பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 இரத்தக்‌ குறையழுத்தம்‌

578 இரத்தக் குறையழுத்தம் காட்டினர்க்கு குறைவாகவும் இருப்பதாகக்கணக் கிடப்பட்டுள்ளது. எவ்வளவு அழுத்தம் இருந்தால் இரத்தக் குறையழுத்தம் (hypotension) இருக்கிறது என்பது பற்றிய ஒருமித்த கருத்து இன்னும் ஏற் படவில்லை. இருப்பினும், சுருக்கழுத்தம் 90 மி.மி. (பா.) க்குக் கீழாக இருப்பின் இரத்தக் குறையழுத் தம் இருப்பதாக உணரலாம். சிலருக்கு நிலையான இரத்தக் குறையழுத்தம் காணப்பட்டாலும் எந்த நோய் அறிகுறியும் தென்படாமல் நல்வாழ்வுடன் இருக்கலாம். மேலும், இரத்தக் குறையழுத்தமுடை யவர் மிக நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டவர் களாவர் என்றும் கருதப்படுகிறது. மாறாக, இரத்த ஓட்ட மண்டல அயர்வு ஒத்திசைவு அறிகுறிகளில் இரத்தக் குறையழுத்தம் ஒரு முக்கியமான அறிகுறி யாகும். இதையறிந்து, குறித்த நேரத்தில் மருத்துவம் அளிக்காவிடில் மரணம் தவிர்க்க இயலாது. மேலும், அதிக நேரம் நின்று கொண்டே பணி செய்வோரி டத்து இரத்தக் குறையழுத்தம் காணப்படுவதுடன் பல பின் விளைவுகளும் ஏற்படும். இரத்தக் குறையழுத்த நிலையைத் திடீர் இரத்தக் குறையழுத்தம், நீட்டித்த இரத்தக் குறையழுத்தம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். திடீர் இரத்தக் குறையழுத்தம். இதய வெளிப்பாடு, இதயத்தசை இயக்கநிலை, நரம்பியக்கத்திற்குக் கட்டு பட்ட வேசோ மோட்டார் டோன் (vaso motor tone ஆகியவை தமனியின் இரத்த அழுத்தத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றின் இயக்கங்கள் குறை வானால் இரத்தக் குறையழுத்தம் ஏற்படும். இத னால், பொது இரத்த ஓட்டம் குறைந்து, திசுக் களுக்கு வேண்டிய இரத்தம் இல்லாமையால், உட லின் มล பாகங்களின் செல்களில் இயக்கநிலை குறைந்து காணப்படும். இந்நிலையைத்தான் இரத்த ஓட்ட மண்டல அயர்வு (circulatory failure) எனக் குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் இரத்தக் குறை யழுத்தமும், மற்றும் பல ஒத்திசைவு அறிகுறிகளும் உண்டாகும். இதற்கு விரைவில் மருத்துவம் அளிக்கா விடில், பல பகுதிகள் பழுதடைந்து, நிலையான இரத்த ஓட்ட மண்டல அயர்வு ஏற்பட்டு, மரணத் தின் முன்னோடி நிலையாகிவிடும். காரணங்கள் இது உடலி ஹைபோவோலிமியா (hypovolemia). லுள்ள நீர் இழப்பு நிலை, வாந்திபேதி, சீதபேதி போன்றவற்றாலோ, நீரிழிவு நோயினாலோ, சிறு நீர்ப்பெருக்கிகளை உட்கொள்ளுதலாலோ, தீப்புண் ணினாலோ, அதிக வியர்வையாலோ, இரத்த வாந்தி, மூக்கில் இரத்தம் வடிதல், சளியில் இரத்தம், மலத்தில் இரத்தம் முதலியவற்றாலோ ஏற்படும். உடலி லுள்ள நீர் இருப்பு நிலை: எலும்பு முறிவு, வயிற்றில் நீர், குடல் அடைப்பு, நுரையீரல் மேலுறை யிடையே இரத்தக் கசிவு முதலியவற்றாலும் ஏற் படும். இதய இயக்கநிலைக் குறைபாடு. இது மாரடைப்பு நோய், இலயமற்ற துடிப்புகள், இதய இயக்க அயர்வு முதலியவற்றால் ஏற்படும். இரத்த ஓட்ட மண்டல அடைப்பு நிலை. இது நுரை யீரல் அழற்சியாலோ, நுரையீரல் மேலுறையிடையே அதிக அழுத்தக் காற்று நிலை ஏற்படுவதாலோ (ten- sion pneumothorax), இதய மேலுறையிடையே நீர் சேர்ந்து அழுத்தும் நிலை (cardiac tamponade) ஏற் படுவதாலோ, வகுவைத்தமனி யூதல் (dissecting aorta aneurysm ) என்னும் நோயினாலோ ஏற்படும். கிராம் நெகட்டிவ் செப்டிசிமியா (gram negative septicemia) அனாபிவாக்ளிஸ் என்ற திடீர் ஒவ்வாமை ஆக்சிஜன் குறைநிலை (anoxia), அடிசன் நோய் தைராய்டுநீர் குறைநோய் ஆகிய காரணங்களால் இரத்தக் குறையழுத்தமும் அதைச் சார்ந்த இரத்த ஓட்ட மண்டல அயர்வின் அறிகுறிகளும் ஏற்படும். நோய்க்குத் தக்கவாறு, அதன் அறிகுறிகளும் மற்றும் பொது அறிகுறிகளும் சேர்ந்து காணப்படும். அவற்றை அறிந்து, விரைவில் சிகிச்சையை மேற் கொள்ளவேண்டும். சிகிச்சை முறைகள். இதய இரத்த வெளிப் பாட்டை அதிகரிக்கச் செய்து, திசுக்களுக்கு வேண் டிய இரத்தத்தை அனுப்புதலும், நோய்க் கார ணத்தை அறிய முயல்வதும் நலமளிக்கும். பொதுவான முறைகள். இரத்தம், பிளாஸ்மா, குளூகோஸ், தாதுஉப்புச் சேர்ந்த நீர்க்கரைசல் முதலியவற்றைச் சிரைமூலம் விரைவாகக் செலுத்த வேண்டும். மைபண்டரமின், டோபமைன், நார்அட்ரினலின் கார்ட்டிகோ ஸ்டீராய்டு ஆகிய மருந்துகள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இதய இயக்க அயர்வு காணப்படின், டிஜிடாலிஸ் போன்ற மருந்து கள் தேவைப்படும். இலயமற்ற துடிப்பாக இருந் தால், அதற்குரிய மருந்துகளைப் பயன்படுத்த வேண் டும். இறுதியாக, நோய்க்காரணங்களை அறிந்து அவற்றிற்கும் மருத்துவமளிக்கவேண்டும். நீட்டித்த இரத்தக் குறையழுத்தம் மக்கள்தொகையில் ஒரு சிலருக்குச் சுருக்கழுத்தம் 90 மி.மி. பாதரசம் ஆகவோ அல்லது குறைந்தோ காணப்படும். அவர்களிடம் சோம்பல், களைப்பு, விரைவில் சோர்வடைதல், மயக்கநிலை முதலிய அறி குறிகள் தென்படும். இரத்தக் குறையழுத்தத்தால் மூளை, தசைகள், இதயம் முதலிய பல பாகங்களுக்கு இரத்த ஓட்டம் குறைவாகவே கிடைக்கும். இதனால் திசுக்களுக்கு வேண்டிய ஆக்சிஜன் மற்றும் சத்துப்