26 இடைமூளை
26 இடைமூளை நூலோதி. Apostol, Tom. M., Calculus, Volume-I, Asia Publishing House, Bombay, 1962; Rudin, Walter., Principles of Mathematical Analysis, McGraw-Hill Book Company. London, 1976; Arumugam. S., Advanced Calculus Volume I and II. New Gamma Publishing House, Palayam. kottai, 1982 இடைமூளை நரம்பு மண்டலத்தின் முக்கியப் பகுதியாகக்கருதப் படும் மூளையை முன்மூளை (fore brain), நடுமூளை (mid brain), பின்மூளை (hind brain) என்று மூன்றுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். நடுமூளையில் இடை மூளை (diencephalon), தொலைமூளை (telencephalon ) என இரு பகுதிகள் உள்ளன. இந்த இடைமூளை முன்மூளையின் தலமி (thalamus), தலமியடிப் (hypoth alamus) பகுதிகளை, தொலைமூளையோடு கிறது. சேர்க் மூளையின் மூன்றாவது உள்ளறையின் (third ventricle) பெரும்பகுதி, இடை மூளையினுள் தானிருக் கிறது. அது கீழ்நோக்கி, நடுமூளையின் நீர்நாளமாக வும் (aqueduct), மேல்நோக்கி, தொலைமூளையி னுள்ளும் செல்கிறது. இந்த இடைமூளை, கீழே, பின்பிணைப்பும் (posterior commisures சிறுநகிழ்புடைக் கீழ்முடிவுகள் caudalmargin of mamillary body) உள்ள பகுதிக் கும், மேலே, மூளை உள்ளறையின் இடைத்துளைக் கும் (interventricular foramen) பார்வையியச்சந்தி யின் (opticchiasma) நடுப்பகுதி வரையிலும் பர வியுள்ளது. இடைமூளையை இட வலச் சமப்பகுதிகளா கப் பிரிக்கலாம். மூன்றாவது உள்ளறையின் வெளிச் சுவர் வழியாக, தலாமியடிப்பள்ளம் (hypothala- micsulcus) மூளை நீர்நாளத்திலிருந்து (cerebral aqueduct) மூளை உள்ளறை இடை த்துளை வரை செல்கிறது. இந்தப்பள்ளம், இடைமூளையை புறப்பகுதி (parsdorsalis), வயிற்றியப் பகுதி களாகப் (parsventralis ) பிரிக்கிறது. இடைமூளை யின் புறப்பகுதியினுள் புறத்தலாமி (dorsal thalamus) கிடைத்தலாமி (meta thalamus), மேல் தலாமி (epithalamus) ஆகியவையும் வயிற்றியப் பகுதியினுள் தலாமியடி வயிற்றியத்தலாமியும் (neu- tral thalamus) உள்ளன. தலமியின் கீழே, வல, இட முழங்காற்கணுப்போலிகள் (medial, lateral geniculate bodies) உள்ளன. பரவி மியானிப்படை (ependyma} இடைமூளையின் பெரும் பகுதியின் கூரையாகி, மூன்றாவது உள்ளறைக்குள் தொடர்கிறது. இடைமூளையின் வயிற்றியப்பகுதி. சிலநரம்புகளின் இணைச்சேர்க்கையாலானது (neuron astomists). இது வேலை செய்யும் விதத்தில் மற்றபகுதிகளைவிட வேறுபட்டது. தகடுமுடிவிடத் திற்கும், (lamina terninals) சிறு நகிழ்புடைக்கீழ் முடிவுகளுக்கும் பின் வயிற்றுப்புறப்பகுதிகளில் தலா மியடிப்பள்ளத்திற்கும், மூன்றாவது உள்ளறையின் வெளிச்சுவர் உறுப்புக்களுக்குமிடையே யுள்ள இப்பகுதி தான்தலாமியடியாகும். இடைமூளை யின் மற்ற வயிற்றியப்பகுதி தலாமியடியின் வெளியே வயிற்றியத்தாலமியாக அமைந்துள்ளது. இதில் சிவப்பு நியூக்ளியசின் தலைப்பகுதியும் (cranialand ofred nuc- leus), சப்ஸ்டான்சிய நைக்ர (substantia nigra) வயிற் றியத்தலா நியூக்ளியசும் மற்றும் வேறுசில நியூக்ளி யஸ்களும், நரம்புத் தடங்களும் (fibre tracts) உள்ளன. இத்தலைத்திரள்களுக்குப் (basal ganglia) பெருமூளைப் புறணியிலிருந்து (cerebral cortex) ஏராளமான இயக்கநரம்புகள் (motor fibres) வரு கின்றன. எல்லாத் தலைத்திரள்களையும் ஒன்றுக்கொன்று இணைத்து மீண்டும் பெருமூளைப் புறணிக்கே செல்கின்றன. சிறுமூளையிலிருந்து நரம் புகள் இத்தலைத்திரள்கள் வழியாகப் பெருமூளையி லிருந்து புறணிக்குச் செல்கின்றன. பெருமூளையி லிருந்து மூளைத்தண்டுக்கு (brain sterm) நரம்புகள் இத்தலைத்திரள்கள் வழியாகச் செல்கின்றன. பெரு மூளைப் புறணியைப் போலவே எல்லா இயக்குவேலை களையும் (motor functions) இத்தலைத்திரள்கள் கட்டுப்படுத்துகின்றன. அவை, இத்தலைத்திரள்கள் நோயினால் பாதிக்கப் பட்டால் கோரியா (chorea), எத்திட்டோஸிஸ் (athetosis), ஹெமிபாலிஸ்மஸ் (hemeballismus), பார்க்கின்சன் நோய் (Parkinson disease) போன்ற இணைப்போக்கு நோய்கள் ஏற்படலாம். -வாசுகிநாதன் நூலோதி. Roger Warwick and Peter L. William. Grays Anatomy, 35th edition 1973; Arthur C. Guyton, Text Book of Medical Physiology Fifth Edition, 1977; Chatterjee, Human Physiology 9th Edition 1979. இடையாழ அனற்பாறைகள் அனற்பாறைகள் நிலத்தில் அமையும் ஆழத்திற்கேற்ப ஆழ்நிலை (plutonic), இடையாழ (hypabyssal), வெளி உமிழ்வு அல்லது எரிமலைப் (volcanic)