பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/553

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டைத்‌ தோற்றம்‌ 529

இமை விழி ஒட்டு (symblepharon) போன்றவற்றால் விழிக்கோள அசைவுகளுக்கு ஏற்படும் கட்டுப்பாடும் இரட்டைத் தோற்றத்திற்கான விழிக்கோள இயக்கத் தடைக் காரணங்கள் ஆகும். கண் தசைகள் இயக்கப் பாதிப்பினால் ஏற்படும் கண் ஒதுக்கம் கீழ்வரும் நிலைகளில் இரு கண்சார்ந்த இரட்டைத் தோற்றத்தை உண்டாக்கும். தேவை யான கண் கூட்டிணைவுத் திறனுக்குரிய எதிர் வினைகள் இல்லாமையால் நிறைவு செய்யப்படாத ஹெட்டிரோபோரியாவும் (uncompensated hetero- phoria), கண் குவிவுத் திறன் குறைவும் நேர் கின்றன. சுரங்கத் தொழிலாளிகளுக்கு ஏற்படும் கண் ஆட்டம் (miner's nystagmus) அண்மைப்பார் வைக் குறை(presbyopia) இவ்விரண்டும் கண் குவிவுத் திறன் குறைவுக்கான எடுத்துக் காட்டுகள். இந் நிலையில் இரு கண்சார்ந்த இரட்டைத் தோற்றம் உண்டாகும். உடனியங்கு மாறுகண் (concomitant strabismus) கண் வெளித் தசைகளில் அடிபடுதல், நோய்த் தாக்குதல், விட்டுவிட்டு ஏற்படும் தசை இழுப்பு நிலைகள் (spasmodic conditions), கண் தசை இயக்க நரம்புகளின் செயலிழப்பு இவற்றால் ஏற்படும் உடனியங்கா மாறுகண் (incomitant squint) உடலின் நிலை, இயக்கம் குறித்த உணர்வு முனைகளை யுடைய (proprioceptive fibres கொண்டு செல் நரம்புகளில் ஏற்படும் தடைகள் (எ.கா. தொடக்க நிலை ரே பிஸ், களைப்பு, ஹிஸ்டீரியா) முதலிய நிலை களிலும் இரு கண் சார்ந்த இரட்டைத் தோற்றம் உண்டாகும். இவைதவிர ஒரு கண்ணின் முன்னால் பட்டகம் வைப்பதன் மூலமும் ஒளிக்கதிர்கள் விலகி இரட்டைத் தோற்றம் ஏற்படும். தோற்றத்திற்கான ஒரு கண் சார்ந்த இரட்டைத் காரணங்கள். ஒளியியல் சார்ந்த காரணங்கள், உடனி கழ்வான இரு உருவமைவுகளை உணர்தல், பெரு மூளையில் ஏற்படும் தொடர்பறும் போக்குடைய ய உறுப்புச் சிதைவு இவற்றால் ஒரு கண் சார்ந்த இரட்டைத் தோற்றம் ஏற்படும். ஒரு கண் சார்ந்த இரட்டைத் தோற்ற நிலைகள் இயற்பியல் சார்ந்தவை. ஒழுங்கற்ற நிறமிலி இழைம் உருட்சிப் பிழை (astigmatism) நிறமிலி இழைம அழற்சி,நிறமிலி இழைமத்தில் ஏற்படும் கதிர் மடக் கத்தைத் தடைசெய்யும் காரணங்கள், இரண்டு கருந் திரைத் துளைகள் அழற்சி, அடிபடுதல்,பிறவிக் குறைகளால் தோன்றும் கருந்திரைக் கிழிவு (irido- dialysis) விழியாடி முழுமையாக அல்லது அரை குறையாக நழுவுதல், விழியாடி வெளுப்பின்தொடக்க நிலை விழியாடியில் நேரும் திரவப் பிளவுகள் பிறவிக் குறைபாட்டால் ஏற்படும் இரட்டை ஒளி அ.க.4-34 இரட்டைத் தோற்றம் 529 முறிவு காற்றுக் குமிழ்கள், ஒளி ஊடுருவும் தன்மை வாய்ந்த வெளிப் பொருள்கள் கண் முன் நீர் அல்லது கண் பின் நீரில் படிகங்கள் அல்லது நீர்மம் கொண்டுள்ள இழைமப் பை, பார்வைத் திரை விலகல் போன்ற இயற்பியல் சார்ந்த காரணங் களால் ஒரு கண் சார்ந்த இரட்டைத் தோற்றம் ஏற்படும். மூளையில் கேல்கரைன் பகுதியில் பாதிப்பு ஏற்படுவதால் நேரும் அரைப்புலக்குருடு, அரைப் புலப் பார்வை மந்தம் (hemiambiyopia) அதிகப் படியான பெருமூளைப் பாதிப்புடன் ஏற்படும் கண் வெளித் தசைகளின் செயலிழப்பு ஆகிய மைய நரம்பு மண்டலஞ் சார்ந்த காரணங்களாலும் ஒரு கண் சார்ந்த இரட்டைத் தோற்றம் நேர்கிறது. இரட்டைத் தோற்றத்தைக் கண்டறியும் முறைகள். முழுமையான கண் ஆய்வு செய்வதன் மூலமும், சிவப்பு, பச்சைக் கண்ணாடிகள் அணிவித்துக் கோடு போன்ற ஒளியைப் பார்க்கச் செய்வதன் மூலமும் இரட்டைத் தோற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம். இந்த இரட்டைத் தோற்ற ஆய்வு வழி எந்தத் தசை செயலிழந்திருக்கிறது என்பதைக் கண்டறியலாம். இதற்கு ஹெஸ்வரைபடமும் உதவும். விலகலின் கோணத்தை அளக்க மேடாக்ஸ் கோல் ஆய்வு உதவும். இரட்டைத் தோற்றத்தை அடக்கி விஞ்சுதல். பொது வாக இரட்டைத் தோற்றம் துன்பமான வெளிப்பாடு தான் என்றாலும், சில வகை மாறுகண் குறை பாட்டில், இது மிகவும் துன்பம் கொடுப்பதால் சிறு குழந்தைகள் கூட எப்படியாவது தமக்குத் தாமே ஏதாவது ஒரு வழியில் இந்தத் துன்பத்திலிருந்து மீள முயல்கின்றனர். தலையைச் சாய்த்துக் கொள்வதன் மூலம் அல்லது ஒரு கண்ணை உயர்த்தி மறு கண்ணைத் தாழ்த்துவதன் மூலம் இரட்டைத் தோற்றம் ஏற்படாமல் தடுக்கப்பார்க்கின்றனர். இதில் தோல்வி ஏற்பட்டால் கீழ்க்காணும் வழிகளில் ஒன்று அல்லது சிலவற்றை மேற்கொள்ளலாம். ஒரு கண்ணை மூடுதல், தடையுணர்வை வளர்த்து அதன் வழி ஒரு படிவத்தை ஒதுக்கும் திறன் கொள்ளல், அல்லது இயல்பாக நேரும் இரட்டைத் தோற்றத்தைப் போன்றதுவே இது என்று ஏற்குமாறு உள் ஆற்றலைப் பெருக்கல் என்பன. ஆய்வுகள் செய்யும் போது மட்டுமே இரட்டைத் தோற்றம் வெளிப்படும். மாறுபட்ட தொடர்புணர்வை வளர்த்தல், மட்டுப் படுத்தப்பட்ட உடல் நிலைகளை மேற்கொள்ளுதல், ஒதுங்கிய கண்ணை மேலும் ஒதுங்கச் செய்வதன் மூலம் குழப்பம் தரும் இரண்டாவது படிவத்தைப் பக்கவாட்டுப் பகுதியிலிருந்து விலக்குதல் ஆகிய வற்றால் உடனியங்கு இரட்டைத் தோற்றத்தைப் பட்டகம் மூலம் செயற்கையாகத் தவிர்க்கலாம். அறுவை மருத்துவம் மூலம் கண் ஒதுக்கம் நேராக்கப் பட்டால் முற்றிலும் இக் குறை நீக்கப்படும்.