514 இரட்டைக் குளம்பிகள்
514 இரட்டைக் குளம்பிகள் astragalus) என்னும் கணுக்கால் எலும்புகளின் முனைகளில் 'கப்பி' (pulley) போன்ற வரிப்பள்ள அமைப்புகள் இருப்பதால் இவற்றின் கால் இயக்கம் எளிதாகவும், தாவிக் குதிப்பதற்கு ஏற்றதாகவும் இருக்கிறது. விரல்களின் எண்ணிக்கை குறைந் துள்ளது. கட்டை விரல்கள் (முதல்விரல்) இல்லை. மூன்றாம், நான்காம் விரல்கள் நடப்பதற்கும், பிற செயல்களுக்கும் பயன்படுகின்றன. கால்களின் செங் குத்து அச்சு, நான்காம், ஐந்தாம் விரல்களுக்கு நடுவில் செல்கிறது. இரண்டாம், ஐந்தாம் விரல்கள் சிறுத்து, கால்களின் பிற்பகுதியிலோ, மருங்குகளிலோ அமைந்திருக்கும். இரட்டைக் குளம்பிகள் யாவும் தாவரவுண்ணி கள்; முன் கடைவாய்ப் பற்களும், பின் கடைவாய்ப் பற்களும் மாறுபட்ட அமைப்புடையவை. பல் மேற் பரப்பு, சிறு கூம்புடையவையாகவோ, தட்டை யாகவோ, வரி மேடுகளுடனோ இருக்கும். இவற்றின் இரைப்பை பல பகுதிகளாக அமைந்துள்ளது; குடல் வால் சிறியது. இவற்றின் விரல்கள் இரட்டைப் படை எண்ணிக்கையில் இருப்பதாலும், விரல் நுனிகளில் குளம்புகள் காணப்படுவதாலுமே இவை 'இரட்டைக் குளம்பிகள் எனப்படுகின்றன. தரையில் விரல் நுனியைப் பதித்து நடக்கும் இவற்றின் முறையைக் குளம்பூன்றிய நடை' (unguligrade mode of walking) எனக் கூறுகிறோம். பெண் விலங்குகளில் குறைந்த எண்ணிக்கையில் முலைக்காம்புகள் இருந்தால் பால் மடி (mammae) பின் இடுப்புப் பகுதியிலும், அதிக எண்ணிக்கையில் இருந்தால் வயிற்றுப்பகுதியிலும் அமைந்திருக்கும். இரட்டைக் குளம்பி வரிசை (artiodactyla) மூன்று உள்வரிசைகளாக வகைப்பாடு செய்யப் பட்டுள்ளது. அவை, சூயினே (suinae), டைவோப் போடா (tylopoda). ரூமினன்ஷியா அல்லது அசை போடுவன (ruminantia) ஆகியனவாகும். உள்வரிசை : சூயினே. இதில் ஹிப்போபொட்ட மிடே (hippopotamidae), சூயிடே (suidae), டயாசுடே tayassuidae or dicotylidae) ஆகிய குடும்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குடும்பம் 1. ஹிப்போபொட்டமிடே (நீர்யானைக் குடும்பம்). இக்குடும்பத்தில் ஹிப்போபொட்டாமஸ் ஆம்ஃபி பியஸ் (Hippopotamus amphibius), என்னும் பெரிய நீர்யானை, சொராப்சிஸ் லைபீரியன்சிஸ் (Choeropsis {iberiensis) என்னும் குட்டை நீர்யானை (pigmy hippopotamus) ஆகிய இரண்டு இனங்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் காணப்படுகின்றன. நீண்ட உடல் (2.5 மீட்டர்); அதிக எடை (4.5 மெட்ரிக் டன்); தடித்த தோல்; நீண்ட நகமுடைய 4 விரல்கள் கொண்ட குட்டையான கால்கள்; தாவரம் உண்ணும் பழக்கம்; நான்கு அறைகளாக அமைந்த இரைப்பை; அசைபோடாத தன்மை ஆகியவை இவற்றின் சிறப்புப் பண்புகள். இவ்விலங்குகளின் பல்சூத்திரம்- வெட்டும் பற்கள் உ-3-, கோரைப் பற்கள் 1. 1 முன்கடைவாய்ப் பற்கள் கடைவாய்ப் பற்கள் 2 3 3 மொத்தம் 38 அல்லது 40 பற்கள். இவை நீரிலும், நிலத்திலும் வாழ்கின்றன. ஆறுகளில் வாழ்ந்தாலும் கடலுக்குச் செல்லும் இயல்புடையவை. நாசித் துளை களில் மூடிகள் இருப்பதால் 10 நிமிட நேரம் கூட நீரில் மூழ்கி இருக்கும் திறனுடையவை. இவற்றின் எண்ணெய் போன்ற வியர்வையில் இரத்தச் சிவப் பணுக்களும், சிவப்புநிற நுண்படிகங்களும் நிறைந் துள்ளமையால், இது இரத்த வியர்வை (blood sweat) எனப்படும். படம் 2.நீர்யானை " நீர்யானைகளில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் இனச்சேர்க்கை நடைபெறுகிறது. பின்னர் 227-240 நாள் சென்ற பின்னர் பெண்விலங்கு நீருக்கடியில், குட்டியை ஈனும். குட்டியின் எடை 45 கி.கி. எடை இருக்கும். குட்டி, மூன்று வயதில் பருவ முதிர்ச்சி யடைகிறது; பெண் நீர்யானையில் இரண்டு முலைக் காம்புகள் உள்ளன. நீர் யானைகள் 35 வயது வரை வாழும். இவற்றின் இறைச்சி மனிதர்களால் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது; தோல் சட்டை