இரட்டை/ஒற்றை விதை இலைத் தாவரங்கள் 533
வளரக்கூடிய தன்மை பெற்று விளங்குகின்றன. இவற் றின் விதைகள் ஒரேஒரு விதையிலை மட்டுமே கொண்டவை, இத்தாவரங்களின் முளைக்குருத்துகளி லிருந்து தோன்றும் முதன்மை வேர் (primary root) மிகக்குறுகிய காலமே வாழக்கூடியது. பின்னர் வேற் றிட வேர்த்தொகுப்பு(adventitious roots)வளர்ச்சியில் தோன்றும் சல்லி வேர்களே தாவரத்தின் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கின்றன. இலைகளின் நரம் பமைப்பு இணை நரம்பமைவு முறையிலானதாகும். ஒருவிதையிலைத் தாவரங்களின் இலைகள் பெரும் பாலும் உறைபோன்ற இலையடிகளைக் (sheathing 1eaf base) கொண்டவை. இவ்வுறைகள் கணுப் பகுதியை (node) மூடியிருக்கும். இவ்வகைத் தாவரங் களின் பூக்களில், உறுப்புகளின் எண்ணிக்கை மூன்று அல்லது மூன்றின் மடங்குகளாகவே (trimcrous) இருக்கும். பூக்கள், புல்லிவட்டம், அல்லிவட்டம் என்று இரண்டு தனித்தனிப் பகுதிகளைக் கொண் டவை அல்ல. பூ இதழ்கள் (perianth) மட்டுமே உண்டு. இருவிதை இலைத் தாவரங்களில் இருப்ப தைப் போன்று வண்ணத்தில் வேறுபட்ட இரு பூவிதழ் வட்டங்கள் இங்கு கிடையா. இங்கு வாஸ் குலார் உருளைகள் ஆரப்போக்கு அமைவு முறையில் அமைந்தவை அல்ல. தண்டுகளில் புறணி எனத் தனிப்பகுதியும் கிடையாது. மாறாகத் தளத்திசு (ground tissue) என்ற ஒரு வகைச் சிறப்புத் திசுக்கள் காணப்படுகின்றன. இத்திசுவில் வாஸ்குலார் உரு ளைகள் சிதறிக் கிடக்கின்றன. ஒழுங்கான வடிவமைப்புக் கிடையாது. ஒருவிதையிலைத் தாவரங் களில் தண்டுகளில் காணப்படும் வாஸ்குலார் உருளைகள் மண்டையோட்டு வடிவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தாவரங்களில் சாதாரணமாக இரண்டாம்படி வளர்ச்சி நடை பெறுவதில்லை. டிரசீனா (dracena) போன்ற ஒரு சில தாவரங்களில் மட்டும் அரிதான இரண்டாம்படி வளர்ச்சி (anamolous secondary growth) காணப் படுகிறது. வட்ட இரட்டை/ஒற்றை விதையிலைத் தாவரங்களின் வகைப்பாட்டியல். இவ்விருவகைத் தாவரங்களின் வகைப்பாட்டியலுக்கு கண்டோல், எங்ளர், ஹட்சின்சன், பெந்தம்-ஹுக்கர் போன்ற பல முறை கள் உள்ளன. இவற்றில் எளிதானதும், மிக அதிக மாகப் பின்பற்றப்படுவதுமான பெந்தம் -ஹுக்கர் வகைப்பாட்டு முறையே (1862-1883) இக்கட்டுரை யில் தழுவப்படுகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் பெந்தம், சர் ஜோசப் டால்டன் ஹுக்கர் என்ற இரு வல்லுநர் களும் கூட்டாகத் தங்கள் தாவர வகைப்பாட்டியல் கொள்கைகளை, மூன்று தொகுப்புகளடங்கிய ஜெனரா பிளான்டாரம் (Genera Plantarum) என்ற வகைப்பாட்டு நூலாக இலத்தீன் மொழியில் வெளி இரட்டை ஒற்றை விதை இலைத் தாவரங்கள் 533 யிட்டனர். வகைப்பாட்டு முறைகள் அனைத்திலும் இதுவே சாலச்சிறந்ததெனக் கருதப்படுகிறது. பெந்தம் -ஹுக்கர் முறையில் இருவிதையிலைத் தாவரங்கள் பாலிபெடலே (polypetalae), கேமோ பெடலே (gamopetalac), மானோகிளாமிடியே (mono- chlamydeae) என்ற துணை வகுப்புகளாகப் பிரிக்கப் படுகின்றன. இவை முறையே அல்லி இதழ் இணை யாதவை, அல்லி இதழ் இணைந்தவை, இதழ்கள் ஓர் அடுக்கில் அமைந்தவை அல்லது அற்றவை என்ற முறையில் பிரிக்கப்பட்டுள்ளன. இத்துணைவகுப்புகள் மேலும் தொகுப்புகளாகவும், அவை துணைகளாக வும் குடும்பங்களாகவும் பிரிக்கப்படுகின் றன. இரு விதையிலைத் தாவரங்கள் மொத்தம் 165 குடும்பங் களைக் கொண்டுள்ளன. ஒருவிதையிலைத் தாவரங்கள் ஏழு தொகுப்பு களாகப் பிரிக்கப்பட்டுள் ளன. இவற்றில் துறைகள் என்று ஒரு பிரிவு கிடையாது. தொகுப்புகள் நேரடி யாகக் குடும்பங்களாகப் பிரிக்கப்படுகின்றன. மொத் தம் 34 குடும்பங்கள் உள்ளன. இதில் எடுத்துக் காட்டுகள் சில கொடுக்கப்பட்டுள்ளன இருவிதையிலைத் தாவரங்கள் குடும்பம் மால்வேசி அனகார்டியேசி மீலியேசி ரோசேசி ஒரு விதையிலைத் தாவரங்கள் குடும்பம் லிலியேசி மூசேசி அரிகேசி போயேசி தாவரம் பருத்தி, பூவரசு முந்திரி, மா வேம்பு ரோஜா தாவரம் கலப்பைக்கிழங்குச் செடி வாழை தென்னை, பனை நெல், கோதுமை, சோளம். -தி. பாலமார் நூலோதி, சம்பத்குமார், ஆ. தாவர வகைப் பாட்டியல், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1976. Vasishta, P.C; Taxonomy of Angio- sperms. R. Chand & C., New Delhi, 1974. Coulter. J.M. and Chamberlain C.J, Morphology of Angio- sperms, New York, 1903.