பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 இரத்தக்‌ கசிவுக்‌ காய்ச்சல்‌

556 இரத்தக் கசிவுக் காய்ச்சல் என்ற காரணி IV, புரோ அக்சிலரின் என்ற காரணி V, புரோகன்வெர்டின் என்ற காரணி -VII இரத்தக் கசிவு எதிர்ப்பி காரணி -VIII. பிளாஸ்மா திராம் போப்பிளாஸ்ட்டின் காரணி IX, ஸ்ட்டுவர்ட் புரோ வர் காரணி X, எக்மன் காரணி XII, லாக்கி லொரண்ட் காரணி XIII என்ற இரத்தக் கசிவு எதிர்ப்பிக் காரணிகள் தூண்டப்படாத நிலையில் உள்ளன. இரத்தக் குழாய்களுக்குக் காயம் ஏற்படும் பொழுதும், இரத்த ஓட்டம் சீராகச் செல்லாமல் அதன் வேகம் குறையும்பொழுதும் இக்காரணிகள் தூண்டப்படுவதால் இரத்தம் உறைகிறது. இரத்தக் கசிவு ஏற்படும் பொழுது இக்காரணிகள் தூண்டப் படுகின்றன. ஏ.காம்ஜான் நூலோதி. John Macleod, Davidson's Principles and practice of Medicine, Fourteenth Edition, ELBS London, 1984. இரத்தக் கசிவுக் காய்ச்சல் மூன்று நூற்றாண்டுகள் வரை மஞ்சள் காய்ச்சல், ஆங்காங்கே ஏற்படும் இரத்தக்கசிவு அறிகுறிகளோடு கூடிய காய்ச்சல் நோயாகக் கருதப்பட்டது. 1930 இல் இந்நோய்க்குக் காரணம் வைரஸ் தான் எனக் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வைரஸ்கள் வெவ்வே றாக இருந்தாலும் அறிகுறிகள் ஒன்று போலவே காணப்படும். சில ஆர்போ வைரஸ் நோய்களாகிய டெங்குக்காய்ச்சல் மஞ்சள் காய்ச்சல் கயஸனூர் காட்டு நோய் ஓம்ஸ் இரத்தக் கசிவு நோய் சிக்குன் குன்யா நோய் கிரிமீயன் இரத்தக்கசிவுக் காய்ச்சல் போன்ற நோய்களும், மார்பர்க் எபோலா வைரஸ் நோய் ராக்கி மௌண்டன் ஸ்பாட்டட் காய்ச்சல் மீள் காய்ச்சல் (relapsing fever) மெனிங்கோ காக்கல் செப்டிசீமியா பிளேக் டிரிப்பனோசோமியாஸிஸ் போன்ற நோய்களும் இரத்தக் கசிவுக் காய்ச்சலை ஏற்படுத்துகின்றன. மஞ்சள் காய்ச்சல். இக்காய்ச்சல் B B" வகை ஆர்போவைரஸ்களால் மிகக் குறைந்த காலக் கட்டத்திற்குள், தற்காலிகமாக வரும் தீவிரமான நோயாகும். ஆனால் வாழ்நாள் முழுதும் தடுப் பாற்றலைத் தரும். அமெரிக்கா, காங்கோ, சூடான், எத்தியோப்பியா, ஆப்பிரிக்கா, பனாமா போன்ற இடங்களில் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது. இந் நோயுற்ற மனிதனிடமிருந்து எடிஸ் எகிப்டி (Aedes aegypti) என்ற கொசு இரத்தத்தை உறிஞ்சிய இரு வாரங்களுக்குப் பின்னர் அது மற்றொரு மனிதனின் இரத்தத்தை உறிஞ்சும் போது பரவுகிறது. நோயுற்ற மனிதனின் இரத்தத்தை ஒரு முறை எடிஸ் கொசு உறிஞ்சினால், அது தன் வாழ்வுக் காலம் முழுதும் இந்நோய் சுமப்பியாக இருக்கும். செல் இந்த வைரஸ்கள் மனித உடம்பின் உள்ளுறுப்பு களில் பல மாற்றங்களை உருவாக்குகின்றன. கல்லீரல் குப்ஃபர் செல்களில் கவுன்சில்மென் உறுப்புகளை உருவாக்குகிறது. சிறுநீரகத்தில் கொழுப்பு மாற்றங்களையும் எபிதீலியல் இறப்பையும் மூளையில் இரத்தக்கசிவையும் ஏற் படுத்தும். இந்நோயின் நோய்க் காப்புக் காலம் (incubation period) 3-6 நாள்களாகும். முதல் நாள் இலேசான காய்ச்சல், தலைவலி, குமட்டல், மூக்கி லிருந்து இரத்தம் வருதல் இரத்த அழுத்தம் குறைதல், புரத மூத்திரம் போன்றவை ஏற்படும். தீவிரமான நோய்களில் தலைவலி, காய்ச்சல் இரத்த அழுத்தக் குறைவு உடனடியாக ஏற்படும். குழந்தைகளுக்கு வலிப்புக் காய்ச்சல், கழுத்து, உடம்பு கால் ஆகிய வற்றில் வலி இரண்டாம் நாள் ஏற்படும். முகமும் கண்களும் சிவந்திருப்பதுடன் நாக்குச் சிவந்தும் வெடித்தும் காணப்படும். மூன்றாம் நாள் மூக்கி லிருந்தும், ஈறிலிருந்தும் இரத்தக் கசிவு ஏற்படும். நானகாம் நாள் சிறு நீர் வெளியேற்றம் குறைந்த அளவிலும், மூளைக்கோளாறும் ஏற்படும். ஐந்தாம் நாள் காய்ச்சல் குறைந்து இரத்த அழுத்தம் குறையும். மூக்கிலிருந்தும், கருப்பையிலிருந்தும் இரத்தம் கசிய லாம். இரத்த மூத்திரம், இரத்தக்கழிச்சல் இரத்த வாந்தி போன்றவை ஏற்படும். நோய் மிகத் தீவிரமா னால் நோயாளி உணர்விழந்து, 2-3 நாளில் இறக்க வும் நேரிடலாம். நோய் கண்டறியும் முறை. இரத்தத்தில் வெள்ளை யணுக்களும், உறை பொருள்களும் குறைவாக இருக்கும். இரத்தத்திலிருந்து வைரஸ்களைப் பிரித் தெடுப்பதன் மூலமும், நோயைச் சரிபடுத்தும் எதிர்ப் பொருள் இரத்தத்தில் அதிகமாக இருப்பதைக் கொண்டும், கல்லீரல், மூளை சிறு நீர் இவற்றில் இரத்தக்கசிவு இருப்பதைக் கொண்டும் இந்நோயைக் கண்டுபிடிக்கலாம். மருத்துவம். நோய் வருமுன்பே தடுப்பு ஊசி போடுவதாலும், கொசுக்களை ஒழிப்பதாலும் இந் நோய் பரவாமல் ஓரளவு பாதுகாக்கலாம். இரத்தம் உறையும் பொருள்களைக் கொடுத்தும் குணப் படுத்தலாம். டெங்கு காய்ச்சல். நான்கு வகை டெங்கு காய்ச் சல் வைரஸ்களும், சிக்குன்குன்யா வைரஸ்களும் இருப்பனவாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லூசி வியட் யானா, டர்பன், குரக்கோ, பிலிப்பைன்ஸ், நாம் கம்போடியா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப் பூர், இந்தியா போன்ற இடங்களில் இந்நோய் பரவி யுள்ளது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந் நோய் கொசு மூலம் ஏற்படுகிறது. முதலில் காய்ச்சல்,