பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/518

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 இர்மிங்கர்‌ கடல்‌

494 இர்மிங்கர் கடல் மருந்துகளும் டைஐசோசையனைட் (di-isocyanates ) போன்ற வேதிவினைப் பொருள்களும் இந்நோய்க் குரிய முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. நோய்க்குரிய காரணங்களையும், நோயின் கடுமையையும் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும். பல நோயாளிகளுக்குக் கடுமையற்ற காய்ச்சல் மட்டுமேயிருக்கும். எக்ஸ் கதிர் படத்திலும் இரத்த ஆய்விலும் இந்நோயைக் கண்டுபிடிக்க இயலாது. ஃபைலேரியா நோயிலும், மருந்துப் பொருள்களால் வருவனவற்றிலும் கடுங் காய்ச்சல், கடும் மூச்சுத் திணறல் ஆகியவை வரலாம். இரத்தத்தில் இயோ சினோஃபிலியா 5.0 x 16]லிட்டர் இருக்கும். எக்ஸ் கதிர் படத்தில் நுரையீரலில் ஓரிடத்திலோ, பரவியோ ஒளிபுகா இடங்கள் இருந்தால் இயோசினோஃபிலியா எனக்கருதலாம். தனை இரத்தப்பரிசோதனை மூலம் நிரூபிப்பதால் காசநோய், மற்ற நுண்ணுயிர் நிமோனியாக்களிலிருந்து பிரித்தறியலாம். அதன்பின் நோய்க் காரணிகளை அறிந்து அதற்கேற்ப மருத் துவம் செய்தால் பலனளிக்கும். ஃபைலேரியா நோய்க்கு டைஈதைல் கார்பமசீனும் காரணம் தெரி யாத இயோசினோஃபிலியா நோய்க்கு பிரட்னி சோலானும் கொடுத்து நோயைக் குணப்படுத்தலாம். ஆ.வாசுகிநாதன் நூலோதி. அ. கதிரேசன், மார்பு நோய்கள், முதல் பதிப்பு, 1978; John Macleod, Davidson's Principles and Practice of Medicine, Fourteenth Edition, ELBS London 1984; Petersdorf, R. G., Harrison's Principles of Internal Medicine, Eighth Edition, McGraw Hill Kogakusha Ltd., New Delhi, 1977, இர்மிங்கர் கடல் கிரீன்லாந்துக்குக் கிழக்கே லாப்ரடார் கடல், கிரின் லாந்துக் கடல், டென்மார்க் நீர்ச்சந்தி ஆகியவற்றால் சூழப்பட்ட கடல் இர்மிங்கர் கடல் (irminger sea) ஆகும். 1854 ஆம் ஆண்டு கார்ல் எல் இர்மிங்கர் என்ற டென்மார்க் நாட்டு வல்லுநர் இக்கடல் பகுதி யில் நீரியல் தொடர்பான ஆய்வுகளை நடத்தியதால், இக்கடல் இவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இங்கு காணப்படும் நீரோட்டத்தை இர்மிங்கர் நீரோட்டம் (irminger current) என்று அழைப்பர். வட அட்லாண்டிக் நீரோட்டத்தின் ஒரு பகுதியாகிய இர்மிங்கர் நீரோட்டம் ஐஸ்லாண்டின் தென் கடற் பகுதியோரமாக மேற்கு நோக்கிப் பாய்கிறது. ஐஸ் லாந்தின் மேற்கில் இந்த நீரோட்டம் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளை நீரோட்டமானது வடக்கு நோக்கிச் சென்று பின்னர் ஐஸ்லாந்தைச் சுற்றிக் கிழக்காகப் பாய்கிறது. மற்றொரு கிளை நீரோட்டம் மேற்கு நோக்கியும், பின்னர் தென் மேற்காகவும் சென்று, முடிவில் கிழக்குக் கிரீன்லாந்து, மேற்குக் கிரீன்லாந்து நீரோட்டத்துடன் இணை கிறது. வட அட்லாண்டிக், ஆர்க்டிக் பெருங்கடல் களில் தொடர்பு கொள்வதால் இர்மிங்கர் நீரோட்டத் தின் உப்புத்தன்மை கணிசமான அளவில் இருக்கும். மாறுபட்ட வெப்பநிலைகளையுடைய நீரோட்டங் கள் இணைவதால் ஐஸ்லாந்தின் கடற்பகுதி சிறந்த மீன்பிடிப்பு இடமாக விளங்குகிறது. ரங்கூன் மல்லி -ம. அ.மோ. தாவரவியலில் மல்லி இரங்கூன் குவிஸ்க்வாலிஸ் இண்டிகா லின் (Qulsqualis indica Linn) என்று அழைக்கப்படுகிறது. இது காம்ப்ரிடேசீ (combre - taceae) இனத்தைச் சார்ந்த இரு விதையிலைத் தாவர மாகும். மலாய் நாட்டைச் சேர்ந்த இச்செடி, சுவர், தூண், கம்பம், தட்டி, செயற்கை வளைவு முதலிய வற்றின் மீது பெரிய அளவில் கொடிபோல் படர்ந்து வளரக் கூடியது. தோட்டங்களிலும் கவின்மிகு சோலைகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. கடல் மட்ட இடங்களில், பூங்காக்களில் இச்செடி மிகுந்து காணப்படுகிறது. இச்செடியின் மலர்கள் ஓரளவு பெரியனவாயும், கவனத்தை ஈர்ப்பனவாயும், வெள்ளை, ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்களில் கலந்தும் காணப் படுகின்றன. அவை நிறம் மாறும் தன்மை கொண்டவை; இலைகள் நீண்ட அல்லது முட்டை வடிவானவை; எதிர் அமைப்புக் கொண்டவை; முழுமையானவை; இலை நரம்புகள் வலை அமைப்பு உடையவை. மலர்க் கொத்துக்கள் இலைக் கோணத் திவோ, தண்டு, கிளை நுனிகளிலோ காணப்படு கின்றன. அவை ஸ்பைக் (spike) வகையைச் சார்ந் தவை. மலர்கள் இருபாலானவை; ஒழுங்கானவை; புல்லிவட்ட இதழ்கள் 5 ஒன்று சேர்ந்து சூல்பைக்கு மேல் குழாய் போன்று அமைந்துள்ளன. (ஹைபாந்தி யம் - Hypanthium). இது மலர்க்காம்பு போன்ற பொய்த் தோற்றத்தைத் தருகிறது. அல்லி வட்டம் 5 தனி இதழ்களால் ஆனது. இதழ்கள் பலவண்ணத் தவை. இவை மலர்களுக்கு வண்ணம் தருகின்றன. மகரந்தங்கள் 5. குட்டையானவை; சூல்பை கீழ் மட்டத்திலுள்ளது. ஓர் அறையுடன் உள்ளது.3-4 சூல்கள், சூல்பையின் மேலிருந்து தொங்கும் அமைப்பு உள்ளவை. காய் உலர்ந்த வகை 5, 6 கோணமானது. ஒரு விதையினை உள்ளடக்கியது. பயன்கள். மொலுக்காஸில் குடற்புழுக்கொல்லி யாக விதைகள் கருதப்படுகின்றன. அம்போயாவில்