பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைச்‌ சாக்கரைடுகள்‌ 521

D - அரபோனிக் அமிலம் (D-arabonic acid) கிடைக் கிறது. நைட்ரிக் அமிலத்துடன் பல்வேறு சூழ் நிலைகளில் ஆக்சிஜனேற்றம் நடந்து ஆக்சாலிக் அமிலம் (80%), டார்டாரிக் அமிலம் (40%), குளுட் டாரிக் அமிலம் (30%) போன்றவை விளைகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட ஹைட்ரஜனேற்றத்தால் மானிட் டால் (mannitol), சார்பிட்டால் (sorbitol) கவவை கிடைக்கும். இன்வர்டேஸ் (invertase) என்னும் நொதியைச் சேர்த்துச் சர்க்கரையை நொதிக்க வைக்கும் போது சுக்ரோஸும். ஃபிரக்ட்டோஸும் உண்டாக்கப்படு கின்றது. பின்னர் அவற்றுடன் சைமேஸ் (zymase) நாதியைச் சேர்த்து நொதிக்க வைத்தால் எத்தில் ஆல்கஹால் கிடைக்கிறது. தொழில் முறையில் எத்தில் ஆல்கஹால் தயாரிக்க இது உதவுகிறது. மால்ட்டோஸ் (C,Ha,O1). இது டயஸ்டேஸ் நொதி (diastose enzyme) ஸ்டார்ச்சுடன் வினைப் படும் போது உண்டாகிறது. n (C,H,O )n + - H,O டயஸ்டேஸ் CuH2,O1x மால்ட்டோஸ் வெண்ணிறப் படிக உருவம் கொண்ட திண்மம், உருகுநிலை 160-165°C, நீரில் கரைகிறது. முனைவுடை ஒளியை (polarised light) வலப்புற மாகச் சுழற்றுகிறது (dextro rotatory). நீர்த்த அமி லங்களால் அல்லது மால்ட்டேஸ் (maltase) நொதி யினால் நீராற்பகுக்கும் போது இரண்டு மூலக் கூறுகள் D (+) குளுக்கோஸ் கிடைக்கிறது. மால்ட் டோஸ் ஓர் ஒடுக்கும் சர்க்கரையாகும். ஃபீலிங் கரை சலை ஒடுக்குகிறது; ஆக்சிமும், ஓசசோனும் உண்டா கின்றன. சிதைபுரிமாற்றம் அடைகிறது. இதனால் மால்ட்டோஸில் குறைந்தது ஓர் ஆல்டிஹைடு தனியே இருப்பது தெரிகிறது. மேலும் மால்ட்டேஸ் நொதி - கிளைக்கோசைடு பிணைப்புகளையே பிளவுறச் செய்கிறது. எனவே மால்ட்டோஸில் a- பிணைப்பு இருப்பது தெரிகிறது. லாக்ட்டோஸ் (Cī,H,,O,,). இது விலங்குகளின் பாலில் உள்ளது. லாக்ட்டோஸ் வெண்ணிறப் படிகத் திண்மம். இதன் உருகுநிலை 203°C (சிதைவுறுகிறது), நீரில் கரைகிறது. இது ஒரு வலஞ்சுழிப் பொருளாகும். லாக்ட்டோஸை நீர்த்த அமிலங்களினால் அல்லது லாக்ட்டேஸ் (lactase) நொதியினால் நீராற்பகுக்கும் போது சமமோலார் டி(+) குளுக்கோஸ், டி(+) கேலக்ட்டோஸ் கலலை கிடைக்கிறது. லாக்ட்டோஸ் ஓர் ஆக்சிஜன் ஒடுக்கும் சர்க்கரையாகும். இதுவும் ஆக்சிம், ஓசோன் ஆகியவற்றைக் கொடுக்கிறது; சிதைபுரி மாற்றமும் அடைகிறது. லாக்ட்டேஸ் ஒரு நீ -கிளைக்கோசிடேஸ்; அதாவது இது ந - கிளைக் இரட்டைச் சாக்கரைடுகள் 521 கோசைடு பிணைப்புகளையே பிளவுறச் செய்கிறது. எனவே லாக்ட்டோஸ் -வடிவம் கொண்டது. HO-C-H -H H OH HOH HO -H HO- -H HO- -H H CH₂OH H- H- CH₂OH அல்லது CH,OH H OH HO H H OH H OH H H H H H OH H OH CH₂OH லாக்ட்டோஸ் செல்லோபயோஸ் (C,H,,O,,). இது செல்லுலோ ஸிலிருந்து பெறப்படுகிறது. நல்ல வடிதாளை (இது ஏறக்குறைய தூய்மையான செல்லுலோஸ்) அசெட்டிக் நீரிலியை அடர் கந்தக அமிலம் உடனிருக்க அசெட்டைல் ஏற்றம் செய்யும்போது கிடைக்கும் செல்லோபயோஸின் ஆக்டா அசெட்டேட்டை, H H-C-OH H OH H- -OH HO -H HO -H H H- OH H- H- CH₂OH CH₂OH அல்லது CH₂OH H H OH H HO H H OH H OH OH OH H ပြေးကြပြီး H H CH,OH செல்லோபயோஸ் H