இரத்தக்கசிவு நோய்கள் 559
யால் எல்லா இரத்த அணுக்களைக் குறைவாக உற் பத்தி செய்வதாலும் (aplastic anaemia), மஜ்ஜைகளை மற்ற திசுக்கள் ஊடுருவுவதாலும் (infiltrations) மாற் றீடு செய்வதாலும், திராம்போபாய்டிக் காரணி {thormbopoietic factor) பிறவியிலே குறைவாக உற் பத்தியாவதாலும் நுண்தட்டுகளின் உற்பத்தி குறையும். அறிகுறிகள். திடீரெனத் தோலில் இரத்தம் கசிந் தால் அது இரத்தப் புள்ளிகளாகவோ (petechia) ஊதாப் புள்ளிகளாகளோ கரிரத்தத்திட்டுகளா கவோ (eccymoses) தெரியும். உடலின் எந்தச் சீதச்சவ்விலிருந்தும் இரத்தம் கசியலாம். தான் தோன்று உறை செல்லிறக்கத்தில் வாயில் இரத்தக் கொப்பளங்கள் (bullae), கைகள், மார்பின் மேல்புறம் முகப்பகுதிகளில் ஊதாப்புள்ளிகள் காணப்படும். சில நோயாளிகளுக்கு மண்ணீரல் பெரிதாகலாம். 2-6 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளில் இத் நோய் தற்காலிகமாகத் திடீரென அதிக இரத்தக் கசிவை உண்டுபண்ணும். இச்சமயத்தில் மூளையில் இரத்தக்கசிவை உண்டுபண்ணும். இச்சமயத்தில் மூளை யில் இரத்தக்கசிவு வந்தால் அது அபாயமானதாகும். சாதாரணமாக, சில நாள்களில் இக்கசிவு நின்று விடும். ஆறுமாதங்களுக்கு மேல் இக்கசிவு இருந்தால் அதை நீடித்த கசிவு எனலாம். இது 20-45 வயது பெண்களுக்கு வரும். தான்தோன்று உறைசெல்லிறக் கத்தில் உடலின் ஒரு பகுதியிலிருந்து மட்டும் இரத்தக் கசிவு ஏற்படும். நோய் கண்டறிதல். நுண்தட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்: சிலசமயங்களில் முதிர்வுறாத நுண்தட்டுகள் இரத்தத்தில் காணப்படலாம்: இரத்தக்கசிவின் நேரம் அதிகரிக்கும்; இரத்த உறைவு நேரத்தில் மாற்றமிருப்பதில்லை; எலும்பு மஜ்ஜை களில் மெகாகெரியோசைட்ஸ் (magrakaryocytes) காணப்படும்; இரத்தக்கட்டி சுருங்குவதில்லை. தான் தோன்று உறைசெல்லிறக்கத்திற்குநுண்தட்டு எதிர்ப் பொருள் உறை செல்லிறக்கம் என்று பெயர். மருத்துவம், திடீரெனக் குழந்தைக்கு வரும் உறை செல்லிறக்கம், இரத்தக்கசிவு முதலியன மருத்துவம் தொடங்குமுன்பே நின்றுவிடலாம். ஆயினும், நுண் தட்டுகளை மனித இரத்தத்திலிருந்து பிரித்தெடுத்து நோயாளிக்குச் சிரை வழியாகச் செலுத்தலாம். முதல் இரண்டு வாரங்களுக்கு ஸ்டீராய்டு 1-2 மி.கி/கிலோ எடை வீதம் கொடுக்கலாம். மண்ணீரலை எடுத்து விடலாம் (spleenectomy). இதன்பின்பும் நோய் குறையாவிடில் தடுப்பாற்றல் குறைக்கும் மருந்து களைக் கொடுக்கலாம். நீண்டநாள் இரத்தக் கசிவில் ஸ்டீராய்டுதான் முக்கிய மருந்தாகும், இரத்த உறைபொருள் குறைபாடுகள். இரத்த உறைதலுக்குத் தேவையான காரணிகள் I -XIII இல் இரத்தக்கசிவு நோய்கள் 559 ஏதேனும் ஒன்று பிறவியிலேயே குறையாயிருந்தால் இரத்தக்கசிவு ஏற்படும். இது மரபு வழி நோயாத லால் தன்மெய்ய ஒடுங்கு பண்பாகவோ (autosomal recessive) தன்மெய்ய ஓங்கு பண்பாகவோ (auto- somal dominant) பாலின நோயாகவோ (sex linked) குடும்பங்களில் சந்ததிகளுக்கு வருகிறது. உறைபுரதங் களின் அளவு இரத்தத்தில் குறைவாக இருக்கலாம். அல்லது அவற்றின் செயல் திறன் குன்றியும் காணப் படலாம். ஹீமோஃபீலியா. பத்தாயிரத்தில் ஒரு ஆண் குழந்தைக்கு இந்நோய் மரபுவழி வரலாம். இரத்த உறைகாரணி VIII இன் செயல்திறன் குன்றிக் காணப் படும். பெண்கள் இந்நோயை அறிகுறிகளின்றித் தங்கள் குழந்தைகளுக்குக் கடத்துவார்கள். இந்நோய் யுள்ள ஆணுக்குப் பிறக்கும் எல்லாப் பெண் குழந்தை களுக்கும் இந்நோயிருக்கும். ஆனால் ஆண் குழந்தை களுக்கு இருப்பதில்லை. இப்பெண்களுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு இந்நோய் இருக்கும். அறிகுறிகள். திசு சிதிலமடைந்த சில மணி நேரங்கழித்தோ சில நாள் கழித்தோதான் இரத்தக் கசிவு ஏற்படும். அறிகுறிகள் காரணி VIII இன் செயல் திறனைப் பொறுத்து இது மாறுபடும். தீவிர மற்ற நோய்களில் திடீரென இரத்தக்கசிவு வருவ தில்லை. சிதிலமடைந்த பின்பும், அறுவை சிகிச் சைக்குப் பிறகும் வரலாம். மூட்டுகளில் அடிக்கடி இரத்தக்கட்டு வரலாம். நைவுக்காயம் (bruises) கரிஇரத்தத்திட்டுகள், உள்தோல், உள்தசை இரத்தக் கட்டுகள் ஏற்படலாம். ஆனால் இரத்தப்புள்ளிகள் ஏற்படுவதில்லை, உடம்பின் எந்தப்பகுதியின் சீதச் சவ்விலிருந்தும், பல் எடுக்கும் போதும் இரத்தக் கசிவு ஏற்படும். நோய் அறிதல். இனம், வயது மரபியல் வரலாறு, இரத்தம் கசியும் விதம் இவற்றை வைத்து இந்நோயைக் கண்டுபிடிக்கலாம். இரத்தம் உறையும் நேரம் அதிகரிக்கும். மருத்துவம்.ஹீமோஃபீலியாக் காரணியைச் சிரை வழிச் செலுத்தினால் அந்த நேரத்தில் இரத்தக் கசிவு நிற்கலாம். மூட்டுகளிலுள் திடீரென இரத்தக் கட்டி ஏற்பட்டால் அதை அசைக்காமல் குளிரச் செய்ய வேண்டும். சில சமயம் மூட்டுகளிலிருந்து இரத்தத்தை உறிஞ்சி (aspiration) எடுக்கலாம். இரத்தக்கசிவு நின்றவுடன் மூட்டுகளை நன்றாக அசைக்குமாறு செய்ய வேண்டும். இந்நோயாளி களுக்கு ஊசி போடக்கூடாது. மேற்கொண்டு டெட்டனஸ் போன்ற நோய் வாராமல் தடுக்க ஹீமோபீலியா காரணியைக் கொடுக்கும்போது தடுப்பூசி போடவேண்டும். தீவிர நோயுள்ளவர் களுக்கு அடிக்கடி ஹீமோஃபீலியா காரணியைக் கொடுக்கவேண்டிவரும்.