பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 இரத்தக்‌ கசையிழையுயிரிகள்‌

560 இரத்தக் கசையிழையுயிரிகள் வான்வில்லி பிராண்ட் நோய். இரத்த உறை காரணி VIII இன் திறன் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தால் வரும். இந்நோய் குடும்பங் களில் தன்மெய்ய ஓங்கு பண்பு நோயாக உள்ளது. தீவிரமில்லாமலிருந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருவதும், சிதைவுறலால் சிதைவுற்றவுடனே இரத் தம் வருவதும் அறிகுறிகளாகும். தீவிர நோயில் மூட்டுகளில் இரத்தம் உறையலாம். ஹீமோஃ பிலியாவுக்குரிய மருத்துவத்தையே இதற்கும் செய்யலாம். தன் ஏற்பாக வரும் இரத்த உறைகுறைகள். வைட்டமின் K, புரோத்திராம்பின், உறைகாரணி போன்றவை உற்பத்திக்கு இது அவசியம். ஆதலால் உணவில் இது குறைந்தாலோ, உட்கிரகிப்பதில் குறைந் தாலோ, பாக்டீரியல்ஃபுளோரா (bacterialflora) உற்பத்தி செய்யும் வைட்டமின் K இன் அளவு குறைந்தாலோ இரத்தக்கசிவு வரலாம். உடனே வைட்டமின் K கொடுப்பதன் மூலம் இரத்தக் கசிவை நிறுத்தலாம். கல்லீரல் நோய்களால் புரதம், காரணி VIII ஐத் தவிர மற்ற எல்லாக் காரணிகளின் உற்பத்திக் குறைவால் இரத்தக்கசிவு உண்டாகும். ஃபைப்ரினோஜன்குறைவு, பிறவிக் குறைபாட்டா லோ ஃபைப்ரினோஜன் அதிகமாக அழிவதாலோ வரலாம். இரத்தக்குழாயினுள் இரத்த உறை பரவல். திராம் பின், ஃபைபிரினோஜன், பிளாஸ்மின் ஆகியவற்றின் அளவிலும், திறனிலும் குறையிருந்தால் இரத்தக் குழாயினுள் ஆங்காங்கே இரத்தம் உறைந்து, இரத்தத்தில் இப்பொருள்களின் அளவு குறைந்து கசிவு வரலாம். அதனால் இரத்த உறைவு தடுப்பிகள் (anticoagulants) திராம்பினைத் திறன் குறையச் செய்து, ஃபைபிரி னோஜனோடு வினைபுரிய வீடாமல் தடுப்பதால் இரத்தக்கசிவு வரும். உடனே இம்மருந்துகள் கொடுப்பதை நிறுத்தி புரோட்டமின் சல்ஃபேட் மருந்தைச் சிரை மூலம் செலுத்தினால் இரத்தக் கசிவு நிற்கும். ஏதாவதொரு உறைபொருளுக்கு எதிர்ப்பொருள் (antibody) இரத்தத்திலிருந்தாலும் இரத்தக்கசிவு ஏற்படும். இந்நோய் திடீரென மறையலாம் அல்லது நீண்ட காலமிருக்கலாம். காரணியைச் சிரை வழிச் செலுத்துவதாலோ ஸ்டீராய்டு மருந்து கொடுப் பதாலோ பலன் கிட்டுவதில்லை. ஆ. வாசுகிநாதன் Hongkong, 1984; George, w. Thorn, Raymond, D Adams et al, Harrison's Princples of Internal Medi- cine, Eighth Edition, McGraw Hill Kogakusha Ltd., Blakiston publication, New Delhi, 1977; Arthur, C. Guyton, Text Book of Medical Physiology, Fifth Edition,W.B. Saunders Company, London, 1979. இரத்தக் கசையிழையுயிரிகள் மனிதருக்கும் மனிதரால் வளர்க்கப்படும் விலங்கு களுக்கும் ஏற்படும் சில கடுமையான நோய்களுக்கு இரத்தக் கசையிழையுரிகள் (blood flagellates ) காரண மாக உள்ளன: இவை யாவும் ஒட்டுண்ணிகள்; இரத்தக் கசையிழையுயிரிகள், தொகுதி புரோட்டோ சோவா, வகுப்பு மாஸ்ட்டிகோஃபோரா, வரிசை புரோட்டோமொனாடினா, குடும்பம் டிரிப்பனசோ மேட்டிடேயில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவை பல உருத்தன்மை (polymorphiam) பெற்றுள்ளன. ஓர் உயிரி தன் சூழ்நிலைக்கும், வாழ் நிலைக்கும் ஏற்பக் கீழ்க்காணும் நான்கு உருவங்களில் ஒன்றை மேற்கொள்கிறது. வட்ட 1. லீஷ் மேனிய உருவம் வட்ட அல்லது நீள் உடலின் மையத்தில் நீயுக்ளியசும், அதற்கு முன்னால் கைனட்டோபிளாஸ்ட்டும் உள்ளன. 2. உருவம் இதற்கு நீண்டு லெப்ட்டோமோனாஸ் அ ஆ படம் 1. பலஉருத்தன்மை நூலோதி. John Macleod, Davidson's Principles and Practice of Medicine, Fourteenth Edition, ELBS, அ. லீஷ்மேனிய உருவம் லெப்ட்டோமோனாஸ் கிரித்தீடிய உருவம் ஈ, டிரிப்பனசோம உருவம் உருவம்