இரட்டைத்துணி மற்றும் பலவுறுப்புத் துணிகள் 523
இரட்டைச் சிப்பிகளை உணவாக உட்கொள்வ உரு தாலும் அவை விலையுயர்ந்த முத்துக்களை வாக்குவதாலும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உயிரிகளாகக் கருதி அவற்றைச் செயற்கை முறையில் உருவாக்கும் பெரும் பண்ணைகளை அரசு இடங்களில் உருவாக்கியுள்ளது. பல நூலோதி. Parker and Haswell, A Text Book of Zoolgy, vol. I pp. 537, 1967; Kotpal, A Text Book of Invertebrates, pp. 573-598; Ekambranathaya Ayyar A Manual of Zoology, part-I Viswanatha Publishing House, Madras. கோவி. இராமசுவாமி இரட்டைத்துணி மற்றும் பலவுறுப்புத் துணிகள் 523 நெய்யப்படுகிறது. ஒரே நெசவுத்தறியில், ஒன்றின் மேல் ஒன்றாக நெய்யப்பட்ட இரு துணிகளுக்கிடை யேயுள்ள ஐந்தாவது நூலிழை இரு துணிகளையும் ஒன்றிணைக்கிறது. இரு துணிகளை இணைத்திருக் கும் இழையைப் பிரித்தெடுப்பதால் உண்மையான இரட்டைத் துணி பிரிக்கப்படலாம். இது, மறுபுறமும் பயன்படுத்தப்படும் உடை வகைகளான பாவாடை கள், தோள் அணி ஆடைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. வெட்டப்பட்ட முனைகளில் முக்கால் அங்குல அளவிற்கு இரு துணிகளையும் பிரித்து ஒன்றை ஒன்று நோக்குமாறு மடித்து மையத்தில் தைப்பதால், முனைகள் சீர் செய்யப் படலாம். மேல் தையல் அல்லது நெகிழ்வுத்தையல் (top stitch or slip stitch) முனைகளைச் சீராக்கு கிறது. இரட்டைத்திரிப்பு நூல் காண்க, வடப்புரிநூல் (cabled yarn). இரட்டைத்துணி மற்றும் பலவுறுப்புத் துணிகள் ஒற்றைத்துணியை விட இரட்டைத்துணி மற்றும் பலவுறுப்புத் துணிகள் (double cloth and muiticom- ponent fabrics) எடையும் தடிமனும் மிகுந்து காணப் படுகின்றன. இரட்டைத்துணி மூன்று அல்லது அதிகமான நூலிழைகளினால் நெய்யப்பட்ட துணி யாகும். மேலும், இரண்டு அல்லது அதற்கும் மேலான இழைகளால் இரட்டைப்பின்னல் செய்யப் படுகிறது. முன்னர் உருவாக்கப்பட்ட இழைகளுடன் கடல்நுரை, இழைத்திணிப்புப் பொருள் (fiber batt), அல்லது மற்றொரு இழை ஆகியவற்றை இணைத்துப் பலவுறுப்புத் துணிகள் செய்யப்படுகின்றன. இரட்டைத்துணிகள் உண்மையான இரட்டைத்துணி- மேலங்கித் துணிகள். ஆண்களின் ஆடைக்கான துணிவகை (melton), முரட்டுக்கம்பளி வகை (kersey), கனத்த கம்பளி வகை (bearer), நேர்த்தியான கம்பளித்துணி வகை (saxony), வைட்னி (whitney), மான்டேக்நாக் (montagnac) போன்றவையாகும். இரட்டைத்துணி. உடை மற்றும் அங்கித்துணிகள் மேட்லாஸ் (matelosse) ப்ரோகேட்லி (brocatelle). இரட்டை - முகப்புடையது. (double faced ) விரிப்பு அல்லது போர்வைத்துணி, இரட்டை பட்டுக்கயிறு (double satin ribbon) சன்பாக். மேல் ஒண் ண்மையான இரட்டைத்துணி. உண்மையான ஐந்து இணை நூலிழைகளால் இரட்டைத்துணி . படம் 1. ஐந்து இணை நூலிழைகளால் நெய்யப் பட்ட உண்மையான இரட்டைத்துணி உண்மையான இரட்டைத்துணிகளை உற்பத்தி செய்வதற்கு மிகுந்த செலவாகும். ஆனால், இது இரு இணை நூலிழைகளால் நெய்யப்பட்ட அதே எடைத் துணிகளைவிட மிகுந்த நெகிழ்வுடன் காணப்படு கிறது. இரட்டைத்துணி. இரட்டைத்துணி, ஒரே நெசவுத் தறியில் பாவைத் தவிர்த்து நான்கு இணை நூலிழை களால் தனியாக நெய்யப்படுகிறது. ஒரு துணியை முழுமைப்படுத்தும்போது, பாவிலிருந்து மாறுபட்டு, இரண்டாவது துணியை முழுமைப்படுத்தும்போது, வடிவமைப்பின் தேவைக்கு ஏற்ப இரு துணிகளும் இடைவெளிகளில் இணைக்கப்படுகின்றன. குறுக்கு நெடுக்காக வெட்டப்பட்ட இடை வெளிகளில், இரு துணிகளும் முழுமையாகப் பிரிக்கப்படுகின்றன.