இரட்டுறல், படிக 501
அ படம் 15. இரட்டுறல் படிக 501 அ. ஸ்ப்பீனைல் ஆ. ரூட்டைல் பக்கங்கள் ஒரே இடத்திற்கு வருகின்றனவோ அந்த எண்ணிக்கையைப் பொறுத்து அப்படிக இரட் டுறல் பண்பு கணித்துக் கூறப்படும். கிரைசோபெரில் (படம் 14 அ ), செருசைட்டு (படம் 14 அ), ஸ்டரோ லைட்டு (படம் 14இ) போன்ற கனிமங்கள் மும் முறை திரும்பத் திரும்ப ஒரே வடிவினைப் பெற்று இரட்டுறல் படிகக் கொத்தாக இயற்கையில் காணப் படுவதை மும்மணியுறு படிக இரட்டுறல் (trilling) எனவும், தங்கம், ஸ்ப்பீனைல் (படம் 15அ) போன்ற கனிமங்கள் ஐந்து முறை (five lings) திரும்பத் திரும்ப ஒரு வடிவு பெற்ற படிகக் கொத்துகளாக இருப்பதையும், ரூட்டைல் (படம் 15ஆ) போன்ற கனிமம் எண்முறை (eight lings) திரும்பத் திரும்ப வருவதையும் காணலாம். இவ்வாறு பன்முறை இரட்டுறல் பண்பினால் சேர்ந்து வரும் படிகங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படுவதால் அவை குறைந்த படிகச் சீர்மையைப் பெற்ற படிகத் தொகுதியில் இயல்பாகப் படிகங்களாகக் காணப்பட வேண்டியவையாக இருப்பினும் உயர் படிகச் சீர்மை பெற்றுள்ள படிகப் போலிச் சீர்மையைப் (pseudo- symmetry) பெற்றுத் தோன்றுவதை இயல்பாகக் காணலாம். எடுத்துக்காட்டாகப் பிளப்ஸ்சைட்டு (படம் 15 இ) என்னும் கனிமம் சாய்வு படிகத் தொகுதி யின் கீழ், படிகமாகிறது. ஆனால் இரட்டுறல் பண்பி னைப் பெற்று அவை பன்னிரண்டு முகப்புடைய பிலிப்ஸைட்டு பிளம்புறு (dodagahedron) வடிவினைப் பெற்ற கனசதுரப் படிகத் தொகுதியின் கீழ் படிகமாகி யிருப்பது போல் காட்சியளிக்கிறது. சில படிகங்களை ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளால் ஆன படிகப் பகுதி களால் இணைக்கப்பட்ட இரட்டுறல் படிகங்களாக இயற்கையில் காண முடியும். ஸ்டரோலைட்டு என்னும் படிகம் இரு வகையான இரட்டுறல் தளங்க ளைப் (032,232) பெற்று மும்மணி உருப்பெற்ற இரட்டுறல் படிகமாக ஸ்டரோலைட்டு வருவதையும், ஆல்பைட்டு, ஃபெல்ஸ்பார் (010, 001) பக்கங்களுக்கு இணையான இரட்டுறல் தளங்களைப் பெற்று வருவதையும் காணலாம். இவ்வாறு ஒன்றிற்கு மேற் பட்ட இரட்டுறல் வகைகளைப் பெற்று வரும் படிகங்களைச் சிக்கலான படிகங்கள் என்று கூறலாம். ஏற்கனவே இயல்பாகத் தோன்றிய படிகம் பின்னால் ஏற்பட்ட சூழ்நிலை மாறுதல்களால் (எடுத்துக்காட்டாக அழுத்த வேறுபாட்டினால் ) ஓர் இரட்டுறல் பண்பைப் பெற்றிருக்குமாயின் அப்படிப் பட்ட இரட்டுறல் பண்பு முதன்மையிற் குறைந்த இரட்டுறல் பண்பு என அழைக்கப்படும். எடுத்துக் காட்டாக, கால்சைட்டு கனிமத்தில் கனிமப் பிளவின் வழியே அழுத்தம் அதிகரிக்கும்பொழுது அக்கனிம் மூலக்கூறு தனக்கருகில் உள்ள மூலக்கூறுகளிலிருந்து வழுவி 180° அரைச்சுற்றாக மாறி அமைந்து அவ்