பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/589

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தக்‌ கழிச்சல்‌ (சித்தமருத்துவம்‌) 565

இருக்கும். இரத்தப் புரதங்கள் குடலிலுள்ள பாக்ட் டீரியா ஃபுளோரா யூரியாவாக மாற்றப்படுவதாலும், சிறுநீரில் குறைவாக அவை வெளியேற்றம் செய்யப் படுவதாலும் இரத்த யூரியா நைட்ரஜன் அதிகரிக்கும். செரிமான உறுப்புகளில் எந்த இடத்தில் இரத்தக் கசிவு ஏற்பட்டாலும் இரத்தக் கழிச்சல் வரலாம். முக்கியமாகக் குடல் பகுதியில், வயிற்றுப் பகுதியில் இரத்தம் கசிந்தால் இரத்த வாந்தி ஏற்படும். மூல நோய், மூலக்குடல் வெடிப்பு (anal fissures), மூலக் குடல் புற இணைப்பு (anal fistulas), மூலக்குடல் அழற்சி, மூலக்குடல் புற்றுநோய், மூலக்குடல் புண், மலக்குடல் பெருங்குடல் புண், புற்றுநோய், மலக் குடல் சவ்வுத் தசை வளச்சி (rectal polyps), குடல் மெக்கலின் (diverticulae). பலவிழுது நோய்கள் விழுது ஆகியவற்றாலும் கல்லீரல் சிரையழுத்தம் அதிகமானாலும், கல்லீரல் காயங்களால் உருவாகும் இரத்தக்கட்டி பித்த நாளத்துள் உடைவதாலும் இரத்தக் கழிச்சல் ஏற்படும். விரல்கள் மூலம் பரிசோதித்தல், மூல ஆய்வி (anoscopy) மலக்குடல் ஆய்வி(procto sigmoidoscopy), பெருங்குடல் ஆய்வி (colonoscopy) மூலம் பரிசோதிக் கும் போது இரத்தம் கசியுமிடத்தை நேரடியாகப் பார்க்கலாம். காற்றுக் கலந்த பேரியம் எனிமா கொடுத்து எக்ஸ் கதிர் படம் எடுப்பதாலும்,மேல், கீழ்குடல் தமனி வரைபடங்கள் மூலமாகவும் இரத்தக் கசிவு இடத்தை அறியலாம். பரிசோதனையின் போது திசுக்கட்டிகள், புண்களிருந்தால் ஒரு சிறு பகுதியை வெட்டியெடுத்து (biopsy) ஆய்வதன் மூலம் புற்றுநோயைக் கண்டுபிடிக்கலாம். மல வளர்ப்புப் பரிசோதனை மூலம் நுண்ணுயிர் நோயை அறியலாம். மலத்தில் ஒட்டுண்ணிகளும் இருக்கின்றனவா எனக் கண்டறிய வேண்டும். இந்தக் கழிச்சலோடு இரத்த வாந்தியுமிருந்தால் வயிற்று அகநோக்கி (endoscopy) மூலம் வயிற்றிலும் புண், புற்றுநோய் இருக்கின்றனவா என ஆராய வேண்டும். நோயாளி அதிர்ச்சியிலிருந்தால் இரத்தக் கழிச் சல் நோயின் காரணங்களைப் பற்றி அறியுமுன் நோயாளிக்குப் பொருத்தமான இரத்தம், குளு ருக் கோஸ், உப்புக் கரைசல் நீர்களையும் தொடர்ந்து சிரையினுள் செலுத்தவேண்டும். பின் நோயாளியிட மிருந்து பெறப்படும் குறிப்புகளிலிருந்தும் நோயாளி யின் வயிறு, மலக்குடலை ஆய்வு செய்வதன் மூலமும் இரத்தக் கழிச்சலுக்கான காரணத்தைக் கண்டு பிடித்துத் தகுந்த சிகிச்சையளிக்க வேண்டும். குடல் தமனிவரை படங்கள் எடுக்கும்போது இரத்தம் கசி யுமிடத்தை அறிந்து அந்த இரத்த நாளங்களில் இரத்த நாளச் சுருக்கிகளைச் செலுத்தலாம். ஆ. வாசுகிநாதன் நூலோதி. George, W. Thorn, Raymond, D. Adams et, al., Harrison's Principles of Internal இரத்தக் கழிச்சல் (சித்தமருத்துவம்) 565 Medicine, Eighth Edition, Mcgraw-Hill Kogakusha Ltd, Hong-Kong, 1977; John Macleod, Davidson's Principles and Practice of Medicine, Fourteenth Edition, ELBS, Hongkong, 1984. இரத்தக் கழிச்சல் (சித்தமருத்துவம்) பொதுவாக, நுண்ணுயிர்களாலும், ஒட்டுயிர்களா லும், வேதி உறுத்திகளாலும் கழிச்சல் ஏற்படு கின்றது. இது சீதக்கழிச்சல், இரத்தக்கழிச்சல் என்று இரண்டு வகைப்படும். சீதக்கழிச்சலில் இரத்தம் மலத்துடன் கலந்தும், சிலவேளைகளில் இரத்தம் தனித்தும் கழியும். காரணங்கள், சைஜெல்லா இன நுண்ணுயிர்களே இரத்தக்கழிச்சல் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றன. ஒருவருக்கொருவர் மூலம் உண்டாகும். தொடர்பாலும், தூய்மைக்கேடான தொற்றக்கூடிய உணவு, தண்ணீர் இவற்றின் மூலமாகவும் நுண்ணுயிர் கள் குடல் உறுப்புகளில் தசை மண்டலத்திற்குள் புகுந்து விடுகின்றன. அங்கு அவை பன்மடங்காக இனப் பெருக்கம் அடைகின் றன. அக்கிருமிகள் குடல் உறுப்புக்களில் நச்சுப்பொருள்களை உற்பத்தி செய்வதுடன் திசுக்களில் அழற்சியையும் உண்டு பண்ணுகின்றன. இரத்தக்கழிச்சல் அதிகமாகக் குழந்தைகளையும் அரிதாகப் பெரியவர்களையும் பாதிக்கும். அறிகுறிகள். மலத்தில் இரத்தம் கலந்திருக்கும். பலம் கழியும்போது வயிற்றை இறுக்குகின்ற வலியும், ஆசனவாயில் கடுப்பும், எரிச்சலும் இருக்கும். மிகுதி யான காய்ச்சலும், மிகுத்த தாகமும் உண்டாகும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். நோயின் கடுமை காரணமாகக் குடல்உறுப்புகளில் துளைகள் ஏற்படும். பெருங்குடலிலும், சிலவேளைகளில் சிறுகுடலின் கீழ்ப்பகுதியிலும் அழற்சி, வீக்கம் இவை ஏற்படும். சளிச்சவ்வுகள் சிவந்து வீங்கி இரத்தக் கசிவு ஏற் படும். இரத்தக் கழிச்சல் உலகம் முழுதும் பரவக்கூடிய தொற்றுநோய் வகையைச் சேர்ந்தது. இது பொது வானிலையில் ஏற்படக்கூடிய வாக வெப்ப மண்டல நோய் வகையாகும். ஆனால் போதுமான சுகாதார வசதியில்லாத திருவிழா. கூட்டம் போன்ற இடங் களில் அதிக அளவில் மக்கள் கூடும்போது ஈக்கள் மூலம் நுண்ணுயிர்கள் தொற்றிப்பெரும் அளவில் கொள்ளை நோயாகப் பரவுகின்றது. தடுப்புமுறைகள், ஆரோக்கியமான சூழ்நிலைக்குச் சுகாதாரப் பராமரிப்பு மிகவும் அவசியமானதாகும்.