பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தக்கட்டி 563

ஆஸ்திரேலியா, ரஷ்யா போன்ற நாடுகளில் காணப் படுகிறது. மனித உடலில் லீஷ்மேனியா உருவத்தில் கீழ்த்தோவின் செல்களில் வாழ்ந்து தோலில் கொப் புளங்கள், புண்களைத் தோற்றுவிக்கின்றன. இதனைக் கீழைநாட்டுப்புண் என்றும் டெல்லிக்கொப்புளங்கள் என்றும் கூறுவர். இதன் இடைநிலை ஓம்புயிரியும் ஃபிளபட்டோமஸ் இனத்தைச் சேர்ந்த பூச்சியாகும். ஜெ.கௌ. நூலோதி. Ekambaranatha Iyer, M., A Manual of Zoology Part I, S. Viswanathan Publishers, Madras, 1973; Hymen, L.H., The Invertebrata: Pro- tozoa through ctehophora, McGraw-Hill Book Company, Ine. New York, 1940. இரத்தக்கட்டி தலையில் வெளிப்படையாகத் தெரியாமல் ஊமைக் காயங்கள் ஏற்பட்டால் மூளையிலுள்ள இரத்தக் குழாய்கள் சிதைவுற்று மூளையுள் இரத்தக்கட்டி (intracerebral hematoma) ஏற்படுகிறது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இரத்த நாளம் உடை வதால் பெரிய இரத்தக்கட்டி இரத்தக்கட்டி ஏற்படலாம். இது மூளையின் முன் பகுதியில்தான் அதிகமாகக் காணப் படும். ஆனால் பிள் மூளையிலும் (cerebellum), நடு மூளை, முகுளம் போன்ற பகுதிகளிலும் ஏற் படலாம். மூளையில் காயமேற்பட்டபின், மூளையின் வெண்பொருள் பகுதியில் (white matter) ஆக்சிஜன் குறைவாலோ கொழுப்பு நுண்கட்டிகளாலோ, பல சிறிய இரத்தக் கட்டிகள் ஏற்படுகின்றன. மூளையில் வெண்பொருள் பகுதியிலிருந்தாலும் கொழுப்பு நுண்கட்டிகள், சாம்பல் நிறப்பொருளிலேயே அதிக மாகக் காணப்படும். இக்கொழுப்பு நுண்கட்டிகள் எலும்பு முறிவு நிலையிலும் தீவிபத்துக்குப் பிறகும். அடித்தோல் கொழுப்பு சிதைவுறும் போதும், அரிவாள் இரத்தச் சோகையின் போதும், கல்லீரலில் கொழுப்பு மாற்றம் ஏற்படும் நிலையிலும், கணைய அழற்சியி லும் ஏற்படுவதாகும். இவை மூளையின் இரத்தத் தமனிகளையும் நுண்குழாய்களையும் அடைத்து விடுவதால் இரத்தம் தேங்கி நிற்பதால், ஆக்சிஜன் குறைவதால், இரத்தக் குழாய் உட்செல்களை அழிப் பதால் இரத்தப்புள்ளிகள் ஏற்படுகின்றன. நடு தலையில் அடிபடும்போது தலை மெனிஞ்சியல் தமனி போகும் குழிவழியாக உடையும் போது நடுமெனிஞ்சியல் தமனியில் காயமேற்பட்டு எப்பிடூரல் இரத்தக்கட்டு ஏற்படுகிறது. அத்துடன் நடுமெனிஞ்சியல் சிரையிலிருந்தும் இரத்தக்கசிவு அ.க.4-36அ இரத்தக்கட்டி 563 வரலாம். சிலசமயம் முன், பின் மெனிஞ்சியல் இரத்தக் குழாய்களிலிருந்தும் இரத்தக் கட்டி வரலாம். இந்த இரத்தக் கட்டி டூரா உறைக்கும் கபால ஓடுக்கு மிடையே காணப்படும். சுமார் 74-125 கிராம் இரத்த மிருக்கும். சப்டூரல் இரத்தக் கட்டியிலும், இரத்த அழுத்தத்தால் மூளையினுள் கசியும் இரத்தமும் இதே அளவாகும். மூளை அமுக்கப்படுவதாலும், இருப்பிடத்திலிருந்து நகர்த்தப்படுவதாலும், கீழ் நோக்கித்தள்ளப்படுவதாலும் இதனால் நடுமூளையில் இரத்தம் கசிவதாலும் நுரையீரலில் நீர்கட்டு வதாலும் நோயாளி இறக்க நேரிடலாம். தில் பரவாமல் எல்லா ஊமைக்காயங்களால் கபாலம் உடையாமல் சப் டூரல் இரத்தக்கட்டு ஏற்படும். எனினும் கபாலத்தை நேரடியாகத் தாக்குவதால் இது ஏற்படுவதில்லை. திடீரெனத் தலையை முன்னால் பின்னால் அசைப்ப தால், இணைக்கும் சிரைகள் உடைந்து இரத்தக் கட்டு ஏற்படலாம். தமனிகளிலிருந்து இரத்தம் கட்டுவது அரிது. திடீரென வரும் சப்டூரல் இரத்தக் கட்டில் இணைக்கும் சிரைகள் கிழிவதால் இரத்தம் வெகுவிரைவாகக் கட்டிவிடும். மேல்நடு சிரைக்குழிக் (superior saggittal sinus) கருகிலுள்ள சப்டூரல் இடத் ஏராளமான சிரைகள் செல்வதால் இரத்தக்கட்டிகளும் இதற்கு இணையாகவே இருக்கும். இந்த இரத்தக்கட்டி ஓரிடத்திலேயே தேங்கி நிற்பதன் காரணம் தெரியாது. சிலர், இரத்தக் கட்டி ஓரங்களில் மூளையால் ஏற்படும் அழுத்தத் தினால்தான் பரவாமலிருக்கிறதெனச் சொல்கிறார் கள். திடீரென ஏற்படும் இரத்தக் கட்டில் திசுக்கள் உருவாக ஏதும் சான்றுகளில்லை. அரக்கினாய் உறை கிழிந்தால் திசு உருவாக வழியில்லை. ஏனெ னில் அவ்விடத்திலிருந்துதான் திசு உருவாக்கம் ஆரம்பமாகியது. நாள்பட்ட சப்டூரல் இரத்தக்கட்டி யில் முதல் வாரத்திலிருந்து திசு உருவாக்கம் தொடங்கி இரண்டாவது வாரத்தில் தெளிவாகத் தெரியும். இந்த இரத்தக்கட்டு டூரா உறையிலிருந்து வரும் இரத்த நாளத்திசுக்களால் சுற்றப்பட்டுக் கீழிருக்கும் அரக்கினாய்டு உறையிலிருந்து பிரிக்கப் படுகிறது. உள், வெளி மெனிஞ்சியல் டூரா உறைகள் கிழி வதால் சப்டூரல் இரத்தக்கட்டு ஏற்படுகிறதெனச் சிலர் நம்புகின்றனர். எப்படியிருந்தாலும் அதைச் சுற்றியிருக்கும் இரத்தநாளத்திசுக்கள் இரத்த அணுக் கள் அழிவதால், இரத்தக் கட்டியில் அடர்த்தி கூடு வதால் செல்கின்றன. நாளத்திசுக்களுள் இதனால் இரத்தக்கட்டி பெரிதாகி விரிந்து உடை வதால் அதன் ஓரங்களில் இரத்தக்கசிவு ஏற்படும் இது மீண்டும் மீண்டும் ஏற்படுவதால் இந்த இரத்தச் கட்டு, சிறிது சிறிதாக வளர்ந்து பெரிதாகும். பல அவை அடிபட்டதாகச் சொல்ல நோயாளிகள் மாட்டார்கள். அறிகுறிகள் வெகு காலத்திற்குப்