இரட்டுறல், படிக 499
அ ஆ th 122 77% இரட்டுறல் படிக 499 இ படம் 11. அ. ஃபுளுரைட்டு ஆ. டெட்ராஹெட்ரைட்டு இ.சாபாசைட்டு மாறிய நிலையிலோ காணப்படலாம். மேலும் இவ் விரு படிகங்களில் காணப்படக்கூடிய உள்நோக்கித் திரும்புகிற கோணங்கள் (reentrant angles) மிகவும் தெளிவற்று,தடமின்றிக்காணப்படும். சில சமயங் களில் அப்படிகங்களின் பக்கங்களில் ஆங்காங்கே காணப்படும் தெளிவற்ற கோடு இவ்விரட்டுறல் தன்மை இருப்பதைக் காண்பிக்கலாம். ஊடுருவிய இரட்டுறல் படிகங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இயற்கையில் ஒரே சமயத்தில் உருவாகும்பொழுது ஒன்றையொன்று ஊடுருவி அவற்றிற்கு ஒரு புதுமைத் தோற்றத்தைக் கொண்டு காணப்படுகின்றன. (படம் 1இ, 11அ - இ. 12அ - இ) இதுவும் தொகுநிலை இரட்டுறல் போன்றே இயற்கையில் காணப்படும்பொழுது, பல்வேறு காணப்படுகின்றது. மாறுபாடுகளைக் கொண்டே இவ்விரண்டு வகைகளுக்கும் பல பொதுத் தன்மைகள் உள்ளன என்று தெரிய வருகிறது. ஒரு படிகத்தின் உருவாக்கத்தில் இரட்டுறல் பண்புகளை மரபு வழி தோன்றும் இரட்டுறல் தன்மை (genetic twinning) எனலாம். இதுபோன்ற இரட்டுறல் தன்மை பெற்ற படிகங்களில் காணப்படும் படிக மாற்றங்களைவிட (crystallographic changes) படிக உருவாக்கம் அல்லது படிகத் தோற்றத்தில் (crystallogeny) ஏற்படும் மாறுபாடுகளே முக்கிய பங்குவகிக்கின்றன. இல்லகை இரட்டுறல் படிசுத்தில் அதன் தோற்ற அமைப்பிற்கேற்ப அதன் அடிப்படை மூலக்கூறே இரட்டுறல் தன்மை பெற்றுச் சிக்கலான அ.க.4-32அ படம். 12 ஸ்டாரோலைட்டு அமைப்பை உடைய படிகமாகக் (compound crystal) காணப்படும். இவ்வாறு அடிப்படைத் தோற்றத்தி லிருந்து ஒவ்வொரு அணுவிலும் தெளிவாக உருவாகிக் காணப்படும் இயல்பு கனிம இரட்டுறல் தன்மை. இயல்பு மரபுவழி இரட்டுறல் (paragenetic twinning என அழைக்கப்படுகிறது. இதற்கு மாறாக உருவாகும் போது எளிய முறையான படிகமாக உருவெடுத்துப் பின்னால் எதிர்பாராத இயற்கை மாற்றங்களால் தனது நிலையில் மாறுபட்டதனால், அதன்மேல் புதிதாக வந்த அதே வேதிப் பண்புகளைப் பெற்ற பொருள்கள், ஏற்கனவே உருவாகி உள்ள அந்த எளிய படிகத்தின் இரு முனைகளிலும் தொடர்ந்து தலைகீழான நிலையில் மாறி மாறிப் படிந்து, புதிய படிக முனைகளை உருவாக்கி, ஓர், இரட்டுறல் படிக அமைவதை மரபுவழி மாற்று இரட்டுறல் தன்மை (metagenetic twinning) என்கிறோம். இப்படத்தில் காண்பிக்கப்பட்டுள்ள ரூட்டைல் சுனி மத்தின் நடுப்பகுதி முதலில் இயல்பாக உருவாகிய படிகமாகும். பின்னால் புதிதாக வந்து சேர்ந்த பொருள்கள் அதன் இரு முனைகளிலும் ஒரே வேளை யில் படியத் தொடங்கிச் சிறிது வளர்ந்து பின்னர் அதற்கு கிடைத்த வசதிகளைப் பொறுத்து இவ்வா றாக வளைந்த வடிவு பெற்று உருவெடுத்தன. இவை தொடர்ந்து மாறி மாறி உருவாகி வரவும் வாய்ப்பு உண்டு. அமிலத்திஸ்டு என்னும் குலார்ட்சு கனிமம் ஒரே குழியில் திரும்பத் திரும்பக் கொணரப்பட்ட சிலிக்கான் டை ஆக்சைடு பொருளாக நிரப்பப்படும் பொழுது ஒன்றின்மேல் ஒன்றாக மெல்லிய பிரிக்க மாக