923 ஆம் ஆண்டு காம்ப்ட்டன் என்பார் எக்ஸ் கதிர்கள் சிதறல் ஆய்வு மூலம் அவற்றின் அலை நீளத்தில் ஏற்படும் மாறுபாட்டைக் கண்டறிந்தார். காஸ்மிக் கதிர்கள் துகள்களே எனவும் இவர் கருத்துத் தெரிவித்தார். அதே ஆண்டில் லூயி தெ டிப்ராய் (Louis de Broglie) என்பவர் கதிர்வீச்சு அலைப் பண்பு மட்டுமன்றித் துகள் பண்பையும் பெற்றுள்ளது போலவே, துகள்களும் அலைப்பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என்ற தமது துகள் அலைக் கொள்கையை வெளியிட்டார். டேவிசன், ஜெர்மர் தாம்சன் ஆகியோரின் ஆய்வுகள் எலெகட்ரான் துகளின் அலை நீளங்களை அளக்கப் பயன்பட எலெக்ட் ரானின் இவ்வலைப் பண்பே எலெக்ட்ரான் நுண் ணோக்கியின் electron microscope) அடிப்படை யாகும். டிராக் என்பவர் கணிதவியல் கணிப்பின் மூலம் ஒவ்வோர் அடிப்படைத் துகள்களுக்கும் ஓர் எதிர்த் துகள் இருக்க வேண்டுமெனக் காட்டினார். தற் சுழற்சி (spin) ஒரு குறிப்பிட்ட வகையில் இருக்கும் துகள்களின் ஆற்றலைக் கணக்கிட ஃபெர்மி-டிராக் புள்ளியியல் தோன்றியது. போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளி யியல் போசான் துகள்களுக்குப் பொருந்துவது போல, இப்புள்ளியியல் ஃபெர்மியான் எனப்படும் துகள்களுக்குப் பொருந்தும். சார்டிங்கர் டிராக் ஆகியோரது முன்முயற்சியால் அணுவின் அமைப் புக்கு ஒரு கணிதவியல் வடிவம் தரப்பட்டது. இவர் களே அலை இயக்கவியல் (wave mechanics) அல்லது குவாண்டம் இயக்கவியல் உருவாகக் காரணமாக இருந்தவர்கள்.பின்னர் ஃபெய்ன்மேன் முதலானோர் குவாண்டம் மின்னியக்கவியல் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர். இதற்கிடையே ஹைசன்பர்க் என்பவர் ஆற்றலை வெறும் எண்களால் மட்டுமே குறிப்பிட்டு அணி இயக்கவியல் எனப்படும் அணிக்கோவை இயக