பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தத்‌ குறையழுத்தம்‌ 577

அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.அறுவை முடிந்து 24 மணிநேரத்திற்குப் பிறகும் உறக்கம் நீடிப்பதால் குறுகிய காலம் வினைபுரியும் பென்சோயழப்பின் களைக் கொண்டு மயக்கத்தின் ஆரம்பத்தை ஏற் படுத்துவதைப் பற்றி ஆய்வுகள் நடந்துகொண்டிருக் கின்றன. எட்டோமிடேட்டும் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. மனத்தெளிவு, வலி நீக்க மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர். 2.5 மி.கி. ரூரோப்பெரிடா லும், 0.5 மி.கி. ஃபெனட்டானானலும் சிரைவழி யாகக் கொடுக்கப்படும்போது வலிநீக்கமும் உறக்கமும் ஏற்படுகின்றன. இம்மருந்துகளுடன் 65 விழுக்காடு நைட்ரஸ் ஆக்சைடையும், ஆக்சிஜனையும் பயன் படுத்தும்போது உணர்விழப்பு நீங்கி மனத்தெளிவு ஏற்படும். இம்முறை சில வகைப் புற அறுவை செய்ய வும், சில நோய் நிலைகளை ஆய்வுகள் மூலம் கண்ட றியவும் பயன்படுத்தப்படுகிறது. ஆ.வாசுகிநாதன் நூலோதி, துளசிமணி, ஆதித்தன், மருந்தியல், முதல் பதிப்பு, தமிழ்ப்பல்கலைக் கழக வெளியீடு, தஞ்சாவூர், 1983. இரத்தக்குழாய் விரிவாக்கிகள் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதன் மூலம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் பொருள் கள் இரத்தக்குழாய் விரிவாக்கிகள் (vasodilators) எனப்படும். இரத்தக்குழாயை விரிவாக்கும் பொருள்கள். வெப்பம் தோலில் உள்ள இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கிறது. கார்பன் டை ஆக்சைடு அழுத்த அதி கரிப்பு இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கிறது. ஹிஸ்டமின், ஒவ்வாமை மற்றும் உடனடி ஒவ்வாமை நிலைகளில் உடலில் உள்ள மாஸ்ட் செல்களிலிருந்து வெளியிடப்பட்டு இரத்தக்குறையழுத்தத்தை ஏற் படுத்துகிறது. அசெட்டைல் கோலின், அடினோசின் லாக்டிக் அமிலம் போன்ற வேதிப்பொருள்களும் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. மேலும், நைட்ரைட்டுகள் மற்றும் ஐசோப்ர னலின், நிலிட்ரின், ஐசோக்ரூப்ரின், ஹைட்ரசின், டை அசாக்சைடு, சோடியம் நைட்ரோபுரூசைடு, மினாக்சிடில், கேப்டாப்ரில் சைக்லான்ட்லேட், பிர சோசின், ஃபென்ட்டாலமைன் டைஹைட்ரோ எர்கோடாக்ஸின், டொல்சொலின் ஆகியவற்றாலும் இரத்தக்குழாய்கள் விரிவடைகின்றன. இரத்தக்குழாய் விரிவாக்கிகள் இயங்கும் விதம். சில மருந்துகள் இரத்தக்குழாய்களின் மீது நேரடியான அ.க.4-37 இரத்தத் குறையழுத்தம் 577 இயக்கத்தை ஏற்படுத்தி இரத்தக்குழாய்களை விரிவடையச் செய்கின்றன. எ-கா: ஹைட்ரசின் ஐசோப்ரனலின் போன்ற மருந்துகள் பீட்டா பரிவு ஏற்பிகளைத் தூண்டுவதன் மூலம் இயங்கு கின்றன. இரத்தக்குழாய் விரிவாக்கிகள் பயன்படுத்தப்படும் நோய் நிலைகள். இதயக் கணநேரக் கடுவலியான மார்பு முடக்கி நோய் (angina pectoris) காணும் பொழுது நைட்ரேட்டுகளே மிகவும் பலன் அளிக்கும் மருந்துகளாக உள்ளன. கிளிசரைல் ட்ரைநைட்ரேட் இந்நோய் மருத்துவத்தில் பயன்படும் முதன்மையான மருந்து ஆகும். ஹைட்ரசின் மற்றும் ப்ரசோசின் ஆகியவை மிகை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பயனுடைய மருந்துகளாகும். டை அசாக்சைடு மற்றும் சோடியம் நைட்ரோ புரூசைடு ஆகியவை மிகை இரத்த அழுத்த அவசர மருத்துவத்தில், முதன்மையான மருந்துகளாகப் பயன் படுகின்றன. பெருமூளை இரத்தக் குழாய் இரத்த ஓட்டக் குறைநிலையில் இரத்தக்குழாய் விரிவாக்கிகள் பெரு மூளை இரத்த ஓட்டத்தையும் நரம்புச் செல்களின் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிப்பதாகக் கண்டு அறியப்பட்டுள்ளது. புற இரத்தக்குழாய் நோய் நிலைகளில் டொல சொலின், ஃபென்ட்டாலமைன் ஆகிய மருந்துகள் பயனளிக்கக்கூடும். ST மு. துளசிமணி நூலோதி. துளசிமணி, மு. மற்றும் ஆதித்தன்,ச., மருந்தியல், முதற்பதிப்பு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு, குருகுல அச்சகம், வேதா ரண்யம், 1983; Avery, G.S., Drug Treatment, Second Edition, ADIS Press, London, 1980; Good- man, L.S. and Gilmen, The Pharmacological Basis of Therapeutics, Seventh Edition, Macmillan Publi- shing Co.. New York, 1985. இரத்தக்குறையழுத்தம் சராசரி மனிதனுடைய சுருக்கழுத்தம் சுமார் 100 முதல் 140 மிமீ பாதரசம் வரையும் விரிவழுத்தம் சுமார் 60 முதல் 90 மி.மீ. பாதரசம் வரையும் காணப் படும். உலக மக்கள்தொகையில், இரத்த அழுத்தம் 75 விழுக்காட்டினர்க்குச் சராசரி நிலையாகவும், 20 விழுக்காட்டினர்க்கு மிகையாகவும், விழுக் 5