இரட்டைக் கருவுறல் (தாவரவியல்) 509
வேறு வினைக்கோடுகளில் செயல்படும்பொழுது, அவ்விசையமைப்பு இரட்டை (couple) எனப்படும். ஒரு பொருளின்மீது இரட்டை ஒன்று செயல்படும் பொழுது அவ்வமைப்பு சுழற்றப்படும். குறிப்பிட்ட ஓர் இரட்டையின் திருப்புதிறன் (moment) பொழுதும் நிலையானது; படத்தில் A,B என்னும் A
- P
இரட்டை B 0₁ P எப் புள்ளிகளில் P, P என்னும் எதிரெதிர் போக்குடைய இணைவிசைகள் ஓர் இரட்டையாக அமைந்து செயல் படுகின்றன. அவ்விரு விசைகளின் வினைக்கோடு களுக்கு இடையில் என்னும் ஏதாவதொரு புள்ளி யைச் சுழல்மையமாகக் கொண்டால், இரட்டையின் திருப்பு திறனானது, வைச் சுற்றி Aயில் செயல் படும் P விசையின் திருப்பு திறனோடு வைச் சுற்றி B யில் செயல்படும் P விசையின் திருப்பு திற னைக் கூட்ட வரும் தொகைக்குச் சமமாகும். மேலும் இரு மையமாகக் P. AB = PXOA + P x O B விசைகளின் வினைக்கோடுகளுக்கு வெளியே 01 என்னும் புள்ளியைச் சுழல் கொண்டால் இரட்டையின் திருப்பு திறனானது 0, ஐச் சுற்றி A இல் செயல்படும் P விசையின் திருப் புத் திறனோடு, 0, ஐச் சுற்றி B இல் செயல்படும் P விசையின் திருப்புத் திறனைக் கூட்ட, கிடைக்கும் தொகைக்குச் சமமாகும். இங்கு A இல் செயல்படும் திருப்புதிறன் எதிரினமாகவும், B இல் செயல்படும் திருப்புதிறன் நேரினமாகவும் உள்ளன. எனவே, P. AB = - POLA + PO,B எந்தப் புள்ளியைச் சுழல் மையமாகக் கொண்டாலும் ஓர் இரட்டையின் திருப்புதிறன் நிலையானது; அது ஒரு விசையை இரு வினைக் கோடுகளின் இடைத் தொலைவால் பெருக்கி வரும் பலனுக்குச் சமமாகும். கொ.சு.ம . இரட்டைக் கருவுறல் (தாவரவியல்) இரட்டைக் கருவுறல் உயர்தாவரங்களாகிய ஆஞ்ஜி யோஸ்பர்டீஸ் (argiosperms) அல்லது மூடிய விதைத் இரட்டைக் கருவுறல் (தாவரவியல்) 509 தாவரங்களில் மட்டும் இனப்பெருக்கிற்காக நடை பெறும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இதில் மகரந்தம் (pollen) சூலகமுடியின் (stigma) மேல்படிந்து முளைத்து மகரந்தக் குழலாக (pollen tube) வளரு கிறது. இது சூலகமுடி, சூலகத்தண்டு, சூற்பைச்சுவர் ஆகியவற்றின் திசுக்களினூடே வளர்ந்து சூற்பையி னுள்ளிருக்கும் சூலைச் (ovule) சூல்துளையின் (micropyle) வழியாகச் சென்றடைகிறது. மகரந்தக் குழாய் சூலகத்தண்டிலிருந்தும், சூற்பைச் சுவரிலிருந் தும் உணவை எடுத்துக் கொள்கின்றது. சூலின் அமைப்பு. சூல்களின் அளவு, வடிவம், எண்ணிக்கை ஆகியவை தாவரங்களைப் பொறுத்து வேறுபடினும், பொதுவாக ஒவ்வொரு சூலும், நியூசெல்லஸ் (nucellus) என்னும் திசுவைப் பெற்று ஒன்று அல்லது இரண்டு சூலுறைகளால் (integu- ments) மூடப்பட்டிருக்கும். சூலின் நுனியில் சூல் துளை இருக்கும். நூசெல்லஸில் கருப்பை (embryo- sac) அமைந்திருக்கும். கருப்பையின் அமைப்பு. கருப்பையின் துருவத்தில் (pole) ஓர் அண்டகச் செல்லும் (egg cell), இதன் பக்கத்திற்கொன்றாக உதவும் செல்லும் (synergid ) இருக்கும். ஆக இம்மூன்று செல்களும் ஒன்று சேர்ந்த தொகுப்பிற்கு அண்டகச்சாதனம் (egg apparatus) என்று பெயர். இதற்கு எதிர்த் துருவத்தில் ஆன்டி போடல்கள் (antipodals) என்று கூறப்படுகின்ற மூன்று செல்களட களடங்கிய தொகுப்பு ஒன்று இருக்கும். இரு துருவங்களுக்குமிடையே இருமை நூக்ளியஸ் (secondary nucleus) அல்லது மூளைசூழ்சதை நியூக்ளி யஸ் (endosperm nucleus) காணப்படுகின்றது. சாதாரணமாக, உதவும் செல்கள் அலகு போன்ற அமைப்புகளாக நீண்டு (இதை இழைச் சாதனம்- filiform apparatus என்று கூறுவர்) கருப்பையைத் துளைத்து உட்புகுதலுக்குதவு மகரந்தக்குழாய் கின்றன. மகரந்தக்குழாய் சூல்துளை வழியாக உட் புகுந்து கருப்பையை அடைகின்றது. மகரந்தக் குழலிலிருக்கும் இரண்டு விந்தணுக் களும் (sperms) மகரந்தக்குழலின் நுனியிலேற்படும் ஒரு துளை வழியாகவோ, வெடிப்பதாலோ, கருப்பையை அடைகின்றன. இந்த இரண்டு விந்தணுக்களில் ஒன்று அருகிலிருக்கும் அண்டகச் செல்லுடன் இணைகிறது. அப்போது விந்தணுவின் ஒற்றைமய (haploid) நியூக்ளியசும் சைட்டோப்பிளாசமும் அண்டகச் செல் வின் ஒற்றைமய நியூக்ளியஸ், சைட்டோப்பிளாசம் ஆகியவற்றுடன் இணைகின்றன. இவ்வாறு உண் டாகும் இரட்டைமய (dipliod) நியூக்ளியஸும், அதனைச் சூழ்ந்துள்ள சைட்டோப்பிளாசமும் சை கோட்டாக (zygote) மாறுகின்றன. சைகோட் செல் பிரிந்து கரு (embryo) உண்டாகிறது. கரு தோன்று வதற்குக் காரணமாவதால் இதுவே உண்மைக் கரு வுறுதலாகும். சூல்பையினுள் வந்தடைந்த மற்றொரு