பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 இரட்டை/ஒற்றை விதை இலைத்‌ தாவரங்கள்‌

532 இரட்டை/ஒற்றை விதை இலைத் தாவரங்கள் பற்றி ஆராயலாம். இந்த ஆய்வில் புவியின் சுற்று விரைவு விண்கலத்தில் பயணம் செய்பவர் பெறும் முடுக்கங்கள் இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தள்ளிவிடலாம். விண்வெளிக்கலம் புவிக்கு அண்மை யில் 4.3 ஒளியாண்டுத் தொலைவில் இருக்கும் ஒரு விண்மீனை நோக்கி ஒளியின் விரைவில் ஒட்டிய பெரும் வேகத்தில் (99 விழுக்காடு ) சென்றால் மீண்டும் புவி வந்து சேர்வதற்கு ஏறத்தாழ 8 ஆண்டு காலம் ஆகியிருக்கும். ஆனால் விண்கலத்தில் 14 மாதங்கள் மட்டுமே கழிந்திருக்கும். இரட்டையர்கள் இருவரும் பயணத் தொடக்கத்தில் 20 வயதினராக இருந்தால் பயணம் முடிவில் புவியில் இருந்தவருக்கு 28 ஆண்டுகள் ஆகியிருக்கும். பயணம் சென்று திரும்பிய மற்றவருக்கோ 21 வயது மட்டுமே நிரம்பி யிருக்கும். மேலும் மிகுதியான தொலைவு சென்று திரும்பினால் இரட்டையரிடையே வயதில் மேலும் வேறுபாடு ஏற்படும். காலம் பற்றிய நியூட்டன் கோட்பாட்டினை விடுத்துச் சார்புக் கோட்பாட்டு வழிப் பார்த்தால் இதில் புதிர் எதுவுமில்லை. இருப் பினும் புவியில் இருப்பவரை நோக்கப் பயணம் செய்பவரின் நிலையும், பயணம் செய்பவரை நோக்கப் புவியில் இருப்பவரின் நிலையும் ஒன்றே என்று பிழையாகக் கொண்டு இயற்கைக்கு ஒவ்வாத வகையில் ஒருவரை நோக்க மற்றொருவர் வயதில் இளைஞராக இருப்பார் எனக் குழம்புவதாலேயே இரட்டையர் புதிர் கடிகாரப்புதிர் போன்றவை எழுகின்றன. புவியிலிருப்பவர் ஒரே நிலைமைச் சட்டத்திலேயே இருக்கின்றார். ஆனால் விண்வெளியில் சென்று மீள் பவரோ, பயணம் முழுதும் வெவ்வேறு நிலைமைச் சட்டங்களில் இருந்திருக்கின்றார். இரட்டையரில் விண்வெளியில் சென்று வந்தவரின் உலகக்கோடு ஒரு வளைந்த கோடாக இருக்கும். புவியிலிருந்தவரின் உலகக் கோடோ ஒரு நேர்கோடாக இருக்கும். எனவே, ஒருவரை நோக்க ஒருவர் ஒரே வகையில் விலகிப் பயணம் செய்து மீண்டும் வந்து கின்றார் என்ற சமச்சீர்மைக்கு இடமில்லை. கூடு மேலே கூறிய முறையிலும், விரைவிலும் விண் வெளிப்பயணம் மேற்கொள்வதற்கான தொழில் நுட்பத்திறன் இன்றைய நிலையில் வளர்ந்து விட வில்லை என்பது உண்மையே ஆனாலும் நுட்ப மாகச் செயல்படும் அணுக்கடிகாரம் ஒன்றைப் புவியில் வைத்து மற்றொரு கடிகாரத்தை விரைந்து செல்லும் வான ஊர்தியில் தாங்கியபடி புவியைக் கிழக்கு மேற் காகக் சுற்றிச் சென்று ஆய்ந்ததில் சிறப்புக் கோட் பாடு விளைவுகள் அறிவியலாரால் காண இயன்றது. ஐன்ஸ்டைனின் சார்புக் கோட்பாட்டின் விளைவால் எத்தகைய கடிகாரப் புதிரும் ஏற்படவில்லை. கொ.சு.ம. நூலோதி. ராஜம்,ஜே.பி. புதுமை பெளதிகம், இரண்டாம் தொகுதி, தமிழாக்கம் கா. வே. சுப்பிர மணியன், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், 1971. இரட்டை/ஒற்றை விதை இலைத் தாவரங்கள் தாவர வகைப்பாட்டியல் (plant taxonomy) என்பது பலவகைத் தாவரங்களைப் பற்றி ஆய்வதையும், அவற்றின் ஒருமைப்பாட்டினை நிரூபித்தலையும், அவற்றின் பண்புகள், தொடர்புகள் ஆகியவற்றை ஆராய்வதையும் விவரிக்கும் இயல் ஆகும். பரிணா மத்தின் அடிப்படையில் மிகவும் உயர்ந்த நிலையில் இருப்பவையாகக் கருதப்படும் பூக்கும் தாவரங்கள் (angiosperms) அவற்றின் விதையிலை எண்ணிக்கை யைக் கொண்டு இரட்டை விதையிலைத் தாவரங்கள் (dicotyledons), ஒற்றை விதையிலைத் (monocoty- Iedons) தாவரங்கள் என்று பிரிக்கப்படுகின்றன. இவ்விருவகைத் தாவரங்களும் பல முக்கியமான புறத் தோற்றப் (morphology) பண்புகளிலும் உள்ளமைப் புப் பண்புகளிலும் வேறுபடுகின்றன. இரட்டைவிதையிலைத் தாவரங்களின் தனிப்பண்பு கள். இவ்வகைத் தாவரங்கள் மரங்கள் குறுமரங்கள் (shrubs) செடிகள் (herbs) ஆகியமூன்று வளர் இயல்பு களையும் (habits) கொண்டவை. இவற்றின் விதைகள் இரண்டு விதை இலைகளையும், இலை ஆணிவேர்த் தொகுதியையும் (tap root system) கொண்டவை. இலைகளின் நரம்பமைப்பு வலைப்பின்னல் முறையி வானது (reticulate). இலைகளுக்கு இலையடி உறைகள் (leaf sheath) கிடையா. இத்தாவரங்களின் பூக்களில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஐந்தின் மடங்குகளாகவோ (pentamerous ) இருக்கும். பூக்கள், புல்லிவட்டம் (calyx), அல்லி வட்டம் (corolla) என்ற இரு பிரிவுகளைக் கொண் டவை. சாதாரணமாகப் புல்லிகள் பச்சை வண்ண மாயும் அல்லிகள் பல் வண்ணமுடையவையாகவும் இருக்கும். இவற்றின் தண்டுகளிலும் வேர்களிலும் உள்ள காற்றுக் குழாய்த்தொகுப்பு (vascular bundle) ஆரப்போக்கு அமைவு (radiai arrangement) முறை யில் அமைந்துள்ளன. இவை வட்ட வடிவத்தில் அடுக்கப்பட்டுள்ளன. தண்டுகளில் புறணி (cortex) உண்டு. இருவிதையிலைத் தாவரத் தண்டுகளில் பெரும்பாலானவை இரண்டாம்படி (secondary growth; அடையக்கூடியவை. வளர்ச்சி இவ்வகை யில் இவை சுற்றுவடிவில் (girth) பருக்கக்கூடியவை. ஒற்றை விதையிலைத் தாவரங்களின் தனிப்பண்புகள். இவை பெரும்பாலும் செடிகளாகவும் குறுமரங்க ளாகவும் வளரும். பனைக்குடும்பத்தில் (arecaceae) உள்ளவை போன்ற ஒரு சில தாவரங்களே மரமாக