இரத்தக்கசிவு எதிர்ப்பி 555
உதவாது. ஆனால், இந்த அதிர்ச்சி சரியான பிறகு தோலுக்கடியில் இருக்கும் மருந்து முழுதும் திடீரென்று உறிஞ்சப்பட்டு, மூளையில் மூச்சுப் பாதையைத் தாக்கும். நோயாளி வலி இல்லாமல் விழிப்புணர்ச்சியுடனும் பதட்டத்துடனும் இருப்பார். மூச்சுத் திணறல் இல்லையென்றால் இதற்கு அமைலோ பார்பிடோன் சோடியம் மருந்தைப் (120 மி.கி) பயன்படுத்தலாம் அல்லது குளோரால் ஹைட்ரேட் (1-2 கி) மருந்தும் கொடுக்கலாம். சு.நரேந்திரன் நூலோதி. டாக்டர் நரேந்திரன், சு., பொது அறுவை மருத்துவம், முதல் பதிப்பு, தமிழ்ப் பல் கலைக் கழகம், தஞ்சாவூர், 1986 இரத்தக்கசிவு எதிர்ப்பி உடல் இயங்குவதற்கு இரத்த ஓட்டம் தேவை. இரத்த ஓட்டத்திற்கு வசதியாக இரத்தம் நீர்ம நிலையில் இரத்தக்கசிவு எதிர்ப்பி 555 உள்ளது. இரத்தக் கசிவு ஏற்படும் பொழுது இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. காயத்தினால் இரத்தக் கசிவு ஏற்படும்பொழுது இரத்தக் குழாய்கள் சுருங்கி இயற்கையாகவே இரத்தக் கசிவின் வேகத்தைக் குறைக் கின்றன. இது முதலாம் நிலையாகும். இரத்தத்தில் உள்ள இரத்த நுண் தட்டுகள் இரத்தக் குழாய்களின் உட்பகுதி நல்வ நிலையில் உள்ளபொழுது ஒன்றோ டொன்று ஒட்டிக் கொள்ளா, இரத்தக் குழாய்களின் உட்பகுதியில் உள்ள அரகிமானிக் அமிலம், பிராச் டோசைக்ளினை உண்டாக்குவதால் இரத்த நுண் தட்டுகள் ஒட்டிக்கொள்வது தடுக்கப்படுகிறது. காயத் தின் மூலம் இரத்தக் குழாய்களின் உட்பகுதி பாதிக்கப்படும் பொழுது இவைசிதறி நுண்பொருளா கின்றன. இவற்றிலிருந்து சிதறிக் காரணி III, IV பிரா ஸ்ட்டோகிளாண்டின் திராம்போக்சன் போன்றவை உருவாகின்றன. இரத்தக் கசிவின் இரண்டாம் நிலை யில் நுண்தட்டுகள் ஒன்று சேர்ந்து தளர்ச்சியான நுண்தட்டு ஆப்பு ஆகி இரத்தக் கசிவை எதிர்க் கின்றன. இரத்தத்தில் ஃபைப்ரினோஜன் என்ற காரணி I புரோத்ரோம்பின் என்ற காரணி II, கால்சியம் காரணி XII காரணி IX காரணி IX காரணி VIII காரணி X காரணி VII புரோத்ரோம்பின் திராம்பின் ஃபைப்ரினோஜன் வைப்பீரின் (தளர்ந்த) காரணி XIII பைப்பிரின் (அடர்ந்த) இரத்தம் உறையும் முறை மூன்றாம் நிலையாகக் காரணி XII தூண்டப்பட்டு, அதன் தொடர்ச்சியாகக் காரணி XI, காரணி IX, காரணி VIII காரணி XII காரணி X தூண்டப்படுவதால் புரோத்ரோம்பின் (காரணி ) II திராம்பினாக மாறுகிறது. திராம்பின் ஃபைப்ரினோஜனைக் காரணி XIII ஆறு அடர்த்தியான ஃபைப்ரினாகி இரத்தக் கசிவை எதிர்க்கிறது. ஃபைப்ரின் உறுதிப்படுத்தும் காரணியும், கால்சியம் அயனியும் இரத்தம் உறைதலை உறுதிப்படுத்துகின்றன. இதுவே இரத்தக்கசிவு எதிர்ப்பியாகும்.