பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/562

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 இரண்டாம்‌ நிலைப்‌ பால்பண்புகள்‌

538 இரண்டாம்நிலைப் பால் பண்புகள் தசைகளின் (phloem) பெருக்கத்தால் ஃபிஜி நோயி னால் பாதிக்கப்பட்ட கரும்புத் தோகைகளில் கொப்புளங்கள் தோன்றுகின்றன. காய்தல் அல்லது அழிதல் தனி இடம் சார்ந்த புள்ளிகள். சில செடிகளில் வைரஸ் சாற்றைத் தடவிய இலைகளில் சிறுசிறு காய்ந்த புள்ளிகள் உண்டாகும். ஊமத்தை, நிகோடி யானா குளுடினோசா போன்ற செடிகளில் புகை யிலைத் தேமல் நச்சுயிரி இத்தகைய காய்ந்த புள்ளி களைத் தோற்றுவிக்கும். மேற்பாகம் காய்தல் (top necrosis): உருளைக் கிழங்கு மித வைரஸ் (potato virus X} உருளைக் கிழங்கு இலை நரம்பு கருத்தல் வைரஸ (potato virus Y) போன்ற நச்சுயிரிகளை மிளகாய்ச் செடியில் உட்புகுத்தினால் செடியின் மேற்பாகம் காய்ந்து விடும். சல்லடைக் குழாய்த்தசை காய்தல். நாரத்தை வேர்க் கன்றைப் பயன்படுத்தி ஆரஞ்சுடன் ஒட்டுச் சேர்த்தால் ஒட்டுச் சேர்த்த பகுதியில் உள்ள சல்லடைக் குழாய்த் தசைகள் காய்ந்துவிடுகின்றன. உருளைக்கிழங்குச் செடிகளில் இலை உருள்வு நோயி னாலும் இத்தகைய அறிகுறி காணப்படும். ஒழுங்கற்ற வளர்ச்சி அமைப்பு புதர். நிலக்கடலைச் செடியில் கணு இடைப்பகுதி (internode) குட்டையாகி, இலைகள் முழுதும் பெரும் பாலும் ஒரே இடத்திலிருந்து தோன்றுவது போன்ற தோற்றம் ஏற்படுவதால் இது புதர் போன்று காட்சி அளிக்கும். நீள்வடிவக் கிழங்கு (spindle tuber). உருளைக் கிழங்குச் செடியின் மேற்பாகம் கடினமான தன்மை யைப் பெற்று நேராக நிற்கும். இலைகளும் மேல் நோக்கி நேராக நிற்கும். கிழங்கின் தோற்றமே மாறி விடும். கிழங்குகள் நீண்டிருப்பதால் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற தோற்றத்தை அளிக்கும். மலட்டுத்தன்மை (sterility). பருத்தி, துவரை போன்ற செடிகளில் மிகுதியாக வளர்ச்சி குறைதல், இலைப்பரப்பு குறைதல், இலைப்பாகம் சுருங்குதல், பூ காய் ஆகியவை உதிர்தல் முதலான அறிகுறிகள் காணப்படும். செடி பூக்காமலேயே முழுதும் மலட்டுத் தன்மை பெற்றிருப்பதும் உண்டு. பச்சைப் பூவிதழ் (phyllody). செடி பூக்கும் பருவத்தில்தான் இவ்வகை அறிகுறிகளைக் காண முடியும். பூப்பாகங்கள் இலை போன்ற பாகங்களாக மாற்றமடையும். மகரந்தப்பைகளில் (anthers) மகரந்த மணிகள் (pollen grains) இரா. இலைகள் சிறுத்துக் காணப்படும். எள் செடியில் பச்சைப் பூவிதழ் நோய் தோன்றுகின்றது. முடிக்கொத்து. வாழை இலைகள் செங்குத்தாக வளர்ந்து தண்டின் தலைப்பாகத்தில் ஒரே இடத்தி லிருந்து தோன்றியிருப்பது போன்று கொத்தாகக் காணப்படும். இலைகளின் அகலம் குறைந்தும் வளர்ச்சி குன்றியும் தோன்றும். பாதிக்கப்பட்ட வாழை மரங்கள் குட்டையாக இருக்கும். இலைகளில் அடர்பச்சை நிறக்கோடுகள் இடை யிடையே காணப் படும். பெருமொட்டு (big bud). பாதிக்கப்பட்ட பூங் கொத்திலுள்ள மொட்டுகள் மேல்நோக்கி நேராக நிற்கும். புல்லிவட்ட இதழ்கள் (calyx segments ) பிரியாமலேயே இணைந்து பெரியவையாக இருக்கும். பூக்காம்பு (pedicel) பெருத்தல், தண்டுப்பாகம் பெருத்தல் போன்ற அறிகுறிகள் இணைந்திருக்கும். தக்காளியில் பெருமொட்டு நோய் தோன்றும். கா.சிவப்பிரகாசம் அரங்கசாமி, கோ., சிவப்பிரகாசம். கா., பயிர்களின் பேக்டீரிய நோய்கள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை, 1975; சிவப்பிரகாசம், கா., தாவர நச்சுரி நோய்கள், உழவர் பயிற்சி நிலையம், கோவில்பட்டி, 1973; Corbett, M.K and Sisler, H. D. Plant Virology, University of Florida Press, 1964; Singh, R. S., Plant Diseases, Oxford and IBH Publ., Co., Calcutta, 1968. இரண்டாம்நிலைப் பால்பண்புகள் முதனிலைப் பால் பண்புகள் (primary sexual char- acters) என்பன இனச்செல்களை (gametes) உற்பத்தி செய்யும் உறுப்புகளைக் குறிக்கும் (ஆண் உயிரியல் விந்தகத்தையும் அதனைச் சார்ந்த நாளங்களையும் பெண் குறிக்கும்; உயிரியல் சினையகத்தையும் அதனைச் சார்ந்த நாளங்களையும் குறிக்கும்.) வளர்ச்சி கருவுற்ற முட்டைக் கரு அடைந்து முதனிலைப் பால் பண்புகளுடன் இளம் உயிரி யாகப் பிறக்கிறது; இளவுயிரி முழுவளர்ச்சி யடையும்போது முதனிலைப் பால்பண்புகளும் முழுவளர்ச்சியடைகின்றன. ஆனால் இரண்டாம் நிலைப் பால்பண்புகள் (secondary sexual characters) என்பது ஓர் ஆண் உயிரியோ, பெண் உயிரியோ முழுவளர்ச்சியடைந்து இன முதிர்ச்சி பெற்று இனப் பெருக்கம் செய்யும் நிலை பெற்றவுடன் அதன் புறப் பண்புகளில் ஏற்படும் குறிப்பிடத் தக்க மாற்றங்களை அல்லது வளர்ச்சியினைக் குறிக்கும். இம்மாற்றங் களும் வளர்ச்சிகளும் இனச்செல்களை உற்பத்தி செய் வதற்கு எந்த வகையிலும் பயன்படுவதில்லை. பிறந்தது முதல் புறத்தோற்றத்தில் ஆண், பெண் களுக்கிடையில் புறப்பால் வேற்றுமைகள் இன்றிக்