பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/581

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தக்‌ கசிவுக்‌ காய்ச்சல்‌ 557

பசி இருமல், தொண்டை அழற்சி, தலைவலி, யின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி முதலி யவை ஏற்படும். 2-4 நாள்களில் உடல் வலி, மூட்டு எலும்பு வலி வரலாம். டான்சில்கள், நிணநீர்க்கட்டி கள், கல்லீரல் பெரிதாகும். இந்நோயுற்ற குழந்தை அமைதியற்றும், கால், கைகள் குளிர்ச்சியடைந்தும் பாதம், வயிறு வெப்பமாகியும், முகம் சிவந்தும், இரத்தப்புள்ளிகள் முன்தலை கால் கைகளிலும் காணப்படும். நீலம் பாய்தலும் இருக்கும். இரத்த அழுத்தம் குறைந்து நாடித்துடிப்பு அதிகரிக்கும். 4-5 நாளுக்குப் பிறகு இரத்த வாந்தி, இரத்தக் கழிச்சல் வரலாம். நோயாளி உணர்விழந்து நீலம் பாய்ந்து மூச்சுத் திணறி இறக்க நேரிடும். ஆனால் தீவிர சிகிச்சையின் பயனாக விரைவில் அவர்கள் உடல் நலத் தில் முன்னேற்றம் காணலாம். இரத்தக் குறைவை இரத்தம் மாற்றீடு, உப்புக்குளுக்கோஸ் கரைசல் நீர் கொடுத்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். 24-48 மணிக்குள் இரத்தச் சுற்றோட்டம் சீரான பின்னர் சிறுநீர்ப் பெருக்கி. டிஜிட் டாலிஸ் போன்றன கொடுக்க வேண்டும். கிரிமீயன் இரத்தக் காய்ச்சல். இது உண்ணி (tick) என்ற இருவகைப் பூச்சி மூலம் பரவும் இரத்தக் காய்ச்சல் நோயாகும். இந்நோய் இரண்டாம் உலகப் போரின் போது ரஷ்யாவில் பரவியது. 20-26 வயதில் பால் வேறுபாடின்றித் தாக்கும்.திடீரெனக் காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஏற்படும். 8 நாள்களுக்குப் பிறகு முகம் சிவத்தல், கண் சிவத்தல், வயிற்றுவலி ஆகி யவை ஏற்படும். கல்லீரல் மண்ணீரல் பெரிதாகும். நான்காம் நாளிலிருந்து ஈறுகளில் இரத்தம் கசியும். இரத்த வாந்தி, இரத்தக் கழிச்சல், நரம்பு மண்டலக் கோளாறுகள், இரத்த மூத்திரம் ஏற்படும். நுண்ணு யிர் நோயினாலும் அதிர்ச்சியினாலும் இறப்பு ஏற் படலாம். இரத்தத் தசைச் சிரை வழிக் கொடுப்ப தாலும் இரத்தம் உறைவைத் தடுப்பதாலும் நோயை ஓரளவுக்குக் குணப்படுத்தலாம். ஓம்ஸ்த் இரத்தக் கசிவுக் காய்ச்சல். இது ஆகஸ்ட் மாதங்களில் ரஷ்யாவில் டிக்ஸ் பூச்சி மூலம் பரவு கிறது. 3-8 நாள்களுக்குப் பிறகு, தலைவலி, காய்ச் சல், இரத்தக் கசிவு, நரம்புக்கோளாறுகள் ஏற்படும். இறப்பு விகிதம் மற்ற நோயை விடக் குறைவு. காசனூர் காட்டு நோய். இது 1957 இல் மைசூரில் ஏற்பட்டது. திடீரெனக் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, கண்வலி, இருமல் வயிற்றுவலி, கண் கூச்சம், மூட்டு, எலும்பு வலி, இரத்த ஒழுக்கு. இரத்த வாந்தி, இரத்தக் கழிச்சல் முதலியவை ஏற் படும். இரத்த அழுத்தம் குறையும். நிணநீர்க் தட்டிகள் பெரிதாகும்; சிறிது சிறிதாக உணர்வு (sensitivity) குறையும்; கைகால் நடுக்கம் ஏற்படும்; இரத்தத்தில் அணுக்கள், உறை பொருள்கள் குறைந்து காணப்படும். இரத்தத்திலிருந்து வைரஸ்களைப் இரத்தக் கசிவுக் காய்ச்சல் 557 பிரித்தெடுப்பதன் மூலம் நோயைக் கண்டுபிடிக்க லாம். இறப்பு விகிதம் 5 விழுக்காடு தானிருக்கும். இரத்தக் கசிவு நோய்களும் சிறுநீரக இணைப்போக் கும். அரினா வைரஸ்கள் (arena virus) இரத்தக் கசிவுநோய்களோடு சிறுநீரகக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். பெருவாரியாகப் பெருவாரியாகப் பரவும் இரத்தக் கசிவுக் காய்ச்சல் (epidemic haemorrhagic fever) மிருகங்களில் ஏற்படும் நோய் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்நோய், கொரியா, ருஷ்யா போன்ற இடங்களில் இரண்டாம் உலகப்போரின் போது சிறு பூச்சிகள் மூலம் பரவிற்று. இந்நோயின் நோய்க்காப்புக்காலம் 10-25 நாள்கள். முதலில் காய்ச்சல். இருமல், தலைவலி, உடல்வலி, வயிற்று வலி, பசியின்மை, குமட்டல், வாந்தி கண்சிவத்தல், இரத்தக்கசிவு ஆகியவை ஏற்படும். கழுத்து அக்குள் நிணநீர்க் கட்டிகள், கல்லீரல் மண்ணீரல் பெரிதாகும். இரண்டாம் நிலையில் இரத்த அழுத்தம் குறையும், நாடித் துடிப்பு அதி கரிக்கும். மூன்றாம் நிலையில் சிறுநீரின் அளவு குறை யும். 8 ஆம் நாளில் சோர்வடைவதுடன் முதுகுவலி, நரம்பு மண்டலக் கோளாறுகளும் ஏற்படும். நான் காம் நிலையில் சிறுநீர்ப்பெருக்கம் ஏறக்குறைய 4 லிட்டர்/நாள் ஏற்படும். நோயாளி குணமாகும் காலம் 3-6 வாரங்களாகும். இச்சமயம் நோயாளி எடை அதிகரிக்கும். சோர்வு,நடுக்கம், அதிகச் சிறுநீர்ப் போக்கு இவை ஏற்படும். தந்துகிகளின் உட்திசுக்கள் சிதிலமடைவதால் இரத்த நாளங்கள் விரிவடைந்து, பிளாஸ்மா ஒழுகி, பல சிறிய இரத்தக் கசிவுகள் சிறுநீரகம், வல மேலறைச் சீரண உறுப்புகள் பிட்யூட்டரி அட்ரீனல் சுரப்பி களில் காணப்படும். இதயத்தசை, கல்லீரல், மண்ணீர லுள், உட்கருச்செல்கள் ஊடுருவுவதைக் கண்டு பிடிப்பதன் மூலம் இந்நோயைக் கண்டறியலாம். ஸ்டீராய்டுகள், எதிர்ப்புச் சீரம் போன்றவை பயன் தரலாம். அமெரிக்காவில் அர்ஜென்டினா பகுதியில் 1953 இல் ஏற்பட்ட இரத்தக் கசிவுக் காய்ச்சலை அர் ஜென்டினாக் காய்ச்சல் எனக் குறிப்பிட்டனர். நோயாளிகளிடமிருந்தும், இவ்விடத்திலுள்ள விலங்கு களிடமிருந்தும் மைட்ஸ்களிலிருந்தும் வைரஸ்கள் பிரித்தெடுக்கப்பட்டன. இது பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் நாட்டின் புறப்பகுதிகளில் கோதுமை விளைவிக்கும் காணப்பட்டது. நோயுள்ள மனிதர்களின் சிறுநீர் பட்ட மனிதர்களும் மிருகங்களும் தொடும் உணவுப் பண்டங்களை மற்றவர் உண்பதன் மூலம் இந்நோய் பரவுகிறது. மனிதனிடமிருந்து நேரடியாக மனிதனுக்கு இந்நோய் பரவுவதில்லை. விவசாயிகளிடம் இரத்தம், இரத்த ஓட்டம், சிறுநீரகம் பாதிக்கப் படும். நோயுற்ற 7-10 நாள்களுக்குப் பிறகு, குளிர்-