500 இரட்டுறல், படிக
500 இரட்டுறல், படிக படம் 13. ரூட்டைல் முடியாத படிவு, படிக ஏடுகளாக மாறி மாறி அமைந்து இயற்கையில் காணப்படும். இதேபோல் முச்சாய்வுப்படிகத் தொகுதியின் கீழ், படிகமாகும் ஆல்பைட்டு என்னும் ஃபெல்சுபார் கனிமம் (010) படிகப் பக்கத்திற்கு இணையாக மாறி மாறி, மெல் லிய தகடு போன்ற கோட்டிலைப் படிகப்படிவு களை ஒன்றாக இணைத்து இயல்புப் படிகம் போல் காணப்படுவதை இயற்கையில் அடிக்கடி காணலாம். இரட்டுறல் பண்பை ஆல்பைட்டு ஃபெல்சுபாரில் காண்பதுபோல் திரும்பத் திரும்ப ஒன்றிற்கொன்று தலைகீழான நிலையில் படிந்ததால் ஒன்றோடு ஒன் றாக அடுக்கப்படுவது போல் இணைந்து காணப் படும் இரட்டுறல் இயல்பு திரும்பத் திரும்ப இணை யும் இரட்டுறல் தன்மை (repeated twinning) எனப் படும். இத்தகைய இயல்பு இணைகோடுகள் போல் மிக மெல்லிய படிகப் படிவுகளால் உருவாக்கப் பட்டுக் காணப்படும்போது அவற்றைப் பன்முறை இணையும் இரட்டுறல் பண்பு (polysynthetic twin- ning) என்பர். இவ்விரட்டுறல் தன்மையில் உரு வான முச்சாய்வுப் படிகத் தொகுதியில் படிகமாகும் ஃபெஸ்சுபார் கனிமங்களையும் பயாகனைட்டு பைராக்சின் பைரைட்டு போன்ற கனிமங்களின் படிகப்பக்கங்களையும் உற்று நோக்கினால் அவற்றின் இரட்டுறல் படிகப் படிவு நுண்ணிலைகளின் (lamellae) இணை கோடுகள் நுண்ணிய கனிமப் பிளவு போல் பக்க மேற்புறத்தில் காட்சியளிக்கும். மேலும் ஒரு படிகம் ஒரு பக்கத்தில் தோன்றுவது போல் அதன் தலைகீழான உருத்தோற்றம் ஒரு குறிப் பிட்ட கோணத்தில் சுற்றும்பொழுது மாறி மாறி வரும்படியாகப் பல் படிகங்கள் ஒருங்கிணைந்து வருவதைக் காணலாம். இவ்வகை இரட்டுறல் படி கங்கள் அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்துப் படிகங்களுக்கும், ஒரு மையப் படிக இரட்டுறல் அச்சு இருப்பதையும்,பன்முறை இரட்டுறல் பண்பினால் அவை ஒரு விட்ட வடிவத்தைப் பெறுவது போல் தோற்றமளிப்பதையும் காணலாம். விட்டத்திற் குரிய 360° கோண அளவில் ஒரு குறிப்பிட்ட அச்சில் அப்படிகத்தைச் சுற்றும்போது எத்தனை முறை பண்பு வடிவு இயல்பு படிகப் அவை Fra & படம். 14. கிரேசோபெரில் . செருஸ்ஸைட்டு இ ஸ்டாரோலைட்டு