பக்கம்:அறிவியல் களஞ்சியம் 4.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தக்‌ குறையழுத்தம்‌ 579

பொருள்கள் குறைந்த அளவில் கிடைப்பதால் திசுக் களின் இயக்கநிலை குறைவாகவே இருக்கும். மேலும், இதய இரத்த வெளிப்பாடு குறைவதால் நீட்டித்த இரத்தக் குறையழுத்தம் ஏற்படும். சில அறிகுறிகள் தென்படும். மேலும், அட்ரினலிலிருந்து சுரக்கும் குளுகோகார்டிகாய்டு, மினர லோகார்டி காய்டு ஆகிய இரண்டும் குறைந்த அளவில் இருக் கும். இதனால் புறத்திசு நீரின் கன அளவு குறைந்த அளவில் இருக்கும். இரத்தக் குறையழுத்தத்திற்கு இதுவும் காரணமாகிறது. காரணங்கள் சத்துணவுக் குறைவினால் ஏற்படும் இரத்தச் சோகையும், உடல்நீர்க்குறைவும் கிருமிகளினால் ஏற் படும் காசநோய், டைபாய்டு சுரமும், மூலநோய், இரைப்பைப்புண், சிறுநீரக நோய்களினால் ஏற்படும் இரத்தக்கசிவும், இரத்தக் கசிவு, மிகைமாதவிடாயி னால் ஏற்படும் இரத்தக்கசிவும் வலிபோக்கும் மாத் திரை உண்பதால் ஏற்படும் இரத்தக் கசிவும் தடுக் கிதழ்க் குறுக்க நோய்கள், இதயத்தசை அழற்சி, இதயத்தசைத் தளர்ச்சி. மாரடைப்பு, இசைவற்ற துடிப்பு, இதய வால்வினால் உண்டாகும் இரத்தக் கசிவு போன்ற இதயநோய்களும் முக்கிய காரணங் களாகும். இவற்றைத்தவிர மிகை இரத்த அழுத்தநோய் எதிர்ப்பிகள், இசைவற்ற துடிப்பின் எதிர்ப்பிகள், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ் போன்ற மருந்து களும் காரணமாகலாம். மேலும், நுரையீரல் உள் ளெரிகை, மதுப்பழக்கம், அடிசன்ஸ் நோய்,மகோ தரம், அதிகவெப்பச் சுற்றுப்புறம், மறைந்து இருக் கும் புற்றுநோய்கள் ஆகிய நோய்களிலும் இரத்தக் குறையழுத்தம் காணப்படும். முதலில் நோய்க் காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நீக்க, மருத்துவம் செய்யவேண்டும். குறிப்பாக நீண்ட நாளாக இருக்கும் கிருமிநோய்கள், செரிமான மண்டல இரத்தக் கசிவு, மருந்துகளின் பக்க விளைவு களைப் பற்றிக் கவனம் செலுத்திக் காரணங்களைக் கண்டறியவேண்டும். ஆர்த்தோஸ்டாடிக் குறையழுத்தம் படுக்கை நிலையிலிருந்து நின்ற நிலையடையும் போது இரத்தக் குறையழுத்தம் தோன்றும். நின்ற நிலையில் இருக்கும்போது சிரைகளிலுள்ள இரத்தம் கால்களில் தேங்கிவிடும். இதனால் இதய இரத்த வெளிப்பாடு 20 விழுக்காடு குறைந்து இரத்தக் குறை யழுத்தம் இருக்கும். இவ்வாறு ஏற்படும் இரத்தக் குறையழுத்தத்தை ஆர்த்தோஸ்டேடிக் குறையழுத்தம் எனக் குறிப்பிடுவார்கள். கண்டறிதல். இரு கால்களையும் சேர்த்துக் கொண்டு கால் கெண்டைச் சதைகள் (calf muscles) அசையாமல் பார்த்துக் கொண்டு ஒரு நிமிட நேரம் நின்ற நிலையில் இருக்க வேண்டும். பிறகு இரத்த அ.க.4-37அ இரத்தக் குறையழுத்தம் 579 இரத்த அழுத்தமானியின் துணைகொண்டு அழுத்தத்தை அறியவேண்டும். அப்போது இரத்தக் குறையழுத்தம் காணப்படும். காரணங்கள். மிகை இரத்த அழுத்த எதிர்ப்புகள், சிறுநீர்ப்பெருக்கிகள் (diuretics) தூக்க மாத்திரைகள் போன்றவை காரணங்களாகும். நீண்ட நாளைய நோய்கள், எலும்பு முறிவி னால் ஏற்படும் நீண்ட நாள் படுக்கை நிலை, அறுவை மருத்துவத்திற்குப் பின்வரும் காலம் போன்ற வற்றினால் குறையழுத்தம் ஏற்படலாம். சுருண்டு பெருத்த சிரைகள் நீரிழிவு நோய்கள் ஆகியவையும் காரணங்களாகலாம். நாட்பட்ட ஆர்த்தோஸ்டாடிக் குறையழுத்தம், இந்த நிலை மாற்றக் குறையழுத்தம், பல விளைவுகளைத் தரவல்லது. குறையழுத்தம் ஏற்படும்போது மயக்க நிலையை அடைந்து, கீழே விழவும் அதனால் சிறிய காயங்கள் சாலையில் ஏற்படவும் வாய்ப்புண்டு. விபத்துகளுக்கும் ஆளாக நேரிடலாம். ஆகையால் நோயாளிகள் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். பயன்படுத்தும் மருந்துகளை மருத்துவ ஆலோசனை பெற்றுச் சாப்பிட வேண்டும். கால் களுக்கு இழுவை மேலுறை, வயிற்றில் பெல்ட் இவை அணிவதாலும் ஓரளவு இரத்தக் குறையழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். தற்காலிக ஆர்த்தோஸ்டாடிக் குறையழுத்தம். ஆடாது அசையாது நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் குறுகிய கால மயக்கநிலை யைச் சாதாரண மனிதர்களிடமே காணலாம். நீண்ட நாள் நோய்வாய்ப்பட்டிருந்து படுக்கையிலிருந்து நின்ற நிலையை அடைந்தால், மயக்கம் ஏற்படும். இவற்றிற்குக் காரணம் இரத்தக் குறையழுத்தமே. மிகை இரத்த அழுத்த எதிர்ப்பிகளாகிய சிறுநீர்ப் பெருக்கிகள், கேங்கிலியான் அடைப்பு மருந்துகள் நைட்ரோகிளிசரின் முதலியவற்றால் தற்காலிகக் குறையழுத்தம் ஏற்படும். நீடித்த ஆர்த்தோஸ்டாடிக் குறையழுத்தம். நோயாளி நின்ற நிலையடையும்போது இரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்து மயக்க நிலை உண்டாகும். நாடித்துடிப்பில் அதிக மாறுபாடு இருக்காது. ஆனால் அதிவேக, நாடித்துடிப்பு, இதய மின்னியக்க வரைபடத்தில் இசைவற்ற உதறல், எஸ்.டி. யில் பள்ளம் (S-T. depression) ஆகியவை இருக் கலாம். அலை மருத்துவம். உணவில் தினம் பத்து முதல் இருபது கிராம் வரை சோடியம் குளோரைடைச் சேர்க்க வேண்டும். ஃபுளூரோஹைட்ரோ கார்ட்டிசோன் 0.1 முதல் 0.5 மி.கி வரை தினமும் உட்கொள்ளலாம். இவை