534 இரட்டை விலகல்
534 இரட்டை விலகல் இரட்டை விலகல் சில படிகங்களில் படும் ஒளியின் பரவுத்தன்மையகப் படிகத்தால் தாக்கப்பட்டு, ஒளி இரண்டாகப் பிளவுப்பட்டு இரண்டாக விலகுதலடையும் செயல் இரட்டை விலகல் (birefriengence or double refr- action) எனப்படும். இதை முதலில் 1669 இல் எராஸ்மஸ் பர்தோலி னியஸ் என்பவர் கண்டறிந்தார். கால்சைட் படிகத் தில் இவர் ஒளி செலுத்தி ஒளி விலகலைக் கவனித்த போது இது இருவிலகலை அளித்தது. கால்சைட் என்பது கால்சியம் கார்பனேட் படிகமாகும். இது பல படிக வடிவில் அமைந்திருந்த போதும் ஒரு குறிப்பிட்ட அறுமுக வடிவில் 102 ஒரு மூலையும் 78" ஒரு மூலையும் கொண்டு இணை சாய் சதுரங் களாகக் கிடைக்கின்றது (படம்-1). இப்படிகத்தில் 102° கோணத்தை மூன்று பக்கமும் சமமாகப்பெற்ற மூலைகள், மழுங்கிய மூலைகள் (blunt corners} எனப்படும். அவ்வாறு இப்படிகத்தில் இரு மழுங்கிய மூலைகள். அம்மூலைகளை இணைக்கும் நேர்கோடு (AH) ஒளி அச்சு (optical axis) எனப்படுகிறது. ஒளி அச்சுக்கு இணையாகச் செல்லும் கோடுகளும் ஒளி அச்சு என்றே அழைக்கப்படுகின்றன. எனவே ஒளி அச்சு என்பது ஒரு தனிக் கோட்டினையல்லாமல் ஒரு திசையைத்தான் குறிக்கிறது என முடிவு கொள்ள லாம். இந்த ஒளி அச்சின் திசையில் ஒளி செலுத்தப் பட்டால் ஒளி விலக்கம் பெறுவதில்லை. 18*°* 102° படம் 1. ஒரு தாளில் மையால் ஒரு குறியிட்டு அதன்மீது கால்சைட் படிகத்தை வைத்தால் இரு புள்ளிகள் கண்ணிற்குத் தெரியும்(படம்-2). படிகத்தைச் சுழற்றி னால் ஒரு புள்ளி நிலையாக இருக்க, மற்றொரு புள்ளி சுழற்றுவதற்கேற்பச் சுழல்கிறது. எனவே புள்ளியின் நிலைத்த பிம்பம், இயல்பு பிம்பம் (ordi- nary image) எனவும் சுழலும் இரண்டாம் பிம்பம், சிறப்புப் கூறலாம். பிம்பம் (extraordinary image) எனவும் A படம் 2. B இயல்புக்கதிர் விலகலுக்கான ஸ்நெல் விதிகளைப் பின்பற்றுகிறது. ஊடகத்திற்கு இக்கதிருக்கான ஒளி விலகல் எண் மாறா மதிப்பைக் கொண்டிருக்கும். சிறப்புக்கதிரின் ஒளிவிலகல் எண் படுகோணத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இது வெவ்வேறு மதிப்பு களைப் பெறும் (மாறா மதிப்பு உடையது அன்று). கால்சைட் படிகத்தைப் பொறுத்து HO> ke po- இயல்புக்கதிரின் ஒளிவிலகல் எண், e - சிறப்புக் கதிரின் ஒளிவிலகல் எண்) எனவே படிகத்தினுள் இயல்புக்கதிரின் திசைவேகம் சிறப்புக்கதிரின் திசை வேகத்தைவிடக் குறைவாகும். கால்சைட்டில் சிறப்புக் கதிர் இயல்புக் கதிரைவிட மிகுந்த வேகத்துடன் செல்லும். மேலும் சிறப்புக்கதிரின் திசைவேகம் படி கத்தினுள் திசையைப் பொறுத்து மாறும். இருவிதக் கதிர்களும் தளவிளைவாக்கம் செய்யப் பட்டிருக்கும். இயல்புக்கதிரின் அதிர்வுகள் படிகத் தின் முதன்மைலெட்டு முகப்பிற்குச் செங்குத்தாகவும் சிறப்புக்கதிரின் அதிர்வுகள் வெட்டு முகப்பின் பரப பிலும் அமைந்திருக்கும். இவ்வாறாக இருவிதக் கதிர் களும் ஒருதளவிளைவாக்கம் பெற்றிருக்கும். ஒளி அச்சுக்குச் செங்குத்தான திசையில் ஒளிக் கதிர் படிகத்தில் பட்டால் அக்கதிர் இரண்டாகப் பிரிக்கப்படுவதில்லை. அதாவது இயல்புக்கதிரும் சிறப்புக்கதிரும் ஒரே திசையில் வெவ்வேறு திசை வேகங்களுடன் செல்லும், ஒரு படிகத்தினுள் இரட்டை விலகலுக்கு உள்ளான அலைமுகப்புகள் பரவும்போது இயல்புக்கதிரின் அலைப்பரப்பு சிறப்புக்கதிரின் அலைப்பரப்பினுள் அடங்கியிருந்தால் அத்தகைய படிகங்களை எதிர் பண்புப் படிகங்கள் (negative crystals) என்றும் இயல்புக் கதிரின் அலைப் பரப்பு சிறப்புக்கதிரின் அலைப்புக்கு வெளியில் அமைந்து பரவினால் (positive crystals) நேர்பண்புப் படிகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. மா பூங்குன் றன்