இரத்தக் காமாகுளோபுலின் குறைவு 569
பால், பாலாடைக் கட்டிகள் இறைச்சி, மீன் வகை. பறவையின மாமிசம்,பயறு வகை புரதம், கால்சியம் புரதம், இரும்புச் சத்து வைட்டமின் 28. முட்டை புரதம் இரும்புச் சத்து. கீரைகள், பழங்கள் வைட்டமின் 'ஏ' ஆரஞ்சு, தக்காளி வைட்டமின் 'சி'. கோதுமை, ரொட்டி வகை, தானிய வகை மீன் எண்ணெய் வைட்டமின் 'பி'. வைட்டமின் ஏ,டி'. சித்த மருத்துவச் சிகிச்சை. இரத்தக் காசநோய்க் குச் சித்த மருத்துவத்தில் பல அரிய மருந்துகள் சொல் லப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் வருமாறு. செந்தூரங்கள். சயகுலாந்தகச் செந்தூரம். பூர்ணச் சந்திரோதயச் செந்தூரம். பற்பங்கள். முத்துப் பற்பம், முத்துச்சிப்பிப் பற்பம், நல்பவழப் பற்பம், சிருங்கிப் பற்பம், தங்கப்பற்பம். கறுப்பு வகைகள். தாளக் கறுப்பு, சிவனார் அமிர்தம். மாத்திரைகள். இம்பூறல் மாத்திரை, மகாவசந்தகு சுமாகரம், சஞ்சீவி மாத்திரை. இலேகியங்கள். இம்பூறல் இலேகியம், சரபுங்கவில் வாதி இலேகியம், திருப்பில் இரசா யனம். நெய் வகைகள், ஆடாதொடா நெய், தூதுவேளை நெய், வல்லாரை நெய். ப. சம்பங்கி நூலோதி. அ. கதிரேசன், காசநோய், தமிழ்ப் பல்கலைக் கழக மறுதோன்றி அச்சகம், தஞ்சாவூர். 1989; Formulary of Siddha Medicine, The Indian Medical practitioner's Co-operative Pharmacy and Stores Ltd., Madras, 1972. இரத்தக் காமாகுளோபுலின் குறைவு உயிர்வாழத் தேவையான நோய்த் தடுப்பாற்றல் சக்திக்குக் காமாகுளோபுலின் இன்றியமையாதது. இரத்தக் காமாகுளோபுலின் குறைவு 569 காமாகுளோபுலின் குறைவால் சில நோயாளிகள் பெரிய நோய்களால் அவதியுறுவர். காமாகுளோ புலின் குறைவு, தடுப்பாற்றலை உருவாக்கும் றொரு வகையாகிய T லிம்ஃபோசைட் செல்கள் குறைவோடு ஒன்று சேர்ந்தோ, தனித்தோ இருக்க வாம். முதன்மைக் காமாகுளோபுலின் குறைவில் காமா குளோபுலின் குறைவினால் B லிம்ஃபோசைட் குறைவு ஏற்படும். நோயாளிக்குக் காமாகுளோபுலின் இரத் தத்தில் இருந்தாலும் அவரிடம் தடுப்பாற்றலை உரு வாக்கும் திறன் இருப்பதில்லை. எனினும் செல்கள் மூலம் வரும் தடுப்பாற்றல் பொதுவாக எந்தவித மாற்றமின்றியிருக்கும். இந்நோயாளிகள் சீழ் உரு வாக்கும் நுண்கிருமி நோய்களால் விரைவிலேயே தாக்கப்படுவார்கள். இந்நோய், வாழ்க்கையின் வயதான காலத்தில் தானாக உருவாகக் கூடிய நோயாதலால் இந் நோயாளிகளை, பொதுவாகக் காமாகுளோபுலின் குறைவாக உள்ளவர்கள், குறைவின் அளவு மாறக் கூடியவர்கள், இந்த இருபிரிவிலும் சேராதவர்க ளெனப் பிரிக்கலாம். லிம்ஃபோசைட்கள் இரத்தத் தில் எப்போதும் இருக்குமெனச் சொல்லமுடியாது. சிலசமயம் T செல்களின் செயல்திறன் கூட மாற லாம். தாமே உருவாகும் இந்த முதன்மைக் காமா குளோபுலின் குறைவு பெர்னீசியல் சோகை, இரத்த மழிச் சோகை போன்ற நோய்களோடு இணைந்து காணப்படும். ஸ்புரு போன்ற கூட்டியமும் ஜியார் டியாசிஸ் போன்ற குடல் நோய்களும் இதன் பின் விளைவுகளாகும். கல்லீரல், நுரையீரல், தோல் போன்ற பகுதிகளில் சீழ் வைக்காத கட்டிகள் காணப்படும். காமாகுளோபுலின் வேலைகளைப் பொறுத்து அவற்றின் குறைவால் வரும் அறிகுறிகள் வேறுபடும். IgM குறைவால் மெனிங்கோகாக்கல் மெனிஞ்சைட் டிஸ் (meningococcal meningitis) நோயும், IgA குறை வால் சீரண உறுப்புகளிலும் நுரையீரல் சம்பந்தப் பட்ட நோய்கள் வரலாம். IgA குறைவால் கொழுப்புப் பொருள் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது குறை கிறது. 300 மி. கிராம்/கி. கி உடல் எடைவீதம் காமாகுளோபுலின் மருந்து ஊசியைப் போட்டால் காமாகுளோபுலின் குறைவால் மீண்டும் மீண்டும் சீழ் உருவாகும் நோய்களை வாராமல் தடுக்கலாம். காமாகுளோபுலின் இரத்தத்தில் 30 நாள்களேயிருப் பதால் மாதத்திற்கொரு முறை 100 மி.கி/கி.கி உடம்பு எடையில் தொடர்ந்து ஊசிபோடுவது நல்லது. குறைந்த அளவில் மருந்து கொடுப்பது பயன் தருவதில்லை. 6-9 மாத கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து IgG நஞ்சு வழியாகக் குழந்தைக்கு வருகிறது. குறை