பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டுறல்‌, படிக 495

இலைச்சாறு வயிறு வீக்கத்தைக் கட்டுப்படுத்தக் கூடியதாகக் கருதப்படுகிறது. சைனாவில், வறுக்கப் பட்ட விதைகள் வயிற்றுப்போக்கிற்கும், காய்ச்சலுக் கும் மருந்தாகின்றன. சிங்கப்பூரில் 4 அல்லது 5 விதைகளைத் தேய்த்துத் தேனுடன் கலந்து குழந்தை களுக்குப் புழுக்கோளாறு தடுப்பு மருந்தாகத் தரப் படுகிறது. நான்கைந்து விதைகளுக்கு மேல் கொடுத் தால் வயிற்றுவலி உண்டாகும். Gal. #. நூலோதி. Gamble, G.S. Flora of Madras Presidency BSI Vol.I. 1957; George Watt, Diction- ary of Products of India Vol. VI. 1972. இரட்டுறல்,படிக என கனிமப்படிகம் பொதுவாகத் தனித்தனியாகக் காணப் படுவது மட்டுமன்றி தொகுதியாகவும், கொத்தாக வும், கூட்டமாகவும் காணப்படும். ஒரு படிகத்தைப் போன்று அக்கூட்டத்தில் உள்ள மற்றொரு படிகம் அனைத்துப் பக்கங்களையும், விளிம்புகளையும், திண் மக்கோணங்களையும், முனைகளையும் இணையாகப் பெற்றிருக்குமேயானால் அவை இணையுருலாக்கம் (parallel growth) அல்லது படிகக் கூட்டம் அழைக்கப்படும். ஆனால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படிகங்கள் ஒன்றையொன்று பின்னி ஒரே வேளையில் சேர்ந்து வளரும்போது ஒரு முழுப் படி கத்தின் பகுதியை ஒரு படிகமும், மற்றொரு பகு தியை வேறு படிகமும் ணை இணையாகவோ தலைகீழான முறையிலோ பெற்று, அருகில் இணைந்து ஒரு தனிப்படிகம் போல் விளங்குவதைப் படிக இரட்டுறல் (twinning of crystal) எனலாம். அவை, இரண்டு அல்லது மூன்று படிகங்கள் ஒரு தொடர்ச்சியாக, சீர்மையான முறையில் இணைக் கப்பட்டவை போன்றும், சில வேளைகளில் ஒன்றை ஒன்று ஊடுருவி ஒரு சிலுவை போன்றும் (படம்-1அ) அல்லது ஒரு நட்சத்திரம் (படம் 1இ) காட்சி அளிக்கும். போன்றும் இரட்டுறல்,படிக 495 இவ்வாறு இரட்டுறல் அமைப்பு ஒரு பக்கத்தில் தலை கீழான நிலையில் அடுத்தடுத்துக் காணப்படுவதி லிருந்து அந்தப் பக்கத்தின் மேல் காணப்படும் மாறு பட்ட வரித்திசைகளும் (strial) (படம்1 ஆ), உள் நோக்கித் திருப்புகிற கோணங்களும் (reentsant an gles) இவ்வமைப்பு இருப்பதைக் கண்டறிய உதவு கின்றன. சில படிகங்களில் இரட்டுறல் இருப்பதை நுண்ணோக்கியினால் மட்டுமே கண்டறிய முடியும். படிக இயலில் இரட்டுறல் அமைப்பைப் பற்றி அறி வதும் அவற்றின் விதிகளை அறிந்து கொள்வதும் இன்றியமையாத தேவையாகும். இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட படி கங்கள் இரட்டுறல் படிகத்தில் இருக்குமேயானால் அவைதனித்தனியே அவற்றிற்கே உரிய அணுக் கட் டமைப்பை வெவ்வேறாக மாறி இருக்குமாறு பெற் றிருக்கக்கூடும். ஆனாலும் அப்படிகத்தில் அவற் றின் படிகப் பின்னல்கள் (network) வெவ்வேறான நிலையில் இருப்பினும் அவை எல்லாவற்றிற்கும் பொதுவான தளம் ஒரு குறிப்பிட்ட திசையில் இருக் கக்கூடும். அத்தகைய வெவ்வேறான நிலைகளிலுள்ள படிகப் பகுதிகளை ஒரு எளிய முறையில் சுற்றியோ திருப்பியோ பார்க்கும்போது ஒன்றிற்கொன்று இணையாக வந்து ஒரே மாதிரியாக அமையும். எனவே இரட்டுறல் படிங்கள் என்பன ஒரே வேளை பின்னல்களால் யில் ஒரே மாதிரியான அணுப் பிணைந்து இருக்கும்படியான நிலையில் ஒழுங்கான முறையில் வளர்ந்து உருவாகும் படிகங்களாகும். ஓர் இரட்டுறல் படிகத்தை எடுத்தால் அதில் உள்ள தனிப்பண்பு வாய்ந்த ஒரு பகுதி, அதன் மறு படி வத்தை (counterpart) ஒரு குறிப்பிட்ட தளத்தில் (180°) சுற்றும்போது இதைப் போன்றோ அதன் போன்றோ வரக்கூடும். மறுபலிப்புப் அவ்வாறு ஒன்றோடு ஒன்று இணையாக வருவதற்குப் பொது வாகக் காணப்படும் சுற்றுத்தளம் இரட்டுறல் தளம். (twinning plane) ஆகும். அவ்வாறு ஒன்றாகக் கொண்டு வருவதற்சாகச் சுற்றப்பட்ட திசைக்கோடு, இரட்டுறல் தளத்திற்குச் செங்குத்தாக அமையக் கூடிய அந்த அச்சுக்கு இரட்டுறல் அச்சு (twinning 722 m அ தெனர்டைட் படம் 1. கொலம்பைட் ஃபுளோரைட்