பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 இரத்தக்காசம்‌ (சித்த மருத்துவம்‌)

568 இரத்தக்காசம் (சித்த மருத்துவம்) காச்சிவேக் (coccivac) போன்ற உயிருள்ள முட்டைக் கூடுகள் கொண்ட நோய்த் தடுப்பு மருந்து களை வாய் வழியாக அளித்தலும் பயன் தரும். க.விஸ்வநாதன் நூலோதி. Gordon, R. F., Poultry Diseases, First Edition, The English Language Book Society and Bailliere Tindall, London, 1979; Hofstad, M. S., Calnek, B. W.. Helmboldt, C. F., Reid, W. M., and Yoder Jr, H. W., Diseases of Poultry, Seventh Edition, Iowa State University Press, Ames Iowa, USA 1978; Seneviratna, P., Diseases of Poultry, Second Edition, John Wright and Sons Ltd., Bristol, 1969. இரத்தக்காசம் (சித்த மருத்துவம்) இது மிகவும் பழங்கால நோயாகும். காசநோய் பற்றிப் பழங்காலக் கையெழுத்துப் படிகளில் எழுதப் பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும். காசநோய் நான்கு வகைப்படும் என்றாலும், கால் நடைகளை யும், மனிதர்களையும் பாதிக்கக் கூடிய வகைகளே முக்கியமானவையாகச் சொல்லப்பட்டுள்ளன. காச நோய் மனித உடலின் எல்லா உறுப்புகளிலும் தொற்றும் தன்மையுடையது. ஆனால் அதிகமாக நுரையீரலே பாதிக்கப்படுகின்றது. காசநோயானது நீளமான மெல்லிய, இரும்புக் கம்பி போன்ற மைகோ பேக்டிரியம் டூபர்குலோசிஸ் என்ற கிருமியினால் உண்டாகிறது. 1882 ஆம் ஆண்டு ராபர்ட் கோச் என்ற ஜெர்மானிய மருத்துவர் காசநோய்க் கிருமி களைக் கண்டுபிடித்தார். இந்தக் கிருமியானது குளிர்ந்த வானிலையில் மனித உடலுக்கு வெளியே நீண்டகாலம் உயிர் வாழும். ஆனால் சூரிய வெப்பம் தொற்றுத் தடைமருந்து இவற்றால் அழிந்துவிடும் தன்மை கொண்டது. காசநோயானது இருமல், தும்மல் மற்றும் பொது இடங்களில் சளி துப்புதல் போன்ற செயல்களால் எளிதாகப் பரவக் கூடியது. இது முனைப்பு இரத்தக்காசம், நாள்பட்ட இரத்தக்காசம் எனறு இரண்டு வகைப்படும். முனைப்பு இரத்தக்காசம். ஆரம்ப நாள்களில் இந்த வகையை ஆய்வுறுதி செய்வது கடினமாக இருக்கும். ஏனெனில் குறிகுணங்கள் மாறுபட்டிருக் கும். ஆனால் பொதுவாக உடல் எடை குறைதல், பசியின்மை (வலுவின்மை), ஊக்கக்கேடு ஆகியவை யும், சில வேளைகளில் வாந்தியும் உண்டாகும். நோயாளி இருமி இரத்தம் கலந்த சளியை வெளியே துப்புலார். சுவாசிக்கும்போது வித்தியாசமான ஒலிகள் கேட்கும். உடல் களைப்பும், இரவு நேர வியர்வையும் உண்டாகக் குளிர் காய்ச்சலால் துன்ப முற நேரிடும். நாள்பட்ட இரத்தக்காசம். கடுமையாக இருமுதல் இதன் பொதுவான குணங்குறியாகும். ஆரம்பத்தில் வறட்டு இருமல் தோன்றும். அதன் பயனாகப் பிசின் போன்ற சளிக்கட்டு வெளியாகும். கடினமான சுவாசமும், மார்பில் வலியும் ஏற்பட இரத்தவாந்தி உண்டாகும். மேலும் முனைப்பு இரத்தக்காசத்தில் சொல்லப்பட்ட குணங்குறிகளுடன், மிகுநாடித் துடிப்பு, அடிக்கடி நீர்க்கோவை, சளிக்காய்ச்சல் போன்ற தொல்லைகளும் ஏற்படலாம். இரத்தக்காசக் கோளாறுகள். நுரையீரல் சவ்வில் அழற்சி ஏற்படும். எதிர்பாராமல் நுரையீரலின் இயக்கம் வீழ்ச்சி அடையும். சில வேளைகளில் காச நோய்க் கிருமிகள் நாக்கு, தொண்டை ஆகிய மென்மையான உறுப்புகளில் புண்ணையும், குரல் வளையில் வீக்கத்தையும் உண்டு பண்ணும். நாள் பட்ட நோயால் பீடிக்கப்பட்டவர்கள், இருமி சளியை உள்ளே விழுங்கிவிடுவதால் குடல் உறுப்புகளிலும் காசநோய் தொற்றுகின்றது. இரைப்பையைத் தாக்கு வதால் வயிற்றில் வலி உண்டாகிறது. நாற்றமும் சீழும், சளியும் கலந்து இளகலாக மலம் கழியும். எலும்புகளிலும், மூட்டுகளிலும் ஏற்படும் பாதிப்பு மோசமான விளைவுகளை உண்டாக்கும். நோய் ஆய்வுறுதி வழிகள். நோயாளியின் மார்பு எக்ஸ்-கதிர்படப் பரிசோதனையின் மூலம் துரை யீரலில் சளி, சீழ்க்கட்டி இவற்றை உறுதி செய்தல். உமிழ்நீர் கலப்பில்லாமல் வெளியாகும் சளியை உருப்பெருக்கியின் மூலம் சோதித்துக் கண்டறிதல். சிவப்பு இரத்த உயிரணுக்களின் படிவு விகி தத்தைக் கணக்கிட்டுக் கண்டுபிடித்தல். மாண்டோ பரிசோதனை இவற்றின் மூலம் நோய் ஆய்வுறுதி செய்தல் என்பன. இது என்ட்ரோ குழல் மாத்திரைச் சோதனை. அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்படும் எளிய ஆற்றல் வாய்ந்த தொழில் நுட்ப முறையாகும். சுகாதாரப் பணி மையத்தின் இணை இயக்குநர் டாக்டர் ஜேக்கப் ஈபன் என்ற வல்லுநரின் திருத்தி யமைக்கப்பட்ட என்ட்ரோ குழல் மாத்திரைச் சோதனை இரத்தக்காச நோயை நுட்பமாக அறுதி யிடப் பெரிதும் துணை புரிகின்றது. சளி எதிர் மறையல்லாத காசநோயாளிகளாக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உணவு வகைகள். உணவு வகைகள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களை அளிப்பதுடன், வலிவையும் கொடுக்கின்றன. ரத்தக் காச நோய்க்குக் கீழ்க்காணும் உணவு வகைகள் மிகுந்த பயனைக் கொடுக்கின்றன.