546 இரத்த அழுத்த எதிர்ப்பு மருத்துகள்
546 இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள் 95-105 மி.மீ(பா) என்ற அளவிலிருந்தால் இலேசான மிகை இரத்த அழுத்தம் எனவும், விரிவு அழுத்தம் 106-130 மி மீ (பா) என்ற அளவிலிருந்தால் நடுத் தரமான மிகை இரத்த அழுத்த மெனவும், விரிவு அழுத்தம் 131 மி.மீ(பா) க்கு மேலிருந்தால் கடும் மிகை இரத்த அழுத்தமெனவும் கொள்ளலாம். இரத்த அழுத்தத்திற்குரிய காரணங்களை அறிந்து அவற்றைக் குணப்படுத்துவதே மருத்துவத்தின் சிறப்பு நோக்கமாகும். அளவு இரத்தத்தில் கேட்ட காலமின்களின் மிகுதியாக இருந்தால் அவை பரிவு நரம்பு மண்டலத் தின் இயக்கத்தைப் பெருக்கி இரத்த அழுத்தத்தை மிகைப்படுத்தும். பெருந்தமனி வளைவிலும், கரோட் டிட் பொருளிலும் இருக்கும் இரத்த அழுத்த ஏற்பி கள் (baroreceptors) இரத்த அழுத்தம் குறையும் போது முகுளத்தில் உள்ள குருதிக் குழாய் இயக்கு மையத்திற்குச் செல்லும் உணர்வலைகளைப் பெருக்கு வதால் எதிர்ப்பரிவு இயக்கம் ஒடுக்கப்பட்டு இரத்தக் குழாய்களின் எதிர்ப்புத் தன்மை, இதயத்திற்குச் சிரைகள் அனுப்பும் இரத்த அளவு மிகும். இதனா இரத்த அழுத்தமும் மிகுதியாகின்றது. நூல் ஆல்டோஸ்டி ரெனின் - ஆஞ்ஜியோடென்சின் ரோன் மிகுந்தால் மிகை இரத்த அழுத்தம் ஏற்படும். உணவில் உப்பை மிகுதியாகப் பயன்படுத்துவதாலும் இரத்த அழுத்தம் மிகும். இக்காரணங்களை வைத்து இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளை வகைப் படுத்தலாம். பரிவு நரம்பு மண்டல இயக்கத்தைக் குறைப்பவை. மையத்தில் இயங்குபவை. ஆல்ஃபா மீத்தைல் டோப்பா, குளோனிடின், ரிசர்ப்பின், புரோப்ரன லால். வெளிப்புற நரம்பு மண்டலத்தில் இயங்குபவை. நரம்பு முடிச்சுகளில் வினைபுரிபவை - மெக்காமைல் அமைன்: பரிவு நரம்பு நுனிகளில் வினைபுரிபவை குவானித்திடின் ரிசர்ப்பின், பார்கைலின்; பரிவு மண்டல ஏற்பிகளில் இயங்குபவை-பீட்டா மற்றும் ஆல்ஃபா அடைப்பான்கள். பீட்டா அடைப்பான் கள், ஃபுரோப்ரனலால், நடோலால் மெட்டோப்ர லால்; ஆல்ஃபா அடைப்பான்கள், ப்ரசோசின் ஃபென்ட்டாலமின், ஃபினாக்ஸிபென்டிமைன். இரத்தக் குழாய் விரிவாக்கிகள் நுண்தமனி விரிவாக்கிகள். ஹைட்ரால்சின், டை அசோ ஆக்சைடு, மீனாக்சிடில், தயசைடுகள். நுண்தமனி மற்றும் நுண் சிரை விரிவாக்கிகள். சோடியம் நைட்ரோபுருசைடு, புரசோசின். ரெனின் ஆன்ஜியோடென்சின் இயக்கத்தில் குறுக் கிடுபவை. கேப்டாப்ரில், சரலசின். t ஆல்ஃபா மீத்தைல் டோப்பா. இது மைய நரம்பு மண்டலத்திலுள்ள ஆல்ஃபா மீத்தைல் நார்அட்ரீன லின் ஆக வளர்ச்சிதை மாற்றமுற்று முகுளத்தில் நரம்புச் சந்திமுன் ஆல்ஃபா ஏற்பிகளில் வினைபுரிந்து இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. குறைந்த அளவில் நிலைமாற்ற இரத்தக் குறை அழுத்தத் தையும், உறக்கத்தையும் ஏற்படுத்துகிறது. ஆல்ஃபா மீத்தைல் நார் அட்ரீனலினை நேரடியாகக் கொடுத் தால் அதனால் இரத்த மூளைத் தடையைக் கடக்க இயலாது. வாய் வழியாக இதைக்கொடுக்கும்போது சுமார் 25 விழுக்காடு அளவே உறிஞ்செடுக்கப்படுகிறது. இதன் அரைவாழ்வு சுமார் 3 மணி நேரம், பெரும் பாலான அளவு சிறுநீரில் மாற்றமடையாமல் வெளி யேறுகிறது. குறைந்த அளவு ஆல்ஃபாமீத்தைல் டோப்பாமைனாக வெளியேறுகிறது. தொடக்கத்தில் உறக்கம் மிகுதியாக இருக்கும். மறைந்து தொடர்ந்து கொடுக்கும் போது இது விடுகிறது. தோல் சினப்பு, காய்ச்சல், இரத்தமழிச் சோகை ஏற்படலாம். புணர்ச்சியின்போது ஆண்மை எழுச்சியைக் குறைக்கிறது. விந்து வெளியேற்றத் தையும் இது பாதிக்கிறது. இம் மருந்து 250-500 மி.கி. அளவு மாத்திரைகளாகத் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1- 2 கிராம் வீதம் இரு தடவை களாக இதை உண்ணவேண்டும். இம்மருந்தை இரத்த அழுத்தம் மிகுந்தால், கார்சினாய்டு நோயிலும் பயன்படுத்தலாம். குளோனிடின். இம்மருந்து இரத்தக் குழாய் இயக்கு மையத்தைத் தூண்டி புறப்பரிவு மண்டலத் தின் இயக்கங்களை ஒடுக்குவதால் இரத்த அழுத்தம் குறைகிறது. இது மைய நரம்பு மண்டலத்திலுள்ள ஆல்ஃபா ஏற்பிகளையும், நரம்புச் சந்தி, முன் ஆல்ஃபா ஏற்பிகளையும் தூண்டுகிறது. இம்மருந்து உண்ணும்போது நன்கு உறிஞ்சியெடுக்கப்படுகிறது. இதன் அரைவாழ்வு 4 - 24 மணிநேரம்; சிறுநீரில் மாற்றமடையாமல் வெளியேற்றப்படுகிறது. நிலை மாற்ற இரத்தக் குறையழுத்தத்தை மிகுதியாக ஏற் படுத்துவதில்லை. வாய் உலர்தல், உறக்க உணர்வு மனச்சோர்வு போன்றவை இதன் பக்க விளைவு களாகும். குளோனிடினைத் திடீரென நிறுத்திவிட் டால் அதுவரை கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இரத்த அழுத்தம் திடீரென உயரும். ஒற்றைத் தலைவலியிலும் இதை மருந்தாகப் பயன்படுத்து கின்றனர். இது 100-200 மைக்ரோகிராம் மாத்திரை களாகத் தயாரிக்கப்படுகின்றது. தினசரி 200-2000 மைக்ரோகிராம் கொடுக்கலாம். ரிசர்ப்பின். இது ராவோல்ஃபியா செர்ப்பென் டைனா என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஓர் ஆல்கலாய்டு. இது மைய், புற நரம்பு மண்டலங்