பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைக்‌ குழந்தை ஆக்கம்‌ 511

எடுத்துக்காட்டாகப் பாராநாய்டு மனநோய் (para- noid psychosis) ஒரே எண்ணத்துடன் கட்டாயப் படுத்தும் மனநோய் (obsessive compulsive neurosis). பிளந்த மனநிலைநோய் (schizo pherenia) போன்ற வற்றைக் கூறலாம். ஒரே செயலை மாற்றி மீண்டும் மீண்டும் செய்து கொண்டு இருப்பதும், ஓர் இழப்புக்காக நீண்ட காலம் வருந்துவதும் ஒரே எண்ணத்துடன் கட்டாயப் படுத்தும் மனநோயின் இரட்டைக் குணச்சேர்க்கை யாகும். பிளந்த மனநிலை நோயில் இரட்டைக் குணச்சேர்க்கை அடிப்படைக் குணமாக இருக்கிறது. இரட்டைக் குணச்சேர்க்கை, மனிதனின் வாழ்க்கை முழுதும் பரவலாக இருக்கிறது. அதன் அளவையும் தீவிரத்தையும் பொறுத்தே, பிளந்த மனநிலை நோய் நிர்ணயிக்கப்படும். எடிபஸ் நிலையைத் தாண்டிக் குழந்தை வளரும் பருவத்திலும் இரட்டைக் குணச்சேர்க்கையுடன், தாயிடம் உறவாடும் குழந்தையின் பிற்கால வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வேறு மனிதர்களுடன் அல்லது பொருள்களுடன் பிணைப்பு ஏற்படுத்திக் கொள்வது இந்தக் குழந்தைக்குக் கடினமாக இருக்கும். ஆனால் தந்தையிடம் இரட்டைக் குணச்சேர்க்கையுடன் பழ கும் குழந்தைக்கு இந்த அளவு பாதிப்பு ஏற்படுவ தில்லை. மனநோய்க்காகச் சிகிச்சை செய்துகொள்ளும் போதும் இரட்டைக் குணச்சேர்க்கை வெளிப்படு கிறது. சிகிச்சை தொடங்கிய உடன் இருக்கும் தீவிரமும் ஒத்துழைப்பும் நாள் செல்லச்செல்ல இருப்பதில்லை. நோயைப் பற்றியும் சிகிச்சையைப் பற்றியும் மாறுபட்ட உணர்வுகளில் நோயாளி உழல்வதால் மாறுதல் மனநோய் (Transference neurosis) ஏற்படுகிறது. சிகிச்சை அளிப்பவருக்கு இது ஒரு பிரச்சினையாகும். வாழ்க்கையின் பல பருவங்களில் இயற்கையாக ஏற்படும் இரட்டைக் குணச்சேர்க்கை அதிகமாக ஏற்படும்போது அது ஒரு நோய் என்று கருதப் படுகிறது. நா. சுங்கா நூலோதி.Harold I Kaplaw Benjamin J Sadock, Comprehensive Text Book of Psychiatry, IV Edition, Volume I, 1984. இரட்டைக் குழந்தை ஆக்கம் ஒரே சமயத்தில் கருப்பையில் (uterus) இரண்டு கருத்தரித்து வளர்தல் இரட்டைக் குழந்தை (twins) இரட்டைக் குழந்தை ஆக்கம் 511 ஆக்கம் எனப்படும். ஆடு,மாடு, பன்றி போன்ற மிருகங்கள் ஒரே சமயத்தில் பல குட்டிகளை ஈனுதல் என்ப பது சாதாரணமான நிகழ்ச்சியாகும். ஆனால் இயல்பாக மனித இனத்தில் கருப்பையில் ஒரு கரு தான் வளரும். சில சமயங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் தோன்றலாம். இதில் இரட்டைக் குழந்தைப் பிறப்பே அதிகமாகும். மிகவும் அரிதாக நான்கு அல்லது ஐந்து குழந்தை கள் பிறத்தலும் உண்டு. சுமார் 70 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைப் பிறப்பும், 9,000 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு மூன்று குழந்தைகள் பிறப்பும், 7,00,000 கர்ப்பிணிகளில் ஒருவருக்கு நான்கு குழந்தைகள் பிறப்பும் ஏற்படுகின்றன. அண்டமும் (Ovum), விந்தணுவும் (spermatozoan) இணைவதால் கரு (embryo) தோன்றி வளரும்; கரு இரண்டாகப் பிரிந்து இரு குழந்தைகளாக வடி வெடுக்கலாம். இது ஓரண்ட இரட்டையர் (uniov- ular twins) என வழங்கப்படும். இக்குழந்தைகள் இரண்டும் ஒரே பாலாகவும் (இரண்டும் ஆண் அல்லது இரண்டும் பெண்) ஒரே தோற்றமுடையவை யாகவும் இருக்கும். இரு குழந்தைகளின் உருவ ஒற்றுமை நெருங்கிய உறவினர்களிடையே கூடக்குழப் பத்தை உண்டாக்கும் விதமாக இருக்கக் கூடும். இரு குழந்தைகளின் உள்ளங்கை, விரல்களின் ரேகைக ககளும் ஒத்திருக்கும். $ இரு அண்டங்கள் இரு விந்தணுக்களுடன் ணைவதால் உண்டாகும் இரட்டைக் குழந்தைகள் ஈரண்ட இரட்டையர் எனப்படுவர். இக்குழந்தைகள் ஒரே பால் குழந்தைகள் அல்லது வெவ்வேறு பால் குழந்தைகளாக (ஒன்று ஆண் ஒன்று பெண்) இருக் கலாம். இரு குழந்தைகளின் எடையும் ஏறக்குறைய சமமாக இருக்கும். இரட்டைக் குழந்தைகள் ஓரண்ட இரட்டையரா, ஈரண்ட இரட்டையரா என்பதைக் குழந்தைகள் பிறப்பதற்குப் பின் வெளிப்படும் நஞ்சைச் சோதித்துப் பார்ப்பதன் மூலம் அறியலாம். இரட்டைக் குழந்தைப் பிறப்பு என்பது பரம் பரையாக வரக்கூடும். சில குடும்பங்களில் தலை முறை தலைமுறையாக இரட்டைக் குழந்தைகள் தோன்றக்கூடும். தாயின் வயதும் குழந்தையின் வரிசை எண்ணும் இரட்டைக் குழந்தைப் பிறப்பில் குறிப்பிடத்தக்க டம் பெறுகின்றன. தாயின் வயது தந்தை வயதைவிட அதிகமாக இருந்தாலோ, பல குழந்தைகள் பெற்றமையாலோ அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகமாகும். தாயின் உடலில் சில ஹார்மோன்கள் (hormones) அதிக அளவில் சுரத்தலும், குழந்தைப் பேற்றிற்காக அளிக் கப்படும் சிலவகை மருந்துகளும் குளோமிஃபின் சிட்ரேட் (clomiphene citrate), இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புத் தோன்றக்கூடும். இரட்டைக் குழந்தைப் பிறப்பில்