552 இரத்த ஒழுக்கு
552 இரத்த ஒழுக்கு இரத்த ஒழுக்கு தமனி இரத்த ஒழுக்கு, சிவப்பு நிறமாக இருக்கும். இரத்தம் பீறிட்டுக் கொண்டு, விட்டுவிட்டு நாடித் துடிப்பை ஒட்டி வெளிவரும். இரத்த ஒழுக்கின் பொழுது இரத்தத்தைத் தவிர, சிரை வழியாக மற்ற வகையான உப்புநீர், குளுக்கோஸ் நீர் முதலியவை கொடுக்கும் பொழுது இரத்தம் நீர்த்துக் காணப் படும். சிரை இரத்த ஒழுக்கின் பொழுது, இரத்தம் கருஞ்சிவப்பாகச் சீராக வெளிவரும். கடுமையான இரத்த ஒழுக்கின்பொழுது மேலும் கருஞ் சிவப்பாக மாறும். இரத்தத்தில் ஆக்சிஜன் குறைவாக இருப்ப தால்தான் இரத்தம் கருஞ்சிவப்பாகத் தெரிகிறது. சிரை இரத்த ஒழுக்கு, அழுத்தம் மிகுதியான, சுருண்டு பெருத்த சிரை, மூச்சுத் தடைப்படல் ஆகிய காரணங்களால் இரத்த ஒழுக்கு ஏற்படும். நுரை யீரல் தமனி இரத்தமும், சிரை இரத்தத்தைப் போலவே கருஞ்சிவப்பாக இருக்கும். அதன் அழுத்தம் 30 மி.மீ. பாதரச அளவு இருக்கும். நுரையீரல் சிரையின் இரத்தம் சிவப்பாக இருக்கும். இரத்த நுண்நாளங்களில் வரும் இரத்த ஒழுக்கு வெளிர் சிவப்பாகவும் அதிக ஒழுக்குடையதாகவும் இருக்கும். இந்த ஒழுக்கு, பல மணி நேரங்கள் இருப் பின் உயிருக்கே ஆபத்தாக முடியும். இரத்த ஒழுக்கு வகைகள் முதல் நிலை இரத்த ஒழுக்கு. இது அறுவை சிகிச்சையின்பொழுது அல்லது உடலில் காயம் பட்டவுடன் ஏற்படுவதாகும். நெகிழ் இரத்த ஒழுக்கு. இது முதல் நிலை இரத்த ஒழுக்கை ஒட்டி 24 மணிக்குள் (பொதுவாகச் சுமார் 4-6 மணிக்குள்) இரத்த நாளங்களை அடைத்துக் கொண்டிருக்கும் இரத்தக் கட்டி அல்லது இரத்த நாளத்தைக் கட்டிய இழைகள் நழுவுவதால் ஏற்படும். பொதுவாக இம்மாதிரி நிகழ்வது உடல் நலச் சீர்கேட்டிலிருந்து மீளும்போது இரத்த அழுத்தம் உயர்வதாலும் சிரைகளில் மீண்டும் இரத் தம் நிரம்புவதாலும்) ஏற்படும். அறுவைக்குப்பின் மயக்க நிலையிலிருந்து மீளும்போது இருமல், வாந்தி முதலியவற்றால் நோயாளியின் உடலில் சிரை அழுத்தம் மிகுந்து இரத்த ஒழுக்கு ஏற்படும். (எ.கா). தைராய்டு சுரப்பி அறுவை மருத்துவத்திற்குப் பிறகு சில மணி நேரம் கழித்து ஏற்படும் இரத்த ஒழுக்கு. தொடை, தாடை இடுக்கில் உண்டாகும் துளைத்த காயங்களில் பெரும் சிரை நாளங்கள் சிதைந்து உயிரைப் பாதிக்கும். இவற்றிற்கு முதலுதவியாக இரத்த நாளத்தை அழுத்திக் கட்டுப்போட்ட பின் அறுவை மருத்துவர் ஒருவர் உதவியுடன் முழு வசதி படைத்த அறுவை அரங்கத்தில் முதலுதவிக் கட்டு களை அவிழ்த்துவிட்டுப் பிறகு அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இரண்டாம் நிலை இரத்த ஒழுக்கு. அறுவை அல்லது காயத்திற்குப் பிறகு 7-14 நாள்கள் கழித்து ஏற்படும் இரத்த ஒழுக்கு, பெரும்பாலும் தொற்றினாலும், தமனிகளின் ஒரு பகுதி நசுங்கி அழிவதாலும் ஏற் படும். முறிந்த எலும்பு அல்லது அதன் துண்டு, வடி குழாய் உள்ள பகுதிகள், இரத்த நாளத்தைக் கட்டிய இடங்களில் தொற்று உள்ள பகுதிகள் புற்று நோய் உள்ள இடங்கள் ஆகியவற்றிலும், இரத்த நாள் அறுவை, கைகால் துண்டிப்பு ஆகியவற்றிற்குப் பிறகும் ஏற்படும். இந்த இரத்த ஒழுக்கு, முதலில் வெளிர் சிவப்பாக, சிறிது சிறிதாக உடல் துளைகளைக் கறைப் படுத்தும். பிறகு திடீரென்று மிக அதிகமாகி மரணத்தை விளைவிக்கும். (எ.கா.) இரைப்பைப் புண்ணில் இரத்த ஒழுக்கு வந்தால் அதை அப்படியே விட்டுவிடக் கூடாது. அதனை ஒரு முன்னெச்சரிக்கை யாக எடுத்துக் கொள்ள வேண்டும். புற்றுநோயினால் பெரிய தமனிகளில் கூட அரிப்பு ஏற்பட்டு இரத்த ஒழுக்கு ஏற்படும். கருப்பையின் கழுத்தில் உண்டா கும் புற்று, கருப்பைத் தமனியில் திடீரென்று இரத்த ஒழுக்கை ஏற்படுத்தி உயிரை மாய்ப்பின், அது உயிருக்கு அன்றாடம் போராடும் நோயாளிக்கு ஒரு கருணை முடிவாக அமையும். உடலில் ஏற்படும் உட்புற இரத்த ஒழுக்கும் வெளிப் புற இரத்த ஒழுக்கும். உட்புற இரத்த ஒழுக்கு, மண்ணீரல், கல்லீரல்களில் ஏற்படும் காயங்கள். தொடை எலும்பு முறிவு கருப்பைக் குழாய் வெடிப்பு, பெருமூளையில் ஏற்படும் இரத்த ஒழுக்கு ஆகியவற்றால் ஏற்படும். சில வேளை உட்புற ஒழுக்கு வெளியில் தெரியும்படி இருக்கும். (எ. கா.) இரைப் பைப்புண் இரத்த ஒழுக்குடன் கருமலம், இரத்த வாந்தி; சிறுநீரக இரத்த ஒழுக்கின்பொழுது சிறுநீரில் இரத்தம் ; நஞ்சுக்கொடி இரத்த ஒழுக்கின்பொழுது கருப்பையிலிருந்து வெளிவரும் இரத்தம் முதலியன. உடல் நீர்ச் சத்துக் குறைவால் உண்டாகும் உடல் நலச் சீர்கேடு, திடீர் இரத்த ஒழுக்கு. உடலின் வெளி யில் உள்ள காயத்தினால் ஏற்படும் இரத்த ஒழுக் கின் அறிகுறி சற்றுத் தாமதமாகவே தெரிய வரும். அப்பொழுது உடல் வெளுத்து, நாடித் துடிப்பு அதி கரித்து, நிலைத்தடுமாற்றம் ஏற்படும். நீண்ட ஆழ மான மூச்சுடன் உடல், கை கால்கள் சில்லிட்டுப் போகச் சிரைகளில் இரத்தம் இருக்காது. நாவறட்சி, மயக்கம், பார்வை மங்கல் இவற்றில் ஏற்படும் நாடித்துடிப்பு விரைவாகவும் இரத்த அழுத்தம் குறைவாகவும் இருக்கும். ஆனால் இவற்றை மட் டும் இரத்த ஒழுக்கின் அளவை அறிய ஒரு குற்றியாக