பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தக்குழாய்‌ நோய்கள்‌ 573

sclerosis) போன்றவற்றில் வயதான காலத்தில் இரத்தக்குழாய்ச் சுவர்கள் சிதிலமடைவதால் நலிவு நோய் வருகிறது. கால்சியச். சத்து, இந்நார்களில் படிவதால் உறுதியாகிக் குழாய் போல் காணப்படும். பெரிய, நடுத்தர அளவு, இரத்தக்குழாய்களில் மட்டும் இந்நோய் வருவதால் இரத்தநாளப்புழை அளவில் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுவதில்லை. தமனிஉள் தடிப்பு (atherosclerosis). பெருந்தமனி யிலும் பெரியதமனிகளிலும் நடுத்தர அளவு தமனி கள் குறிப்பாக இதயத்தமனி, மூளைத் தமனிகளிலும் இந்நோய் ஏற்படும். வயதான காலத்தில் இரத்த அழுத்தம் மிகுந்திருந்தாலும் அல்லது இயல்பான இரத்த அழுத்தமாக இருந்தாலும் இது வரலாம். கூழ்மைக்காடு நோய், கொழுப்புப் பொருள்கள் தமனிகளில் படிவதாலும் பின்னர் அவை உறு யாகிக் கால்சியச்சத்துப் படிவதாலும் உண்டாகிறது. இதிலிருந்து இரத்தத்துகள் கட்டிகள் உண்டாகிப் பல இடங்களுக்கும் இரத்தம் வழியாகச் சென்று பின் விளைவுகளை ஏற்படுத்தும். கூழ்மைத் தடிப்பு அடைப்பு (atherosclerosis oblit- erans) குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், புகைபிடிப்பவர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் இந்நோய் ஏற்படலாம். அறிகுறிகள். அறிகுறிகள் முதலில் ஒரு காலில் தொடங்கும். இரத்தக்குறைவு ஏற்படுவதால் காலில் வலியெடுக்கும். நடக்கும்போது வலி மிகும். ஓய்வு எடுத்தால் குறைந்துவிடும். குறிப்பாக, கெண்டைக் கால் தசையில் வலியெடுப்பதால் நோயாளி துள்ளித் துள்ளி நடப்பார். காலை உயர்த்தும்போது வேதனை குறைந்தால் அது சிரையின் அடைப்பு எனக் கருத லாம். தமனி அடைப்பில், காலைக் கீழே தொங்க விடும்போதோ, ஊன்றும்போதோ வலி குறையும். இரத்தக்குறைவால் கால்கள் குளிர்ந்து, உலர்ந்து செதில் செதிலாகவும், தோலின் இழுப்புத்தன்மை குறைந்தும், முடி உதிர்ந்தும், நகங்கள் உடைந்தும், புண் உண்டாகியும், அழுகியும் (gangrene) காணப் படும். தமனிகளில் நோயிருந்தால் தமனிகளின் துடிப்பை உணர முடியாது. தமனி அடைபட்டி ருந்தால் அதிர்வு கேட்கும். நோய் ஆய்வு.எக்ஸ்கதிர் படத்தில் கால்சியச் சத்து படிந்திருத்தலைக் காணலாம். இரத்தக்குழாய்களில் கதிர்வீச்சு நீர் ஏற்றினால் எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என அறியலாம். மாற்று இரத்தச் சுற் றோட்டம் எந்த அளவுக்கு இருக்கிறது எனவும் அறியலாம். மருத்துவம். தமனி அடைப்புக் காரணத்தைப் பொறுத்து மருத்துவம் வேறுபடும். புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும். தடிப்பான துணியால் கால்களை மூட வேண்டும். படுக்கையில் காலை, தலை உயரத்தை விடச் சற்று மேலாக இருக்கும்படி வைக்க வேண்டும். இரத்தக்குழாய் நோய்கள் 573 பாதங்களையும், விரல்களையும்; தூய்மையாகக் கழுவிய பின் ஈரம் காய வைத்துப் படை வாராமலும் நுண்கிருமி நோய் வாராமலும் பாதுகாக்கவேண்டும். சிங்க் ஆக்சைடு, சாலிசிலிக் அமிலத் துகள்களை விரலிடுக்குகளில் வைக்கலாம். உடற்பயிற்சி செய்து இரத்தமாற்று வழிகள் உண்டாக்கலாம். இரத்தநாள் விரிவாக்கி மருந்துகள் கொடுத்தால் நோயில்லாத தமனிகள் விரிவடைந்து மாற்றுவழியில் போதிய அளவு இரத்தம் நோய்ப்பகுதிக்குக் கிட்டும். பரிவு நரம்பு மண்ட வத்தை வெட்டுவதால் (sympathectomy) கால் குளிர்ச்சியைத் தடுக்கலாம். ஆனால் இடைய யிடையே வரும் வேதனை குறைவ தில்லை. இதய வால்வு நோயிலும், நலிவு நோயிலும், இதயப்புற்று நோயிலும் இரத்தத்துகள் கட்டிகள் உருவாகி இரத்தம் வழியாக உடலின் பல பகுதி களுக்குச் செல்லும் போது இரத்தக் குழாய்களை அடைத்துவிடுகின்றன. பொதுவாக, பெருந்தமனி, இடுப்புத்தமனிகளாகப் பிரியுமிடமும் நடுக்கால் தமனியும் அடைபடும். இதனால் கால்கள் குளிர்ந்தும். சோகையுற்றும் காணப்படும். இரத்த நுண்துகள் சுட்டியை எடுத்துக் களைவதால் இதைக் குணப் படுத்தலாம். கூழ்மைத்தடிப்பு நோயும் தமனியூதலும். தமனி யூதலுக்கு முக்கியகாரணம் கூழ்மைத் தடிப்பு நோயா கும். வளையுத்தமனி ஊதலினால் இட மீருரும் மிடற்று நரம்பு (recurrent laryngeal nerve) அழுத்தப் படுவதால் நோயாளியின் ஒலி சற்றுக் கரகரப்பாகக் கேட்கும். இறங்கு பெருந்தமனியில் ஊதல் ஏற் பட்டால் வயிற்றுவலி, முதுகுவலி ஏற்படும். துடிக் கும் கட்டியும் காணப்படும். இக்கட்டி உடைந்தால் திடீரென மரணமும் விளையலாம். செயற்கை முறையில் பெருந்தமனி வைத்து ஊதிய பகுதியை அறுவை மூலம் அகற்றி நோயைக் குணப்படுத்தலாம். தய வகுவைத்தமனியூதல் (dissecting aneurysm of aorta). நலிவு நோயினால் தமனி நடுநார்களுக்கும், உள்நார்களுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டு இரத்தம் இதன் வழியாக ஒரு புதிய பாதையை உருவாக்கும். உறைகளுக்கிடையேயும் நுரையீரல் உறை களுக்கிடையேயும் இத்தமனி உடைவதால் நோயாளி இறக்க நேரிடும். கருவுற்றகாலத்திலும், மார்ஃபான் கூட்டியத்திலும் (syndrome) இது அதிகமாகக் காணப் படும். இந்நோயாளிகளுக்கு இரத்த அழுத்தம் அதிக மாக இருக்கும். இந்நோய் திடீரெனத் தீவிரமாக நெஞ்சுவலி ஏற்படும். இது கழுத்து, வயிறு,கால், முதுகு போன்ற பகுதிகளுக்குப் பரவி, வேலை செய்யும் போது அதிகரிக்கும். தண்டுவடத்திற்கு இரத்தம் கொடுக்கும் தமனிகளில் வகுவை பட்டால் நரம்பு மண்டல நோய்க்குரிய அறிகுறிகள் தென்படும். ஏற் .