பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 இரத்த அழுத்தம்‌

548 இரத்த அழுத்தம் மட்டுமே பயன்படுத்தவேண்டும். வாய்மூலம் கொடுத் தால் நன்மை தரும். இது சோடியத்தை தங்க வைத்து நீர் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதய மிகு துடிப்பை யும், மிகுந்த மயிர் வளர்ச்சியையும் ஏற்படுத்து கிறது. நாள் ஒன்றுக்கு 10 - 30 மி.கி. வீதம் கொடுக் கலாம். மிகை தயழைடுகள். இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சிறுநீர்ப் பெருக்கிகளில் மிகவும் திறமை வாய்ந்தவை. பாதுகாப்பானவை; பிற மிகை இரத்த அழுத்த எதிர் மருந்துகளின் இயக்கத்தையும் மிகுதிப் படுத்துகின்றன. சோடியத்தை வெளியேற்றுவதன் மூலம் உணவில் ஓரளவு உப்பைச் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கிறது. ஃபுரூசினமைடு போன்றவை தயழைடுகளை விட மிகுந்த திறன் வாய்ந்தவை என் றாலும் பக்க விளைவுகளால் மிகுதியாகப் பயன் படுத்தப்படுவதில்லை. ஸ்பைரனோலாக்டோன், ஆல்டாஸ்டிரோன் எதிர் மருந்தாக மிகை இரத்த அழுத்தத்தில் பயன் படுத்தப்படுகிறது. சோடியம் நைட்ரோப்ரஸ்ஸைடு தொடர் சிரையாக நிமிடத்திற்கு 1 மைக்கிரான்/ கிலோ எடைவீதம் செலுத்தும்போது நுண்சிரைகள் விரிவடைவதால் மிகை இரத்த அழுத்தம் விரைவாகக் குறைகிறது. இம் மருந்தின் அரை வாழ்வு ஒரு சில நிமிடங்களே. குமட்டல், வாந்தி, படபடப்பு போன்றவை ஏற்படுகின்றன. கேப்டாரில் ஆன்சியோடென்சின் ஒன்ை றை ஆன்சி யோடென்சின் 11ஆக மாற்றும் பெப்டைல்டைபெப்டி டேஸ் என்ற என்சைமை ஒடுக்குகிறது. இம்மருந்தைப் பற்றிய ஆய்வுகள் நடைமுறையிலுள்ளன. சாலசின் அமைப்பில் ஆன்சியோடென்சின் 11ஐ ஒத்துள்ளது. இது ஆன்சியோடென்சில் 11 இன் விளைவை ஒடுக்குகிறது. பக்க விளைவால் இம்மருந்து நடைமுறையில் இல்லை.மிகை இரத்த அழுத்த அவசரச்சிகிச்சையில் டயழாக்சைடும், சோடியம் நைட் ரோப்ரஸ்ஸைடும் முதன்மையான மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவான மருத்துவ முறைகள். அள 1. உட்கொள்ளும் உணவில் உப்பின் அளவைக் குறைத்தல், 2. உணவின் கலோரி அளவைக் குறைப் பதன் மூலம் உடல் எடையைக் குறைத்தல், 3. வான உடற்பயிற்சி, 4. புகைப்பிடிப்பதைத் தவிர்த் தல் 5. மருந்து மருத்துவம் கொடுத்தல் என்பன. ஆ. வாசுகிநா தன் நூலோதி. துளசிமணி, ஆதித்தன், மருந்தியல், முதல் பதிப்பு, தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, வேதாரண்யம், 1983; Satoskar, Bhandarkar Pharmacology And Pharmacotherapeuteis, Fifth Edition, Bombay Popular Prakashan Private Limited, Bombay, 1976. இரத்த அழுத்தம் இதய இடக் கீழறையிலிருந்து தொடங்கும் பெருந் தமனி பல கிளைகளாகப் பிரிந்து நுண் தமனிகளா கின்றன. இவை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் இரத்தத்தை எடுத்துச் செல்கின்றன. இட, வெண்ட்ரிக் கிள் சுருங்கும்போது இரத்தம் பெருந்தமனிக்குள் உந்தித் தள்ளப்படுகிறது. பெருந்தமனியின் உள்ளே இரத்தத்தை உந்தித் தள்ளுவதற்கு ஓர் அழுத்தம் தேவைப்படுகிறது. இந்த அழுத்தமே இதயச் சுருங்கு அழுத்தம் அல்லது சுருக்கு அழுத்தம் (systolic pressure) எனப்படுகிறது. பெருந்தமனிக்குள் சென்ற இரத்தம் மீண்டும் இதயத்திற்குள் திரும்பாமல் தமனியின் அடியிலுள்ள வால்வுகள் தடுக்கின்றன. அப்போது ஏற்படும் இரத்தம் விரிவு அழுத்தம் (diastolic pressure) எனப்படுகிறது. வயது அதிகமாகும்போது இரத்த அழுத்தமும் சற்று அதிகமாகலாம். ஆனால் எந்த வயதிலும் சுருக்கு அழுத்தம் 140 மி. மீ. பாதரச அழுத்தத்திற்கு அதிகமாகக் கூடாது; 100 மி.மீக்குக் குறையக் கூடாது. சுருக்க அழுத்தம் 100 இலிருந்து 140 வரை இருப்பதே இயல்பான நிலையாகும். எல்லா வயதி லும் பெண்களிடமுள்ள இந்த இரத்த அழுத்தம் ஆண்களில் உள்ளதைவிடப் பத்து மி.மீ குறைவாக இருக்கும். விரிவழுத்தம் 70 முதல் 90 வரையில் இருப்பதே முறையாகும். மனக்கிளர்ச்சி காரணமாக இரத்த அழுத்தம் சற்று அதிகமாகலாம். பொது வாகப் பணியில் சேருவோரும், ஆயுள் காப்பீடு பெறுவோரும் மருத்துவச் சான்றிதழ் பெற வரு போது மனக்கிளர்ச்சி காரணமாக அவர்களுடைய இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் அரை மணி நேரம் அவர்களை அமைதியாக உட்காரச் சொல்லிப் பின்னர் இரத்த அழுத்தத்தை அளவிட் டால் அது இயல்பான நிலையில் இருக்கலாம். அதனால் ஒருமுறை இரத்த அழுத்தத்தை அளவிட்டுப் பார்த்துவிட்டு ஒருவருக்கு இரத்த அழுத்தம் அதிக மாக உள்ளது முடிவு செய்யக் கூடாது. அத் தகையோரை மருத்துவமனையில் சேர்த்து அமைதி யான சூழ்நிலையில் உள்ளபோது இரண்டு, மூன்று நாள்கள் அளவிட்டு காலையிலும் மாலையிலும் இரத்த அழுத்தத்தை நிர்ணயிக்க வேண்டும். இரத்த மிகு அழுத்தம் (hypertension) உள்ளோரிடையே 90 விழுக்காடு மனிதருக்கு இரத்த மிகு அழுத்தத்திற்குக் காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் மீதமுள்ள 10 விழுக்காடு மனிதர்களின் GT Gar ள