இரத்தக் கசையிழையுயிரிகள் 561
உட குறுகிய உடலும் உடலின் நடுப்பகுதியில் நியுக்ளிய சும், முன் பகுதியில் கைனட்டோபிளாஸ்ட்டும் அதி லிருந்து தொடங்கி முன்னோக்கிச் செல்லும் கசை யிழையும் உள்ளன. 3. கிரித்தீடிய உருவம்: இதன் நீண்டு குறுகிய உடலின் நடுப்பகுதியில் நியுக்ளியசும், முன்பகுதியில் கைனட்டோபிளாஸ்ட்டும் அதனுடன் இணைந்த கசையிழையும் உள்ளன. கசையிழை ஓர் அலைச்சவ்வினால் (undulating membrane) லுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4. டிரிப்பனசோம உருவம் இதற்கு நீண்டு, குறுகி, சற்று வளைந்த கூர் அரிவாள் போன்ற உருவுடைய உடலின் நடுப் பகுதியில் நியுக்ளியசும், பின்பகுதியில் கைனட்டோ பிளாஸ்ட்டும் அதிலிருந்து புறப்படும் கசையிழை முன்னோக்கிச் சென்று று முன்முனைக்கு அப்பால் நீட்டிக்கொண்டும் உள்ளன. கசையிழை உடல் முன் முனை வரை அலைச்சவ்வினால் உடலுடன் இணைந்துள்ளது. புடைய இவற்றின் வாழ்க்கைச்சுழற்சி பொதுவாக ஒரு முதுகெலும்புடைய விலங்கு, ஒரு முதுகெலும்பற்ற விலங்கு ஆகிய இரண்டு ஓம்புயிரிகளின் உடல்களில் நடைபெற்று முழுமையடைகிறது. முதுகெலும் ஓம்புயிரி முதல்நிலை ஓம்புயிரியாகவும் (primary host) முதுகெலும்பற்றது இடைநிலை ஓம்புயிரியாகவும் (intermediate host) கருதப் படுகின்றன. முதல்நிலை இந்த ஒட்டுண்ணிகள் ஓம்புயிரியில் எந்த உருவம் பெற்றுள்ளனவோ அதன் அடிப்படையில்தான் இனப்பெயர்கள் சூட்டப்படுகின் றன. இவை தொடக்கத்தில், இரத்தத்தை உறிஞ்சி வாழும் பூச்சிகளின் உடலில் மட்டும் வாழ்ந்திருந்து பின்னர் முதுகெலும்புடையவற்றின் இரத்தத்தில் வாழும் தன்மை பெற்றிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. டிரிப்பனசோமேட்டிடே குடும்பத்தில் டிரிப்பன சோமா, லீஷ்மேனியா, கிரித்தீடியா, லெப்ட்டோ மோனாஸ், ஹெர்ப்பட்டோமோனாஸ், ஃபைட்டோ மோனாஸ் போன்ற பல இனங்கள் உள்ளன. டிரிப் பனசோமா, லீஷ்மேனியா ஆகிய இரண்டும் மனிதரில் நோய் தோற்றுவிக்கக் கூடியன. அதனால் இவை மக்கள் நலவாழ்விலும் மருத்துவத்திலும் முக்கியத் துவம் பெற்றன. . டிரிப்பனசோமா டிரிப்பனசோமா கேம்பியன்சே. நீண்ட, குறுகிய, தட்டையான, நிறமற்ற ஒரு செல் உடலையுடையது. இருமுனைகளும் நுனிநோக்கிச் சிறுத்துள்ளன. முன் முனை சிறுத்துக் கூர்மையாகவுள்ளது; நீளவாட்டத் தில் சற்றுத் திருகப்பட்டுள்ளது. நீளம் 10 முதல் 40 மைக்ரானும் அகலம் 3 முதல் 5 மைக்ரானும் ஆகும். உடலின் நடுப்பகுதியில் நியுக்ளியசு, பின்முனைக்கு அருகில் அடித்துகள் (basal body), மருங்கு அடித் அ.க.4-36 இரத்தக் கசையிழையுயிரிகள் 561 துகள் (parabasal body), இணைப்பு இழை (rhizo- plast) ஆகியவை கொண்ட கைனட்டோபிளாஸ்ட்டும் உள்ளன. அடித்துகளிலிருந்து தொடங்கும் கசை யிழை முன்னோக்கிச் சென்று முன்முனைக்கு முன்னா லும் நீட்டிக்கொண்டுள்ளது. முன்முனை வரையிலும் கசையிழை ஓர் அலைச்சவ்வினால் உடலுடன் இணைக்கப்பட்டுள்ளது. மனித இரத்தப் பிளாஸ்மா வில் வாழும் இந்த நுண்ணுயிரி அலைச்சவ்வினை அசைத்து இட ப்பெயர்ச்சி செய்கிறது. பிளாஸ்மா விலிருந்து தனக்குத் தேவையான சர்க்கரை ஊட்டப் பொருளைச் சவ்வூடுபரவல் முறையால் உட்சுவர் கிறது. கழிவுப் பொருள்கள் ஊடுபரவு முறையால் வெளியேறுகின்றன. வாய், கழிவுநீக்கத்துளை எதுவும் இந்நுண்ணுயிரிக்கு இல்லை. டிரப்பனசோமிய நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின் இரத்தப்பிளாஸ்மாவில், நோயின் தொடக்ககாலத்தில், இவ்வொட்டுண்ணிகளைக் காண லாம். பின்னர் இவை மூளைத்திரவத்தை (cerebros- pinal fluid) அடைகின்றன. ஒட்டுண்ணிகள் இரத்தத்தி லிருக்கும் காலத்தில் கேம்பியக்காய்ச்சல் என்னும் முறைக்காய்ச்சல் ஏற்படுகிறது; மூளைத்திரவத்தை அடைந்த பின்னர் நரம்புசார் நோய்க்குறிகள் தோன்றி அம்மனிதன் சோம்பலுற்றுக் காணப்படு கிறான். அதனால் இந்நோயை ஆப்பிரிக்க உறக்க நோய் என்று கூறுவர். வாழ்க்கைச் சுழற்சி மனித உடலில். இரத்தத்திலுள்ள கசையிழை படம் 2. டிரிப்பனசோமா கேம்பியன்சே 2 மருங்கு அடித்துகள் 3. அடித்துகள் கசையிழை 5. அலைச்சவ்வு 1. நியுக்ளியஸ்